செவ்வாயில் சிக்கிய பாம்பு தலை போன்ற உருவம்.. வியப்பில் விஞ்ஞானிகள்.. இது என்ன தெரியுமா?

|

செவ்வாய் கிரகம் தொடர்பான பல ஆராய்ச்சிகளை நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், மிகவும் ஆர்வமாக ஆராய்ந்து வருகிறது. இதில், செவ்வாய் கிரகம் பற்றி நமக்குத் தெரியாத பல புதிய தகவல்கள் மற்றும் பல விசித்திரமான தகவல்களை நாசா கண்டறிந்து, அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தின் வழியாகப் பூமி வாசிகளுக்கு அவற்றைத் தெரியப்படுத்தி வருகிறது.

பாம்பின் தலை போன்ற உருவகத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

பாம்பின் தலை போன்ற உருவகத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

அந்த வகையில் நாசாவின் பெர்ஸெவேரன்ஸ் ரோவர், இப்போது செவ்வாய் கிரகத்தில் பாம்பின் தலை போன்ற ஒரு உருவத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த பாம்பின் தலை போன்ற உருவகத்தை நாசா எப்படி கண்டுபிடித்தது, இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன? விஞ்ஞானிகளை இந்த புதிய கண்டுபிடிப்பு எப்படி ஆச்சரியப்பட வைத்தது என்பது போன்ற சுவாரசியமான தகவலை அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பெர்ஸெவேரன்ஸ் ரோவர் எடுத்த புகைப்படம்

பெர்ஸெவேரன்ஸ் ரோவர் எடுத்த புகைப்படம்

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் (Perseverance Rover) செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிப் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளைப் பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ரோவர், சமீபத்தில் ஒரு பாம்பின் தலை போன்ற வடிவிலான பாறையின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இதில் தான் விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்த சுவாரசியம் ஒளிந்துள்ளது.

பாம்பின் தலை போன்ற பாறை

பாம்பின் தலை போன்ற பாறை

Perseverance Rover பூமிக்கு அனுப்பிய பாம்பின் தலை போன்ற பாறை ஒரு பெரிய பாறையில் யாரோ ஒட்டவைத்துப் போல், சமநிலைப்படுத்தும் வகையில் அந்த பாறாங்கல்லுடன் தொடர்பில் உள்ளது. இதை ஒரு புதிரான கட்சியாக நாசா விண்வெளி ஆராய்ச்சி குழு காணுகிறது. இதற்கான விளக்கத்தையும், இந்த புகைப்படத்தையும் டாக்டர். ஜெஸ்ஸி கிறிஸ்டியன்சன் தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜூன் 12 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம்

ஜூன் 12 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம்

உயிர் அடையாளங்களின் அறிகுறிகளைக் கண்டறியும் நோக்கத்துடன் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் சிவப்புக் கோளில் மிதிக்கும் போது இந்த கண்டுபிடிப்பை ரோவர் கண்டுபிடித்துள்ளது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி அன்று Perseverance ரோவரின் MastCam எடுத்த சமீபத்திய புகைப்படத்தில், ரோவர் பாம்பின் தலையின் வடிவத்தைக் கொண்ட ஒரு பாறையைப் படம்பிடித்துள்ளது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (JPL) உள்ள ரோவரின் பணிக் குழுவின் கூற்றுப்படி,

32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.9,999 மட்டுமா? என்ன பிராண்ட் எப்போ வாங்கலாம்? இதோ முழு விபரம்32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.9,999 மட்டுமா? என்ன பிராண்ட் எப்போ வாங்கலாம்? இதோ முழு விபரம்

விஞ்ஞானி டாக்டர் ஜெஸ்ஸி கிறிஸ்டியன்ஸன் வெளியிட்ட ட்வீட்

இந்த புதிய படம் கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதிலிருந்து 466வது நாளில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. நாசா எக்ஸோப்ளானெட் காப்பகத்தின் வானியலாளர் மற்றும் திட்ட விஞ்ஞானி டாக்டர் ஜெஸ்ஸி கிறிஸ்டியன்ஸன் இந்த படத்தையும் பகிர்ந்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், யாரோ ஒரு பெரிய பாறையின் மீது ஒரு சிறிய பாறாங்கல்லைச் சமநிலைப்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டினார்.

பாம்பின் தலையில் அந்த அடுக்குகள் எவ்வாறு அரிக்கப்பட்டது?

பாம்பின் தலையில் அந்த அடுக்குகள் எவ்வாறு அரிக்கப்பட்டது?

"முதலில் எதைப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த பாம்பு தலை கொண்ட பேலன்சிங் ராக் எப்படி அந்த பாறை அலமாரிகளுடன் இணைந்து தனியாக நிற்கிறது. இது சூப்பர் கூல்", என்று அவர் இரண்டாவது ட்வீட்டில் கூறினார். "பாம்பின் தலையில் அந்த அடுக்குகள் எவ்வாறு அரிக்கப்பட்டன என்பதைப் பாருங்கள். அது எப்படி முப்பரிமாணமாக இருக்கிறது (sic)" என்றும் அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். இறுதியாக அவர் அதை 'தி லயன் கிங்' மீமாக மாற்றிவிட்டார்.

100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்

செவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியாகும் பரிடோலியா தூண்டும் படங்கள்

குறிப்பிடத்தக்க வகையில், நாசாவின் ரோவர் குழு செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட படங்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல, இது பார்வையாளர்களுக்கு பரிடோலியாவைத் (Pareidolia) தூண்டுகிறது. பரிடோலியா என்பது நமக்குப் பரிச்சயமில்லாத பொருள்கள் அல்லது தரவுகளில் அடையாளம் காணக்கூடிய வடிவங்களைக் காண உதவும் நிகழ்வாக வரையறுக்கப்படுகிறது. முன்னதாக மே மாதத்தில், நாசாவின் இரண்டாவது செயல்பாட்டு ரோவர் கியூரியாசிட்டி செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு படத்தை வெளியிட்டது.

செவ்வாய் பாறையின் பாரிய சுவரில் ஒரு மர்மமான கதவு

செவ்வாய் பாறையின் பாரிய சுவரில் ஒரு மர்மமான கதவு

இது பாறையின் பாரிய சுவரில் ஒரு மர்மமான கதவு போன்று காட்சியளித்தது. பெர்ஸெவேரன்ஸ் ரோவரை பொறுத்தவரை, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) செவ்வாய் கிரகத்தின் உள்ளடக்கங்களை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்குவதற்கு முன், பாறை மற்றும் மண் மாதிரிகளைச் சேகரிக்க சில வருடங்கள் உள்ளன. இந்த பணி 2028 இல் தொடங்கப்படும் மற்றும் மாதிரிகள் 2030 களின் முற்பகுதி அல்லது நடுப்பகுதியில் பூமிக்கு கொண்டு வரப்படும்.

Best Mobiles in India

English summary
Perseverance Rover Photographs Unusual Snake head Rock On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X