குவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..

ஆனால் ஆண்கள் சிறுவர்கள் ஆக முடியாது. உடைந்த தேனீர் கோப்பை தன்னிச்சையாக மீண்டும் ஒன்றிணையாது.

|

நேரம் எப்போதும் ஒரே திசையில் செல்கிறது: முன்னோக்கி. சிறுவர்கள் ஆண்களாகலாம். ஆனால் ஆண்கள் சிறுவர்கள் ஆக முடியாது. உடைந்த தேனீர் கோப்பை தன்னிச்சையாக மீண்டும் ஒன்றிணையாது. பிரபஞ்சத்தின் இந்த கொடூரமான மற்றும் மாறக்கூடிய பண்பு "நேரத்தின் அம்புக்குறி" என்று அழைக்கப்படுகிறது.

குவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..

தெர்மோடைனமிக்ஸ்-ன் இரண்டாம் விதியின் விளைவாக அடிப்படையாக கொண்ட இது, காலம் செல்லும் போது முறைமைகள் எப்பொழுதும் காலாவதியாகிவிடும் என்று கூறுகிறது.ஆனால் சமீபத்தில், அமெரிக்க மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அம்புக்குறியை இணை அணு துகள்களுக்கு மட்டும் சற்று வளைத்துள்ளனர்.

"க்யூபிட்ஸ்"

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வில், ஆய்வாளர்கள் "க்யூபிட்ஸ்" என அழைக்கப்படும் இரண்டு குவாண்டம் துகள்களால் செய்யப்பட்ட ஒரு சிறிய குவாண்டம் கம்ப்யூட்டர்-ஐ பயன்படுத்தி, "நேரத்தின் அம்புக்குறி"யை உருவாக்கி கணக்கீடுகளை மேற்கொண்டனர்.

 குவாண்டம்

குவாண்டம்

இணை அணு அளவில், குவாண்டம் இயக்கவியல் தனி விதிகள் இல்லாமல், அலை செயல்பாடு எனும் கணித நிர்ணயத்தின் மூலம் அமைப்புகளின் நிலையை இயற்பியலாளர்கள் விவரித்தனர். இந்த செயல்பாடு அமைப்பின் அனைத்து சாத்தியமான நிலைகளின் வெளிப்பாடு ஆகும் . ஒரு துகளின் விஷயத்தில், அது சாத்தியமான அனைத்து இடங்களிலும் மற்றும் எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் ஏதேனும் ஒரு நிலையில் இருக்கும். பொதுவாக நேரம் கடந்து செல்லும் போது அலை செயல்பாடுகள் பரவுகின்றன. நீங்கள் 5 நிமிடங்கள் காத்திருப்பதை விட ஒரு மணி நேரம் காத்திருந்தால் அந்த துகளின் சாத்தியமான இடம் அதைவிட சற்று தொலைவில் இருக்க முடியும்.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

அலை செயல்பாடு பரப்புவதை பின்னோக்கி செயல்பட வைப்பது என்பது, கீழே சிந்திய பாலை மீண்டும் பாட்டிலில் நிரப்ப முயற்சிப்பது போல ஆகும். ஆனால் இந்த புதிய பரிசோதனையில் ஆராய்ச்சியாளர்கள் அதை தான் நிறைவேற்றி காட்டியுள்ளனர்

தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இருக்கலாம்

தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இருக்கலாம்

இல்லினாய்ஸில் உள்ள அர்கோன் தேசிய ஆய்வகத்தில் முன்னணி ஆராய்ச்சியாளராக பணியாற்றும் இயற்பியலாளர் இதுதொடர்பாக கூறுகையில், "இது தானாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒரு குரங்கிடம் தட்டச்சு மற்றும் நிறைய நேரத்தை கொடுத்தால், அது ஷேக்ஸ்பியர் என தட்டச்சு செய்யலாம் என கூறுவது போது தான் இது உள்ளது " என்று கூறுகிறார். இதை வேறுவிதமாக கூறவேண்டுமானால், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இருக்கலாம்.ஆனால் அதே அளவிற்கு சாத்தியமற்றதாகவும் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Physicists Reverse Time for Tiny Particles Inside a Quantum Computer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X