ஏலியன்களை பற்றியதொரு உண்மையை பகிரங்கமாக ஒற்றுக்கொண்ட அமெரிக்க அரசு!

|

ஆயிரமாயிரம் சமன்பாடுகள் இருந்தாலும், நூற்றுக்கணக்கான கான்பிரசி கோட்பாடுகள் இருந்தாலும் அறிவியலுக்கு அறிவியலாளர்களுக்கும் தேவையானது எல்லாம் ஒன்றே ஒன்று தான் - ஆதாரம்.

அறிவியலை நம்புகிறார்கள்

அறிவியலை நம்புகிறார்கள்

அறிவியல் உலகை பொறுத்தவரை ஆதாரம் ஒன்றிற்கு தான் மரியாதை. அதனால் தான் ஆண்டவனை நம்பாதவர்கள் கூட அறிவியலை நம்புகிறார்கள். ஆதாரம் எனும் ஒற்றை காரணத்தினாலேயே உலகில் பல விடயங்கள் மனித இனத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது - ஏலியன் எனப்படும் வேற்று கிரக வாசிகள் என்பதை நம்மில் பலரும் ஏற்றுக்கொள்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

 வெளிப்புறம் தோன்றிய ஜீவராசிகள்

வெளிப்புறம் தோன்றிய ஜீவராசிகள்

ஏலியன்களை அறிவியல் ரீதியாக எக்ஸ்டராடெரெஸ்ட்ரியல் என்கிற ஒரு பெயரின் (வார்த்தையின்) கீழும் குறிப்பிடலாம். பூமிக்கு வெளிப்புறம் தோன்றிய ஜீவராசிகள் என்று அர்த்தம். டார்க் ஈக்வேஷன் போன்ற சமன்பாடுகள் ஆனது இந்த அண்டத்தில் நாம் மட்டும் அல்ல, வேறு சில உயிரினங்களும் உள்ளன என்று கூற, மறுகையில் உள்ள பல சதியாலோசனை கோட்பாடுகள் ஆனது ஏலியன் எனப்படும் ஜீவராசிகள் ஆனது பெரும்பாலும் மனித இனத்தை விட மிகவும் முன்னேறிய நாகரிகங்களை கொண்டவைகளாக இருக்கலாம் என்று நம்புகிறது.

5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இ6 ஸ்மார்ட்போன்.!5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இ6 ஸ்மார்ட்போன்.!

விசித்திரமான விமானங்கள்

விசித்திரமான விமானங்கள்

சரி எது தான் உண்மை? ஏலியன்கள் இருப்பது உண்மைதானா? அல்லது அவ்வப்போது அமெரிக்க மாகாணங்களில் "மட்டும்" காட்சிப்படும் சில விசித்திரமான விமானங்கள் மற்றும் ஒளிகள் எல்லாமே மாயையா? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு அமெரிக்க அரசாங்கமே பதில் அளித்துள்ளது.

அமெரிக்க அரசு உறுதிப்படுத்தி உள்ளது

அமெரிக்க அரசு உறுதிப்படுத்தி உள்ளது

அதாவது - "ஆம் பல ஆண்டுகளாக நாங்கள் யுஎஃப்ஒக்களை (அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்) பற்றிவிசாரணை செய்து வருகிறோம்" என்று அமெரிக்க அரசு உறுதிப்படுத்தி உள்ளது. ஆக, இந்த வாக்குமூலத்தின் வாயிலாக ஏலியன்களின் இருப்பை அமெரிக்கா ஒற்றுக்கொள்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்?!

அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள்

அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள்

இந்த தகவலை அறிந்த சதி கோட்பாட்டாளர்கள் இப்போது மகிழ்ச்சியில் துள்ளி குதித்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் பென்டகன் முதன்முறையாக யுஎஃப்ஒக்களை பற்றி தனது அறிக்கையில் உரையாற்றியுள்ளது. இன்னும் சிறப்பாக, "அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள்" குறித்த சம்பவ அறிக்கைகள்சிலவற்றை இன்னும் விசாரிப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளது.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

தி நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த ஒரு பிரத்யேக அறிக்கையில், அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் த்ரேட் ஐடென்ட்டிபிகேஷன் ப்ரோகிராம் என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டு சார்ந்த ஒரு ரகசிய திட்டத்தை முந்தைய அரசாங்கம் கையாண்டதை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.

பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.!பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.!

அமெரிக்க பாதுகாப்பு துறை

அமெரிக்க பாதுகாப்பு துறை

ஆனால் அமெரிக்க பாதுகாப்பு துறையோ மேற்கூறப்பட்டுள்ள ரகசிய திட்டமானது கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே கைவிடப்பட்டுவிட்டது, இருந்தாலும் கூட அந்நிய விண்கலங்களை பற்றி எங்களது திணைக்களம் இன்னும் விசாரிக்கிறது என்று கூறி உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விமானங்களை அடையாளம் காண்பது பற்றி..

விமானங்களை அடையாளம் காண்பது பற்றி..

அதாவது அமெரிக்க நாட்டின் (வான்வெளி) இயக்க சூழலின் கீழ் அனைத்து வகையான விமானங்களையும் நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம், உடன் தாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு வெளிநாட்டு திறன்களை (பறக்கும் தட்டுகள்) கொண்ட விமானங்களை அடையாளம் காண்பது பற்றியும் பாதுகாப்புத் துறை எப்போதும் அக்கறை கொண்டுள்ளது" என்று அவர் கூறி உள்ளார்.

வெடிகுண்டை வெளிப்படுத்தி உள்ளனர்

வெடிகுண்டை வெளிப்படுத்தி உள்ளனர்

தி போஸ்ட்டின் படி, 90 களில் அமெரிக்காவில் காணப்பட்ட யுஎஃப்ஒக்களை பற்றி விசாரித்த முன்னாள் இங்கிலாந்து பத்திரிகையாளர் ஆன நிக் போப், பென்டகனின் இந்த பகிரங்கமான ஒப்புதலை "வெடிகுண்டை வெளிப்படுத்தி உள்ளனர்" என்று தனது கருத்தை பதிவு செய்து உள்ளார்.

ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலோ ஒன் விஷன்.!ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலோ ஒன் விஷன்.!

ஏரோஸ்பேஸ் த்ரேட் ஐடென்ட்டிபிகேஷன் ப்ரோகிராம்

ஏரோஸ்பேஸ் த்ரேட் ஐடென்ட்டிபிகேஷன் ப்ரோகிராம்

மேலும் அவர் "முந்தைய உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெளிவற்றவையாக இருந்தன, அதாவது, அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் த்ரேட் ஐடென்ட்டிபிகேஷன் ப்ரோகிராம் என்பது அடுத்த தலைமுறை விமானம், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற விமான அச்சுறுத்தல்களை பற்றியது என்கிற பிரமை உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த புதிய ஒப்புதல் அமெரிக்காவின் ஏலியன் தேடல் பற்றிய உண்மையை வெளிப்படுத்தி உள்ளது" என்றும் அவர் கூறி உள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் வெளிப்படுத்தியது

நியூயார்க் டைம்ஸ் வெளிப்படுத்தியது

ஏஏடிஐபி (AATIP) என்று அழைக்கப்படும் அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் த்ரேட் ஐடென்ட்டிபிகேஷன் ப்ரோகிராமின் இருப்பு ஆனது முதன்முதலில் 2017 இல் வெளிப்பட்டது என்பதும், அதை நியூயார்க் டைம்ஸ் வெளிப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது சார்ந்த தகவல்களை பென்டகன் வெளியிடுமா அல்லது அமெரிக்க தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகள் கிளம்புமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எது எபப்டியோ? - "ஏலியன்களா, அப்படி என்றால் என்ன?" என்று இதுநாள் வரை கேட்டு வந்த அமெரிக்கா, தற்போது அதிகாரபூர்வமான அறிக்கைகளை வெளியிட்டு உள்ளதால், அன்னிய வாழ்க்கைகளின் இருப்பை நம்பும் கோட்பாட்டாளர்கள் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளனர்.

Best Mobiles in India

English summary
pentagon-just-confirmed-it-used-to-investigate-ufo-reports-and-still-does-to-this-day : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X