பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது – நாசா தகவல்!

இந்த விண்கலம் வீனஸ் கிரகத்தை மையமாக வைத்துச் சூரியனை நோக்கிய தன்னுடைய பயணப் பாதையை சரி செய்து கொள்ளும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி இது நிகழும்.

|

சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆகஸ்ட் 12 ஆம் தேதி விண்கலம் ஒன்றை நாசா ஏவியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது – நாசா தகவல்

ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏவப்பட்ட இந்த பார்க்கர் சோலார் ஆய்வு (Parker Solar Probe) விண்கலம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பூமியிலிருந்து 4.6 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. மணிக்கு 62,764 கி.மீட்டர் வேகத்தில் இந்த விண்கலம் பயணிக்கிறது.

இந்த விண்கலம் வீனஸ் கிரகத்தை மையமாக வைத்துச் சூரியனை நோக்கிய தன்னுடைய பயணப் பாதையை சரி செய்து கொள்ளும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி இது நிகழும்.

கொரோனா (corona) என்று அழைக்கப்படும் சூரிய வளிமண்டலத்திற்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் விண்கலம் இது. இங்கிருந்து நிகழ்த்தப்படும் ஆய்வுகள் விண்வெளியில் நிலவும் காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்ள உதவும்.

பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது – நாசா தகவல்

இந்த ஆய்வுத்திட்டம் ஏற்கனவே பல சோதனைக் கட்டங்களைத் தாண்டி தற்போதைய நிலைக்கு வந்துள்ளது. முழு இலக்கை எட்டும் வகையில் அதனுடைய செயல்பாடுகள் திட்டமிட்ட வகையில் அமைந்துள்ளன.

பார்க்கர் சோலார் விண்கலத்தின் ஆண்டெனா கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் மிக அரிய அறிவியல் தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியும்.

உயரத்திற்கு ஏற்ப வேகத்தைக் கட்டுப்படுத்தும் விண்கலக் கருவிகள் ஒழுங்காக இயங்குகின்றதா என்பதைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் விண்கலத்தின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய முடியும்.அறிவியல் ஆய்வுத் தகவல்களைச் சேகரிக்க நான்கு கருவிக் கலன்கள் (instrument suites) இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் இயங்க வைத்துத் தகல்களைச் சேகரிக்கத் தயார்படுத்த வேண்டும்.

பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது – நாசா தகவல்

விண்கலத்தின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்காக 5 ஃபீல்டு (FIELDS antennas) ஆன்டெனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு இந்த ஆன்டெனாக்கள் நிலை நிறுத்தப்படும். இந்த ஆன்டெனாக்கள், விண்கலத்தில் உள்ள வெப்பத் தடுப்புக் கருவிகளின் (Thermal Protection System) முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.
பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது – நாசா தகவல்

விண்கலத்தின் காந்த மீட்டர் டவர் முழுவதுமாக நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த டவரில் மூன்று காந்த மீட்டர்கள், ஒரு சிறிய எலக்ட்ரிக் ஆன்டெனா ஆகியவை அடங்கியுள்ளன. விண்கலத்தில் உள்ள பிற கருவிகளைச் சோதித்துப் பார்த்தல் மற்றும் நிலை நிறுத்துதல் ஆகியவை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் இந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Parker Solar Probe Operating as Planned NASA Says: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X