இருந்தது பூமியில்., தோன்றியது விண்வெளியில்- அடுத்த தலைமுறை இதுதான்: ஹோலோபோர்ட்டேஷன் என்றால் என்ன?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருத்துவர்களை ஹோலோபோர்ட்டேஷன் மூலம் ஒளிரச் செய்திருக்கிறது. ஒளிரச் செய்த மருத்துவர்கள் பூமியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியில் இருந்து விண்வெளியில் தோன்றிய நிபுணர்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருத்துவர்களை ஹோலோபோர்ட்டேஷன் மூலம் ஒளிரச் செய்திருக்கிறது. ஒளிரச் செய்த மருத்துவர்கள் பூமியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு மருத்து உதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய நாசா புதிய முறை ஒன்றை முயற்சி செய்திருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மென்பொருளை பயன்படுத்தி பொறியாளர்கள், விண்வெளியில் பூமியில் இருந்தபடியே முதல் ஹோலோபோர்ட்டேஷன் ஹேண்ட்ஷேக் என்று அழைக்கப்படும் முறையை செயல்படுத்தினர். இது விண்வெளி நிலையத்தில் டாக்டர்களை ஒளிரச் செய்த நிகழ்வாகும்.

ஹோலோலென்ஸ் கினெக்ட் கேமரா
Aexa மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆனது மைக்ரோசாஃப்ட் ஹோலோலென்ஸ் கினெக்ட் கேமராவை பயன்படுத்தி ஹோலோபோர்டெட் செய்துள்ளனர். இதில் நாசா நிபுணர் டாக்டர் ஜோசப் ஷ்கிமிட், Aexa ஏரோஸ்பேஸ் சிஇஓ ஃபெர்னான்டோ டி லா பெனா ல்லாகா மற்றும் அவர்களது குழுக்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் நடுவில் ஹோலோபோர்ட் மூலம் ஒளிர்ந்தனர். இவர்கள் அனைவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒளிர்ந்தபடியே விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் உடன் உரையாடல் நடத்தினர். இது இருவழி உரையாடலாக இருந்தது.

புதிய தகவல்தொடர்பு என்பதற்கு இது முன்னோடி
எதிர்கால புதிய தகவல்தொடர்பு என்பதற்கு இது முன்னோடியாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மனிதர்கள் பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்கிறார்கள், மீண்டும் பாதுகாப்பாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புகிறார்கள். எத்தனை தூரம் இருந்தாலும் மனித தொடர்புகளை ஏற்படுத்தும் புதிய வழிமுறை இது என ஷ்கிமிட் குறிப்பிட்டுள்ளார்.
ஹோலோபோர்ட்டேஷன் என்றால் என்ன
ஹோலோபோர்ட்டேஷன் என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம், நாசா தகவலின்படி, ஹோலோபோர்ட்டேஷன் என்பது ஒரு நிலையான தொழில்நுட்பமாகும். இது உயர்தர 3D மாதிரிகளை கட்டமைக்க உதவுகிறது. இந்த அம்சம் நேரடியாக மனிதர்களை 3டி முறையில் அனுப்ப அனுமதிக்கிறது. இந்த காட்சி ஹோலோ லென்ஸ் மூலம் ரியாலிட்டி டிஸ்ப்ளேக்கள் உடன் 3டி முறையில் தொலைநிலை பங்கேற்பாளர்களை பார்க்கவும் பேசவும் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது. அந்த நபர் உங்களுக்கு முன்னால் இருப்பது போன்ற உணர்வை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது. இந்த ஹோலோபோர்ட்டேஷன் பயன்பாடானது 2016 முதல் செயல்பட்டு வந்தாலும் விண்வெளி போன்ற தொலைதூர சூழலில் தொடர்பு கொள்வது இதுவே முதன்முறையாகும்.

தகவல் தொடர்பு தாமதம் என்ற சிக்கலுக்கு தீர்வு
நாம் அதாவது நமது உடலும் செயல்பாடும் இங்கு இருந்தாலும் நமது மனித உறுப்பு அம்சம் அசைவு தொடர்புகொள்பவர்களிடம் இருக்கும். பூமியில் இருந்து 250 மைல்கள் தொலைவு மேல் திசையில் இருக்கும் விண்வெளி நிலையம் 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. சந்திரனுக்கு சென்று மார்ஸ் பயணத்துக்கான திட்டங்கள் போன்ற தீவிரமான எதிர்கால பயணத்துக்கு இதுபோன்ற ஹோலோபோர்ட்டேஷன் முறை பெரும் தாக்கங்கலை ஏற்படுத்தக்கூடும் என நாசா குறிப்பிட்டுள்ளது. பூமிக்கும் பிற தொலைதூர பயணங்களுக்கும் இடையே தகவல் தொடர்பு தாமதம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கும் இதுபோன்ற பிரச்சனைகளில் இந்த தொழில்நுட்பம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் என்றால் என்ன
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர். தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
Pic Credits: Nasa


Click it and Unblock the Notifications








