அம்பானி தீமில் பாகிஸ்தானியர்கள் கொண்டாடிய பார்ட்டி!
வெள்ளை மலர்கள், அலங்கார விளக்குகள் மற்றும் ஆடம்பர கற்கள் என இந்த பார்ட்டி பிரம்மாண்டமாக இருந்தது.
இந்தியாவில் நடைபெற்ற இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமள் திருமணமானது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடக வேகத்தின் காரணமாக தொலைதூரத்திற்கு பயணித்துள்ளது. ஆனால் எப்போதும் இல்லாதவகையில் கராச்சி மக்கள் இதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற வீக்எண்ட் பார்ட்டியில், அம்பானி திருமணம் தான் தீம் ஆக இருந்தது.

"டிசம்பர்ஸ்டன்" என கராச்சியில் அறியப்படும் இதன் காரணமாக கடந்த வார இறுதி நாட்கள் மிக பிரம்மாண்டமானதாக மற்றும் சிறப்பாக இருந்தது. இந்த நேரத்தில் கராச்சியில் நடைபெறும் பார்ட்டிகள், இம்முறை அம்பானியால் டிவிஸ்ட்டை சந்தித்துள்ளன. "டிசம்பர்ஸ்டன்" என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நகர்புற பாகிஸ்தான் மக்கள் பரபரப்பான உணர்வு மற்றும் நல்வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கும் போது, பருவநிலை மாற்றத்தின் மூலம் கொண்டுவரும் மனநிலை மற்றும் உடல்நிலை மாற்றம் ஆகும். குளுமையான காலநிலை, திருமண விழாக்கள் மற்றும் பாகிஸ்தான் குடியுரிமை இல்லாத வசதியானவர்களை குறுகிய காலத்திற்கு திருப்பி அனுப்புவது போன்றவை கலந்த ஒரு மூலம் இந்த சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.

அம்பானி வீட்டு திருமணம்
அம்பானி தீமில் நடைபெற்ற பார்ட்டி தான், தற்போது கராச்சியின் அதிசய நிகழ்வாக பேசப்படுகிறது.
"அம்பானி வீட்டு திருமணம் அனைவராலும் பேசப்பட்டது என்பதால் அதன் பல்ஸ் தெரிந்தது இந்த பார்டியின் தீம் ஆனாது " என தனது வருடாந்திர குளிர்கால நிகழ்வை பற்றி கூறுகிறார் முன்னாள் பாகிஸ்தான் மாடலும், தற்போது ஹாங்காங்-ல் குடியேறியவருமான ஆலியா ஜாய்தி.

புகைப்படங்கள்,வீடியோக்கள்
இவருடைய பார்ட்டிகள் எப்போதும் அழகிய பிரமாண்ட பங்களாவில் நகைச்சுவையான கருப்பொருளை கொண்டு அமையும். அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே நுழையமுடியும்.
அம்பானி வீட்டு திருமணம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பரவலாக பகிறப்பட்ட புகைப்படங்கள்,வீடியோக்கள் மற்றும் திருமண பிரமாணங்கள், இந்த ஆண்டு பாகிஸ்தானியர்களின் விருப்பமானதாக மாறிவிட்டது.

பேஷன் மற்றும் இசை
கலாச்சாரம், பாரம்பரியம், பேஷன் மற்றும் இசை ஆகியவற்றிற்கு எப்போதும் ஒரு உறவு உள்ளது. அம்பானி வீட்டு திருமணத்தை போன்றே, தற்போது பாகிஸ்தானிய திருமணங்களும் நடைபெறுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு, இந்த திருமண நேரம் தான் தங்களுக்கு விருப்பமான பாலிவுட் நட்சத்திரங்களை பார்க்க சரியான தருணம்.

100மில்லியன் டாலர் நிகழ்வு
இந்த பார்ட்டியை "100மில்லியன் டாலர் நிகழ்வு" என தொகுப்பாளர் குறிப்பிட்டார். இந்த பிரம்மாண்டமான விழாவிற்கு வந்த அனைவரும் அதற்கு ஏற்றவாறு ஜொலிஜொலிக்கும் புடவைகள், செர்வானி, குடும்ப நகைகள் என ஆடம்பரமாக வந்திருந்தனர். மாலை நான்கு மணியில் இருந்த நள்ளிரவு வரை 70களின் பிரபல பாலிவுட் டிஸ்கோ பாடல்களை 8 மணி நேரம் தெறிக்கவிட்டுள்ளனர்.

பிரமாண்டத்தை எப்போதும் பார்த்ததே இல்லை
இப்படித்தான் அம்பானி ஜோடிகளின் சிறப்பான நாளை மறுஉருவாக்கம் செய்துள்ளது கராச்சி.
டிசம்பர்ஸ்டன் இதுபோன்ற பிரமாண்டத்தை எப்போதும் பார்த்ததே இல்லை எனலாம்.


Click it and Unblock the Notifications