பாகிஸ்தான் ராணுவத்தை நவீனபடுத்தும் சீனா: ராஜஸ்தான் எல்லையில் ஆயுதங்கள் குவிப்பு
பாகிஸ்தான், ராஜஸ்தான் ரமிம் யார்கான் மாவட்டம் பஹாவல்நகர், ஜெய்சல்மேர் ஆகிய இடங்களில் இரண்டு புதிய ஆயுதங்களை வைத்துள்ளது. எந்த விதத்திலும் ராணுவ வீரர்களை காப்பாற்றுவதற்கு அந்த முகாமில் பாகிஸ்தான் ஹெலிப
பாகிஸ்தான் ராணுவத்தை சீனா நவீனபடுத்தி பல்வேறு தொழில் நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றது. இதையடுத்து, ராஜஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை குவித்தும் வருகின்றது.

மேலும் பயங்கர வாதிகளுக்கு நவீன ஆடைகளை கொடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த பல்வேறு வழிகளையும் பாகிஸ்தான் ராணுவம் கையாண்டு வருகின்றது.

பாகிஸ்தான் ஹெலிபேடு :
பாகிஸ்தான், ராஜஸ்தான் ரமிம் யார்கான் மாவட்டம் பஹாவல்நகர், ஜெய்சல்மேர் ஆகிய இடங்களில் இரண்டு புதிய ஆயுதங்களை வைத்துள்ளது. எந்த விதத்திலும் ராணுவ வீரர்களை காப்பாற்றுவதற்கு அந்த முகாமில் பாகிஸ்தான் ஹெலிபேடு அமைத்து உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தை நவீனப்படுத்தும் சீனா:
பாகிஸ்தான் ராணுவத்தை கடந்த சில ஆண்டாக சீனா நவீன படுத்தி வருகின்றது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 37கி.மீ தூரத்தில் ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானும் அங்கு பழ பதுங்கு கழிகளை வெட்டியுள்ளன.

800 கிமீ ஆப்டிகல் பைபர்:
சீனாவில் 800 கி.மீ ஆப்டிகல் பைபர் கேபிள் திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா ஏவுகணைகள், போர் கப்பல்கள் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு வெப்ப ஜாக்கெட்களை கொடுத்துள்ளது. இந்த ஜாக்கெட்கள் அணிந்து கொண்டு பயங்கரவாதிகள் எல்லையை கடந்து செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. புலனாய்வு அமைப்புகளின் இந்த அறிக்கையில் இருந்து பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையாக உள்ளன.

இரவில் காண்பது கடினம்:
பாதுகாப்புதுறைக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி பாகிஸ்தான் ராணுத்தின் சிறப்பு பிரிவுகளுக்கு ஐஎஸ்ஐ எதிர்ப்பு வெப்ப ஜாக்கெட்களை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட்களை இரவு பார்வை கண்ணாடிகளை பயன்படுத்தி காண்பது கடினம்.

பாகிஸ்தான் ராணுவத்தை காண முடியவில்லை:
சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அவர்கள் எல்லை பாதுகாப்பு படையினர் அருகில் இருந்து சுட்டனர். ஆனால் இந்த நடவடிக்கையை எல்லை பாதுகாப்பு படையினரால் இரவு காணும் சாதனத்தை கொண்டு கண்டறிய முடியவில்லை. பின்னர் அந்த வீடியோவை ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் படைவீரர்கள் அருகில் இருந்து சுடும் போது அந்த ஜாக்கெட் அவர்களை காப்பாற்றி உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications