பிரமிக்க வைக்கும் அரிய வகை டைனோசர் எலும்புகள்: எந்த இனத்தின் டைனோசர் என்று தெரியுமா? எங்கு கிடைத்தது தெரியுமா?

|

தென்மேற்கு சீனாவில் உள்ள பாலியான்டாலஜிஸ்டுகள் (Paleontologists) ஜுராசிக் காலத்திலிருந்த ஒரு புதைபடிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதைபடிமம் அப்படியே 70 சதவீதம் ஒரே இடத்தில் முழுமையாகக் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதைப்படிமம் கிட்டத்தட்ட 8 மீட்டர் நீளம் இருப்பதாக நம்பப்படும் டைனோசருக்கு சொந்தமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய டைனோசர் புதைபடிமம்

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய டைனோசர் புதைபடிமம்

இது 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிமம், மே மாத இறுதியில் தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லுஃபெங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதுமையான கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் மீதமுள்ள எலும்புகளுக்குச் சேதம் ஏற்படாமல் தடுக்க அவசர அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட முழுமையான 'லுஃபெங்கோசொரஸ்'

கிட்டத்தட்ட முழுமையான 'லுஃபெங்கோசொரஸ்'

இந்த பகுதி மண் அரிப்புக்கு ஆளாகும் என்பதால் இது விரைவாகச் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லுஃபெங் நகரத்தின் டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வாங் தாவோ கூறுகையில், ''கிட்டத்தட்ட முழுமையான 'லுஃபெங்கோசொரஸ்' (Lufengosaurus) என்ற டைனோசரின் முழுமையான எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் அரிதானது என்றும், இந்த கண்டுபிடிப்பு ஒரு 'தேசிய புதையல்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..

ஆரம்பக்கால ஜுராசிக் காலத்தில் வாழ்ந்தது

ஆரம்பக்கால ஜுராசிக் காலத்தில் வாழ்ந்தது

"இந்த முழுமையான டைனோசர் புதைபடிமமானது உலகம் முழுவதும் ஒரு அரிதான கண்டுபிடிப்பாகும். பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தின் அடிப்படையில், அதன் வால் மற்றும் தொடை எலும்புகளில், இது ஒரு வகையான மாபெரும் லுஃபெங்கோசொரஸ் என்று நாங்கள் நம்புகிறோம், இது ஆரம்பக்கால ஜுராசிக் காலத்தில் வாழ்ந்தது, "என்று அவர் கூறினார்.

மாசோஸ்பொண்டிலிட் (massospondylid) டைனோசர்களின் இனமா?

மாசோஸ்பொண்டிலிட் (massospondylid) டைனோசர்களின் இனமா?

லுஃபெங்கோசொரஸ் என்பது மாசோஸ்பொண்டிலிட் (massospondylid) டைனோசர்களின் ஒரு இனமாகும். இது ஆரம்பக்கால ஜுராசிக் காலத்தில் தென்மேற்கு சீனாவில் வளைந்துள்ளது என்று கூறப்படுகிறது. லுஃபெங்கோசரஸ் புதைபடிமத்தின் விலா எலும்பில் 195 மில்லியன் ஆண்டுகள் பழமையான கொலாஜன் புரதத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்தபோது 2017 ஆம் ஆண்டில் இந்த இனம் சர்வதேச தலைப்புச் செய்திகளைப் பிடித்தது.

சூரியனுக்கு குட்பை சொல்லும் சீனா- 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்ட செயற்கை சூரியன்- சூரியனை மிஞ்சும் வெப்பம்!சூரியனுக்கு குட்பை சொல்லும் சீனா- 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்ட செயற்கை சூரியன்- சூரியனை மிஞ்சும் வெப்பம்!

இந்த ஆண்டில் கிடைத்த மற்றொரு டைனோசர் எலும்பு

இந்த ஆண்டில் கிடைத்த மற்றொரு டைனோசர் எலும்பு

இந்த ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க டைனோசர் புதைபடிமம் இது மட்டுமல்ல, காரணம் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில், 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களுக்கும் நவீன பறவைகளுக்கும் இடையிலான ஒரு அரிய புதைபடிமத்தை ஆராய்ச்சியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பறவைக்கும் டைனோசருக்கும் இடையிலான ஒரு விசித்திரமான கலவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை வால் பறவை இனத்தின் டைனோசர்

இரட்டை வால் பறவை இனத்தின் டைனோசர்

சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த டைனோசர் புதைபடிமத்தை ஆராய்ந்த போது, அது ஒரு நீண்ட மற்றும் எலும்பு வால் கொண்ட ஒரு காக்கையின் அளவைக் கொண்ட ஒரு வகை பறவை இனத்தின் டைனோசர் என்று கண்டறியப்பட்டது. அதற்குப் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் அதன் உடல் வால் முடிவில் இரண்டு பிளேம்களால் ஆனா இறகுகளால் மூடப்பட்டிருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
Paleontologists discover nearly complete Lufengosaurus dinosaur skeleton in China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X