ரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.!

|

நிலவின் தென் துருவத்தில் அதிவேகமாக தரையிறங்கியும், விக்ரம் லேண்டர் உடையாமல் இருக்கின்றது. மேலும், ரோவை இயக்க இஸ்ரோ மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இந்தியா இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி எட்ட பாகிஸ்தான் முதல்முறையாக வாழ்த்து தெரிவித்து ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

3 ஆய்வுகலன்கள்

3 ஆய்வுகலன்கள்

நிலன் தென்துருவத்தை ஆய்வு செய்ய உலகின் முதல் முறையாக இஸ்ரோ சந்திராயன்-2 திட்டம் திட்டத்தை அரங்கேற்றியது. மேலும், ஜிஎஸ்எல்வி-எம் கே 3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 ஆய்வுக்கலன்கள் அனுப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்தன. பிறகு ஆர்பிட்டரிலிருந்து, விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

கடைசியில் சிக்னல் கட்

கடைசியில் சிக்னல் கட்

நிலவின் தென் துருவத்தில், மான்சினஸ்-சி, சிம்பலீலியஸ்-என் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையே விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியில் கடந்த 7ம்தேதி அதிகாலை நடந்தது. அப்போது எதிர்பாரத விதமாக லேண்டர் விக்ரம் சிக்னல் கட்டானது. பிறகு லேண்டர் எங்கு இருக்கின்றது என்று கூட தெரியவில்லை. இதை இஸ்ரோ ஒருவாரத்தில் கண்டுபிடிப்பாக அறிவித்தது.

ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிப்பு

ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிப்பு

வெறும் 36 மணி நேரத்தில், சந்திராயன்-2 ஆர்பிட்டரில் உள்ள சக்தி வாய்ந்த கேமராக்களின் உதவியோடு விக்ரம் லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

லேண்டர் எந்த நிலையில் இருக்கின்றது என்று இஸ்ரோ தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றது.

சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.!

சரியான இடத்தில் தரையிறங்கியது

சரியான இடத்தில் தரையிறங்கியது

விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டிய இடத்தில் சரியான இடத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. மேலும், வேகமாக தரையிறங்கியும் லேண்டருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரோ கூறியுள்ளது. மேலும் ஆர்பிட்டர் எடுத்த படத்தின் படி லேண்டர் ஒரே பாகமாகத்தான் இருப்பது தெளிவாகியுள்ளது.

சிக்னல் மீட்டெக்கும் முயற்சி

சிக்னல் மீட்டெக்கும் முயற்சி

இந்நிலையில் விக்ரம் லேண்டரில் உள்ள சிக்னலை மீட்டெக்கும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சிக்னலை மீட்டு எடுக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஏன்னெற்றால், லேண்டரில் உள்ள ஏன்டானாக்கள் நிலவின் தரை பகுதியை நோக்கி இருக்கின்றதா இல்லை, ஆர்பிட்டரை நோக்கி இருக்கின்றதா என்பதை வைத்து தான் சொல்ல முடியும்.

இஸ்ரோவுக்கே கலாயா?பாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட தலதளபதி ரசிகர்கள்.!

 திட்டம்  தோல்வி இல்லை

திட்டம் தோல்வி இல்லை

லேண்டருடன் சிக்னல் மீட்கப்படாத பட்சத்தில் இந்த சந்திராயன்-2 திட்டம் தோல்வி ஆகாது என்று இஸ்ரோ கூறியுள்ளது. ஆர்பிட்டரின் செயல்பாட்டில் பின்னடைவு இல்லை. இந்த திட்டத்தில் 95 சதவீதம் ஆர்பிட்டரே பணிகளை மேற்கொள்ள உள்ளது.

7 ஆண்டு வாழ்நாள்

7 ஆண்டு வாழ்நாள்

ஆர்பிட்டர் வாழ் நாள் முன்பு ஓராண்டு என்று கூறப்பட்டது. ஆனால் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய 7 ஆண்டுக்கு தேவையான திரவ எரிபொருள் இருக்கின்றது என்று இஸ்ரோ கூறியுள்ளது.

விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் வெளியிடப்படாததற்குக் காரணம் இதுதான்!

துல்லியமான புகைப்படங்கள்

துல்லியமான புகைப்படங்கள்

ஆர்பிட்டரில் 8 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இவை நிலவில் உள்ள தண்ணீர், கனிம வள மூலக் கூறுகளை ஆய்வு செய்யும். ஆர்பிட்டர் கலனில் உள்ள ஹெச்டி கேமராக்கள் நிலவை துல்லியமாக படம் பிடிக்கும். இது இஸ்ரோவின் பெருமையை உலகறிய செய்யும்.

  இறுதி வாய்ப்பு

இறுதி வாய்ப்பு

சோலார் உதவியுடன் செயல்படும் லேண்டர் ஆயுட்காலம் 14 நாள். இதில் 4 நாள் முடிந்து விட்டது. மீதி 10 நாள் தான் இருக்கின்றது. லேண்டரில் இருந்து சிக்னலை மீட்டு எடுக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

32இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூ.10000 தான்!

முதல்முறையாக பாக். வாழ்த்து

முதல்முறையாக பாக். வாழ்த்து

சந்திராயன்-2 திட்டத்திற்கு பல்வேறு நாடுகளும் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அந்நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக இயக்கி வரலாற்று சிறப்பு மிக்க சாதனை இஸ்ரோ படைக்கும் என்றும் தெரிவித்துள்ளளார். மேலும், மங்கள்யான் திட்டத்தின் போதும் இவரே வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது தனிச்சிறப்பு.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pakistan congratulates ISRO on running Vikram Rovar : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X