சீனா பாகிஸ்தான் இணைந்து தயாரிக்கும் ஆளில்லா ஏவுகணை தாங்கி விமானம்!
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா ஏவுகணை தாங்கி விமானங்களை கூடுதலாக வாங்குவதற்காக பல ஆண்டுகளாக பாகிஸ்தான் முற்றுகையிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் காம்ப்ளக்ஸ் (பிஏசி) காம்ரா மற்றும் சீனாவின் ஏவியேஷன் இன்ஸ்டிடியூட் கார்ப்பரேஷன் (AVIC) உடைய ஒரு பிரிவான சீனாவின் செங்டு விமானக் கழகம் (சிஏசி) ஆகியவை இணைந்து, சீனாவில் வடிவமைக்கப்பட்ட 48 அடுத்த தலைமுறை ஆளில்லா உளவு விமானத்தை உற்பத்தி செய்யவுள்ளன.

இந்த ஆளில்லா ஏவுகணை தாங்கி விமானங்கள் மீடியம் ஏட்டிடூட் லாங் என்டியூரன்ஸ் மற்றும் விங் லாங் 2 தாக்கும் திறனை(Medium-Altitude Long-Endurance (UAE MALE) and strike-capable Wing Loong II strike-capable) கொண்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா ஏவுகணை தாங்கி விமானங்களை கூடுதலாக வாங்குவதற்காக பல ஆண்டுகளாக பாகிஸ்தான் முற்றுகையிட்டுள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் விமானப்படை தற்போது நான்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Caihong 4 (CH-4), அல்லது ரெயின்போ 4, ஆளில்லா விமானங்களை இயக்குகிறது. இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டால், சீனாவில் உருவாக்கப்பட்ட டர்போபிராப்ட்-ல் இயங்கும் ஆளில்லா விமானங்களுக்க மிகப்பெரிய வெளிநாட்டு ஆர்டர்களில் இது இருக்கும். இருப்பினும், ஒப்பந்தத்தின் மதிப்பைப் பற்றி எந்த விவரமும் வெளியாகாதநிலையில்,அது தெரியவரும்போது, விமானங்களை ஒப்படைக்கும் கால அளவும், பாக்கிஸ்தானிய இராணுவத்தின் அனைத்து தளங்களும் இதை பயன்படுத்துமா என்ற தகவல்களும் வெளியாகும்.
ஏர்கிராப்ட் டிசைன்
ஏவிஐசி-ன் துணை நிறுவனமான செங்டு ஏர்கிராப்ட் டிசைன் அண்ட் ரிசெர்ச் இன்ஸ்டிடியூட்-ஆல் விங் லோங் II வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மொத்தம் 11 மீட்டர் நீளமும், 20.5 மீட்டர் இறக்கை அளவும், 4.1 மீட்டர் உயரமும் கொண்ட விங் லோங் II யுஏவி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 'ஏர்ஷோ சீனா 2016' இல் வெளியிடப்பட்டது.

லேன் ஜியான் 7
லேன் ஜியான் 7 (ப்ளூ அம்பு 7) லேசர் வழிகாட்டுதலின் இயங்கும் வான் திரை ஏவுகணைகள், TG100 லேசர் / ஐஎன்எஸ் / ஜிபிஎஸ்-வழிகாட்டுதல் குண்டுகள் மற்றும் AR-1 / HJ-10 ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு விதமான ஏவுகணைகளை தாங்கிசெல்லும் திறன்படைத்த விங் லோங் II ஆளில்லா விமானம், அமெரிக்கா உருவாக்கிய ஹெல்பயர் ஏவுகணைக்கு இணையானது. ஒட்டுமொத்தமா, விங் லோங் II விமானம் 400 கிலோ வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு 370 கிலோமீட்டர் அதிகபட்ச வேகத்துடன் சுமார் 20 மணி நேரம் இந்த ஆளில்லா விமானம் பறக்கக்கூடியது. இந்த விங் லாங் II விமானம் 1,500 கிலோமீட்டர் சுற்றளவிற்கு செயல்படக்கூடியது.

சீனா
விங் லாங் ஆளில்லா விமானத்தின் மேம்பட்ட வகையான சீனாவின் சமீபத்திய தாக்கும் திறன் கொண்ட ட்ரோன் 2008 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ட்ரோனின் ஏற்றுமதி வகையானது எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், நைஜீரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது.

விங் லோங் போர் ட்ரோன்
அளவு மற்றும் பேலோடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உண்மையான விங் லோங் போர் ட்ரோன், யு.எஸ் விமானப்படையில் இருந்து இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெற்ற ஜெனரல் அடாமிக்ஸ் MQ-1 பிரிடேட்டருக்கு ஒப்பிடத்தக்கது. முதன்மையாக ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானம், சீன டெவலப்பர்களால் MQ-1 பிரேடரேட்டருக்கு மாற்றான ஒரு மலிவான விமானமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, MQ-9 ரீப்பர் $ 30 மில்லியன் என்ற விலையில் இருக்கும்போது, இதன் விலை சுமார் $ 1-2 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications