இந்தியா மீதான வெறியில், தீவிரவாதிகளுடன் சேர்ந்து பாகிஸ்தான் போடும் "பலே" நாடகம்.!

இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்க்கும் இடையிலேயான் தூரம் என்னவென்பதை நாம் அறிவோம்.

|

பாகிஸ்தான் ஏவுகணைகளின் வீச்சு என்னவென்பதை நாம் அறிந்திருந்தால், தற்போது நிலவும் விபரீதமான சூழ்நிலையை நாம் நன்கு உணர்ந்து கொள்வோம். கடந்த ஜனவரி மாதம், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அளவிலான ஏவுகணை சோதனை ஒன்றை பாகிஸ்தான் நிகழ்த்தியது.

இந்தியா மீதான வெறியில், தீவிரவாதிகளுடனான பாகிஸ்தானின் நாடகம்.!

சோதனைக்கு பின்னர் "இந்த ஏவுகணை எதிரிகளின் விரோத ரேடர்களை தோற்கடித்து, அதிக துல்லியத்துடன் பல இலக்குகளை அடையும் திறனைக் கொண்டுள்ளது" என்றும் பாகிஸ்தான் கூறியது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணையானது ஒரு மல்டிபில் இந்திபெண்டன்ட் ரீ-என்ட்ரிவெஹிக்கில் (Multiple Independent Re-entry Vehicle - MIRV) என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வெவ்வேறு இலக்குகளை கொண்ட பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஒற்றை ஏவுகணை.!

2,200 கிலோ மீட்டர் தூரம்

2,200 கிலோ மீட்டர் தூரம்

இராணுவத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, அந்த ஏவுகணை சுமார் 2,200 கிலோ மீட்டர் தூரம் என்ற அளவிலான வீச்சை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்க்கும் இடையிலேயான் தூரம் என்னவென்பதை நாம் அறிவோம்.

பாபர்-3

பாபர்-3

இந்தியாவை விட வேகமான பிராந்திய பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (BMD) சூழலை உருவாக்கி கொண்டுள்ள பாகிஸ்தான் அதே ஜனவரி மாதத்தில் 450கிமீ வீச்சை கொண்ட "பாபர்-3" என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை சோதனையையும் நிகழ்த்தியது.

கட்டுப்பாடற்ற அணுசக்தி ஆயுதங்கள்

கட்டுப்பாடற்ற அணுசக்தி ஆயுதங்கள்

இந்நிலைப்பாட்டில் கடந்த வாரம், பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான, ஷாஹித் காகான் அபாசி மீண்டும் தனது நாட்டின் கட்டுப்பாடற்ற அணுசக்தி ஆயுதங்கள் சார்ந்த விடயங்களை பற்றிய வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தீவிரவாதிகளால் திருடப்படும் விபரீதமான ஆபத்து

தீவிரவாதிகளால் திருடப்படும் விபரீதமான ஆபத்து

ஒரு வலுவான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் இயங்கும் பாகிஸ்தானின் குறுகிய தூர ஏவுகணை (இந்தியாவுடனான வழக்கமான மோதலில் பயன்படுத்தப்படும் ஏவுகணை) உட்பட நாட்டின் அணுசக்தி சொத்துக்கள் பற்றிய தந்திரோபாய விடயங்களை அபாசி அறிவித்திருப்பதால், அது தீவிரவாதிகளால் திருடப்படும் விபரீதமான ஆபத்து நிலவுகிறது.

ஒன்பது வெவ்வேறு இடங்களில்

ஒன்பது வெவ்வேறு இடங்களில்

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் (FAS) சமீபத்திய அறிக்கையின்படி, பாகிஸ்தானானது தனது அணு ஆயுதங்களை நாடு முழுவதும் ஒன்பது வெவ்வேறு இடங்களில் சேமித்து வைத்திருக்கிறது.

சேமிப்பு கிடங்குகளில்

சேமிப்பு கிடங்குகளில்

அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க அணுசக்தி ஆயுத நிபுணர் மற்றும் இணை ஆசிரியரான ஹான்ஸ் கிறிஸ்டென்சனின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் அணுவாயுதங்கள் "அறிக்கையில் கூறப்படும்" தளங்களின் சேமிப்பு கிடங்குகளில் இருப்பதாகவும், மேலும் இந்த தளங்கள் போர்க்களங்களைப் பயன்படுத்தும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளைக் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

அதிகம் சந்தேகிக்கப்படுகிறது

அதிகம் சந்தேகிக்கப்படுகிறது

ஒரு ட்ரம்ப் நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி"போர்க்களத்தில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட தந்திரோபாய அணுவாயுதங்கள் சார்ந்த வளர்ச்சி மீது அமெரிக்கா கவனம் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஆயுத அமைப்புகள் பயங்கரவாத திருட்டு உள்ளாக்கலாமென அதிகம் சந்தேகிக்கப்படுகிறது என்றும் அதன் விளைவாக அண்டை நாடுகளுடனான அணு ஆயுத போர் மூளலாம்".

குறிப்பிட்டு கூறமுடியவில்லை

குறிப்பிட்டு கூறமுடியவில்லை

இதுசார்ந்த மற்றொரு அறிக்கையானது, குறிப்பாக இஸ்லாமாபாத்தில் திறன் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையிலான ஆயுதங்களை பாகிஸ்தான் பலப்படுத்தி வருவதாகவும் ஆனால், எங்கு என்பதை குறிப்பிட்டு கூறமுடியவில்லை என்றும் தெரிவிக்கிறது.

வணிக செயற்கைக்கோள் படங்கள்

வணிக செயற்கைக்கோள் படங்கள்

"பாகிஸ்தான் அதன் அணு ஆயுதங்களை எங்கு தயாரிக்கும் அல்லது எங்கு சேமித்து வைக்கும் என்பது சார்ந்த நம்பகமான பொது தகவல் இல்லை. எனவே, அணுசக்தி திறன் கொண்ட ஆயுதம் வைத்திருக்கும் அமைப்புகளின் அணுவாயுதங்கள் எங்கு இருக்கக்கூடும் அல்லது எங்கே இருக்கலாம் என்ற சாத்தியக்கூறு கண்டறிய, வணிக செயற்கைக்கோள் படங்கள், நிபுணத்துவ ஆய்வுகள், உள்ளூர் செய்தி அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்" என்றும் அந்த அறிக்கை விவரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Pakistan's Nukes & Short Range Weapons To Be Used Against India Could Be Stolen By Terrorists. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X