திடீரென்று மணி அடிப்பது போல் அதிர்ந்த பூமி; விஞ்ஞானிகள் குழப்பம்; பின்னணி என்ன ?
எல்லாவற்றை விடவும் மிகவும் வித்தியாசமான விடயம் என்னவென்றால், வழக்கமாக இயற்கையால் ஏற்படும் பூகம்பங்கள் ஆனது பொதுவாக குறுகிய கூர்மையான 'கிராக்' வடிவின் கீழ் தான் பதிவு ஆகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று ஒரு விசித்திரமான மற்றும் விளக்கம் இல்லாத ஒரு நிகழ்வை நம் பூமி சந்தித்து உள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள தேதியில், விஞ்ஞான கருவிகளின் வாயிலாக, சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மைல்களுக்கு அப்பால் ஏற்பட்ட ஒரு நில அதிர்வு அலைககள் பதிவாகி உள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது!

ஆச்சரியம் என்னவென்றால் அந்த அதிர்வை யாரும் அவர்களை உணரவில்லை. ஆம், அது பூகம்பம் அல்ல. உண்மையில் அது எதனால் உண்டானது? எப்படி உண்டானது? போன்ற கேள்விகளுக்கு எந்த விடையும், விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை. அது ஒரு விண்கல் மோதலா? அலல்து கடலுக்குள் மூழ்கி இருக்கும் எரிமலை வெடிப்பா? சத்தம் போடாமல் நிகழ்த்தப்பட்ட அணு ஆயுத சோதனையா? அல்லது எக்ஸ்டராடெர்ரஸ்ட்ரியல்ஸ் அல்லது ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகளின் வேலையா? யாருக்கும் தெரியாது. அப்போது என்ன தான் தெரியும்? வாருங்கள் அலசுவோம்!

மடகாஸ்கருக்கு இடையே?
இந்த அதிர்வு தொடர்பாக வெளியான அறிக்கைகள் தெரிவிக்கும் விடயங்களை மட்டும் தான் அறிந்த விடயங்கள் ஆகும். அந்த அறிக்கையின் படி,, ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கருக்கு இடையே உள்ள ஒரு பிரஞ்சு தீவின் கடற்கரையிலிருந்து சுமார் 15 மைல்கள் தொலைவில் உள்ள புள்ளியில் தான் இந்த நில அதிர்வு அலைகள் காணப்பட்டு உள்ளன.

அவ்வளவு ஏன்?
மாயோட்டின் கடற்கரையிலில் இந்த அலைகள் அதிர்வு முற்று பெற, சியாம்பியா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள நில அதிர்வு உணரிகள் ஒழிக்க தொடங்கிவிட்டனவாம். அதோடு முடிந்து விடவில்லை, அதாவது குறிப்பிட்ட எல்லைகளை மட்டும் அந்த அதிர்வு அடங்கி விடவில்லை, அது பரந்த கடல்களை கடந்து, இறுதியில் சிலியில், நியூசிலாந்தில் மற்றும் கனடாவில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் எட்டி உள்ளது. அவ்வளவு ஏன்? அதிர்வு ஏற்பட்ட புள்ளியில் இருந்து சுமார் 11,000 மைல்கள் தொலைவில் உள்ள ஹவாயயை கூட அது எட்டி உள்ளது.

