140க்கும் மேற்பட்ட நாஸ்கா கோடுகள் கண்டுபிடிப்பு! எதற்கு பயன்படுத்தப்பட்டன?

|

நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140 க்கும் மேற்பட்ட புதிய நிலவடிவமைப்புகளை (geoglyphs) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு முன்பான, மர்மமான, பண்டைய மாபெரும் உருவங்களின் தொகுப்பான இவை, தெற்கு பெருவின் பாலைவன நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளன.

 2,500 ஆண்டுகளுக்கு முந்தையவை

2,500 ஆண்டுகளுக்கு முந்தையவை

மனிதர்கள், விலங்குகள் மற்றும் இதர பொருள்களின் இந்த பெரிய, பரந்த வடிவமைப்புகளில் சில 2,500 ஆண்டுகளுக்கு முந்தையவை மற்றும் அவை மிகப் பெரியவை. எவ்வளவு பெரியவை என்றால், அவற்றில் பலவற்றை வானிலிருந்து மட்டுமே அடையாளம் காண முடியும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டது

இப்போது ஜப்பானின் யமகடா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக, இதுவரை அறியப்படாத 143 நாஸ்கா ஜியோகிளிஃப்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் செதுக்கப்பட்ட உருவத்துடன் கூடிய ஒன்று, மனிதர்கள் மூலம் கண்டறியப்படுவது தவிர்த்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

 கிமு 100 முதல் கிபி 300 வரை

கிமு 100 முதல் கிபி 300 வரை

மொத்தத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஜியோகிளிஃப்கள் குறைந்தது கிமு 100 முதல் கிபி 300 வரை உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. பண்டைய நாஸ்கா கலாச்சாரத்தில் வரையப்பட்ட இந்த பெரிய வடிவங்களின் நோக்கம் விவாதிக்கப்படுகின்ற அதே வேளையில், அவை எவ்வாறு கட்டப்பட்டன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சி குழு

"இந்த வடிவமைப்புகள் அனைத்தும் அவை சார்ந்துள்ள நிலத்தில் உள்ள கருங்கற்களை அகற்றுவதன் மூலம் கீழே உள்ள வெள்ளை நிலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன" என்று ஆராய்ச்சி குழு விளக்குகிறது.

நாஸ்கா சமூகம்

நாஸ்கா சமூகம்

முந்தைய கருதுகோள்கள் நாஸ்கா சமூகம் மாபெரும் ஜியோகிளிஃப்களை வடிவமைத்துள்ளதாகவும், அவை சில நூற்றுக்கணக்கான மீட்டர் நீளமுள்ளதாகவும், வானத்தில் உள்ள தெய்வங்களால் காணப்பட வேண்டும் அல்லது அவை வானியல் நோக்கங்களுக்காக உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடுகின்றன.

மசாடோ சாகாய்

மசாடோ சாகாய்

மானுடவியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான மசாடோ சாகாய் தலைமையிலான புதிய ஆராய்ச்சியில், அக்குழு நாஸ்கா பிராந்தியத்தின் உயர்-தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததுடன், களப்பணிகளையும் மேற்கொண்டு இரண்டு முக்கிய வகை ஜியோகிளிப்களை அடையாளம் கண்டது.

மிகப் பழமையான செதுக்கல்கள்

மிகப் பழமையான செதுக்கல்கள்

டைப் பி என அழைக்கப்படும் மிகப் பழமையான செதுக்கல்கள் (கிமு. 100 முதல் கி.பி., 100 வரை) 50மீட்டருக்கு (165அடி) குறைவான அளவை கொண்டுள்ளன. டைப் ஏ எனப்படும் சற்றே பெரிய வகை வடிவங்கள் (கிமு. 100 முதல் கி.பி., 300 வரை)50 மீட்டர் முதல் இக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஜியோகிளிஃபான 100 மீட்டர(330அடி) அளவுடையவை.

பெரிய வகை ஏ சடங்கு

பெரிய ஏ வகை ஜியோகிளிஃப்ஸ் பெரும்பாலும் விலங்குகளைப் போல வடிவமைக்கப்பட்டு சடங்கு நடைபெறும் இடங்களாகவும், அங்கு மக்கள் பல்வேறு மட்பாண்ட பாத்திரங்களை அழிப்பதில் ஈடுபட்டனர் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


இதற்கு நேர்மாறாக, சிறிய வகை பி வடிவங்கள் பாதைகளில் அமைந்திருந்தன,. மேலும் பயணிகளை நோக்குநிலைப்படுத்துவதற்கான வழிப்பாதைகளாக செயல்பட்டிருக்கலாம் . ஒருவேளை ஒரு பெரிய வகை ஏ சடங்கு இடத்தை நோக்கி மக்களுக்கு வழிகாட்ட பயன்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Best Mobiles in India

English summary
Over 140 New Nazca Lines Have Been Discovered, And We Finally Have Clues to Their Use : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X