அதிர்வெண் மோனோடோன் பரவலாக இருக்கலாம்!
மற்றொரு விசித்திரமான விடயம் என்னவெனில், இந்த அலைகள் நமது கிரகத்தை சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக மணி அடிப்பது போன்ற நிலைப்பாட்டை உருவாக்கி உள்ளதாம். இது மிகவும் விசித்திரமான நிகழ்வு என்பதால் இதை பூமி வாசிகள் யாரும் உணரவில்லையாம். ஆனால், அக்கருவிகள் இதை கவனிக்காமல் இல்லை. கொலம்பியா பல்கலைக் கழக விஞ்ஞானி ஆன கோரன் ஏக்ரோம்மின் கருத்துப்படி, இந்த நிகழ்விற்கு காரணமாக அதிர்வெண் மோனோடோன் பரவலாக இருக்கலாம்.
கிராக்' வடிவின் கீழ் தான் பதிவு ஆகும்!
எல்லாவற்றை விடவும் மிகவும் வித்தியாசமான விடயம் என்னவென்றால், வழக்கமாக இயற்கையால் ஏற்படும் பூகம்பங்கள் ஆனது பொதுவாக குறுகிய கூர்மையான 'கிராக்' வடிவின் கீழ் தான் பதிவு ஆகும். அதாவது புவியின் மேற்பரப்பில் உள்ள அழுத்தங்களின் வெளியீடு காரணமாக, நிலநடுக்கம் ஏற்படும் இடத்திலிருந்து வெளிப்படையான நில அதிர்வு அலைகள் வெளியேற்றும்.

ப்ரைமரி அலை அல்லது பி அலை!
ஆனால், இந்த நிகழ்வோ விசித்திரமாக பதிவாகியு உள்ளது ஏன்? அதை புரிந்து கொள்ள முதலில் பி அலைகளை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. விஞ்ஞானிகளின் படி, ஒரு அதிர்வின் முதல் சமிக்ஞை ஆனது முதன்மை அலை என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது ப்ரைமரி அலை அல்லது பி அலை என்பது என்றும் அழைக்கப்படுகிறது. இது அதிவேக வகையான நில அதிர்வு அலை ஆகும். இது தான் விஞ்ஞான கருவிகளை வந்து அடையும் முதல் அலை ஆகும். இந்த பி அலை ஆனது நீர் அல்லது திரவ அடுக்குகள் போன்ற திடமான பாறைகள் மற்றும் திரவங்கள் வழியாக ஊடுருவும். அதாவது ஒலி அலையானது எப்படி காற்றை தள்ளுகிறதோ அப்படி இந்த பி அலைகள் பாறைகளை நகர்த்தும்.

இரண்டாம் நிலை அலை!
பி அலைக்குப் பின் கிளம்பும் இரண்டாம் நிலை அலை ஆனது எஸ் அலை என்று அழைக்கப்படும். இந்த அதிர்வெண் அலைகள் சற்றே அதிகமாகவும், 'வெறித்தனமாகவும்' இருக்குமாம். அதாவது பாறைகளை மேலும் கீழும் நகர்த்தும் அளவிற்கு பலமானதாக இருக்குமாம். இதற்கு அடுத்ததாக வரும் அலைகள் சர்பேஸ் அலைகள் ஆகும், இவைகள் மிகவும் மெதுவானதாக இருக்குமாம்.

விசித்திரமான விடயம் என்னவென்றால்?
நவம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த நிகழ்வின் விசித்திரமான விடயம் என்னவென்றால், அந்த அலையில் எந்த விதமான முதன்மை அலையோ (பி அலை) அல்லது இரண்டாம் நிலை அலைகளோ (எஸ் அலை)கண்டறியப்படவில்லையாம்.ஆனாலும் கூட பதிவு செய்யப்பட்ட இந்த அலை ஆனது வழக்கமான அலைகளை போல் ஆழமான இடத்தில் நிகழ்ந்து உள்ளது, அதனால் தான் இதை வல்லுனர்களால் பிடிக்க முடிந்து உள்ளது.

ஏலியன்ஸ் வந்து விட்டார்களா?
இன்னொரு மர்மம் என்னவென்றால், பூகம்ப அலைகளை போன்று இந்த அலைகள் 'கரைந்து போகவில்லை'. அதற்கு பதிலாக, அது மிகவும் தூய்மையான - கிட்டத்தட்ட ஒரு இசை வடிவிலான - அதிர்வெண்ணை பராமரித்து உள்ளது. ஏலியன்ஸ் வந்து விட்டார்களா? யாருக்கு தெரியும்!


Click it and Unblock the Notifications