செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு.! உயிர்கள் இருந்ததற்கான ஆதாரமா? என்ன சொல்கிறது நாசா?

|

செவ்வாய் கிரகத்தில் ஆர்கானிக் உப்புகள் இருக்கக்கூடும் என்று நாசாவின் ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது. நாசாவின் கண்டறிதல் ஒரு காலத்தில் சிவப்பு கிரகத்தில் உயிர் இருந்தது என்பதற்கான சான்றுகளை வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஜர்னல் ஆஃப் ஜியோபிசிகல் ரிசர்ச் பிளானட்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்கானிக் உப்பில் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆக்சலேட்டுகள் மற்றும் அசிடேட் போன்ற கரிம உப்புகள் கிரகத்தின் மேற்பரப்பு வண்டல்களில் பரவலாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளது.

செவ்வாயில் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் எச்சங்களா?

செவ்வாயில் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் எச்சங்களா?

இந்த உப்புகள் கரிம சேர்மங்களின் வேதியியல் எச்சங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள கரிம சேர்மங்கள் மற்றும் உப்புகள் புவியியல் செயல்முறைகளால் உருவாகியிருக்கலாம் அல்லது பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் எச்சங்களாக இவை இருக்கலாம் என்று நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல், செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு உயிர்கள் இருந்திருக்கலாம் என்ற கூற்றை நம்ப வைத்துள்ளது.

செவ்வாயில் வேறு எங்கும் செறிவூட்டப்பட்ட கரிம உப்புக்கள் இருக்கிறதா?

செவ்வாயில் வேறு எங்கும் செறிவூட்டப்பட்ட கரிம உப்புக்கள் இருக்கிறதா?

கியூரியாசிட்டியின் உள்ளிருக்கும் ஒரு சிறிய வேதியியல் ஆய்வகமான செவ்வாய் கிரகத்தில் மாதிரி பகுப்பாய்வு (SAM) இலிருந்து எடுக்கப்பட்ட ஆய்வக சோதனைகள் மற்றும் தரவின் பகுப்பாய்வு மூலம் இந்த கண்டுபிடிப்புகள் தீர்மானிக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் வேறு எங்கும் செறிவூட்டப்பட்ட கரிம உப்புக்கள் இருப்பதை நாசா கண்டுபிடித்தால், அந்த பகுதிகளை மேலும் ஆராய்ச்சி செய்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாசா கூறியுள்ளது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

செவ்வாயில் ஆழமாகத் துளையிட்டு ஆராய்ச்சி செய்ய முடிவா?

செவ்வாயில் ஆழமாகத் துளையிட்டு ஆராய்ச்சி செய்ய முடிவா?

அதேபோல், கரிமப் பொருள்களைச் சிறப்பாகப் பாதுகாக்கக்கூடிய மேற்பரப்பிற்குக் கீழே ஆழமாகத் துளையிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கும் என்று மேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் கரிம புவி வேதியியலாளர் ஜேம்ஸ் எம்.டி கூறியுள்ளார். சமீபத்திய கண்டுபிடிப்பின் படி, ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் கரிமப் பொருட்கள் இருந்தன என்ற கருத்துக்குக் கூடுதல் சான்றுகள் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலுக்காக ஆக்ஸலேட்டுகள் மற்றும் அசிடேட்டுகள் மூலம் உயிர் வாழும் உயிரினங்கள்

ஆற்றலுக்காக ஆக்ஸலேட்டுகள் மற்றும் அசிடேட்டுகள் மூலம் உயிர் வாழும் உயிரினங்கள்

கரிம உப்புகளை நேரடியாகக் கண்டறிவது நவீன கால செவ்வாய் வாழ்விடத்தைப் பற்றி அறியவும் உதவும் என்று கூறப்படுகிறது. பூமியில், சில உயிரினங்கள் ஆற்றலுக்காக ஆக்ஸலேட்டுகள் மற்றும் அசிடேட்டுகள் போன்ற கரிம உப்புகளைப் பயன்படுத்துகிறது. இதேபோல், செவ்வாய் கிரகத்தில் இந்த கரிம உப்புக்களை ஏதேனும் உயிரினங்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது. இதற்குக் கூடுதல் ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

UFO வீடியோ பற்றி பென்டகன் ஒப்புக்கொண்ட உண்மை.. இன்னும் என்னவெல்லாம் நமக்கு தெரியாம இருக்கோ?UFO வீடியோ பற்றி பென்டகன் ஒப்புக்கொண்ட உண்மை.. இன்னும் என்னவெல்லாம் நமக்கு தெரியாம இருக்கோ?

செமின் (CheMin) கருவி மூலம் மேற்கொள்ளப்படும் செவ்வாய் ஆராய்ச்சி

செமின் (CheMin) கருவி மூலம் மேற்கொள்ளப்படும் செவ்வாய் ஆராய்ச்சி

செவ்வாய் கிரகத்தில் கரிம உப்புகளை நேரடியாக அடையாளம் காண்பது, இந்த மாதிரிகளின் கலவையை வெளிப்படுத்தும் வாயுக்களை வெளியிடுவதற்குச் செவ்வாய் மண் மற்றும் பாறைகளைச் சூடாக்கும் SAM போன்ற கருவிகளை பயன்படுத்துவது கடினம் என்றாலும், குழு மற்றொரு கியூரியாசிட்டி கருவியை முன்மொழிந்திருந்தது. செமின் (CheMin) என்று அழைக்கப்படும் வேதியியல் மற்றும் கனிமவியல் கருவியைப் பயன்படுத்தலாம். இந்த கருவி சில கரிம உப்புகள் போதுமான அளவு இருந்தால் அவற்றைக் கண்டறியும்.

புதிய பகுதிகளில் கரிம உப்புகளை தேடும் நாசா

புதிய பகுதிகளில் கரிம உப்புகளை தேடும் நாசா

இதுவரை, செமின் கரிம உப்புகளைக் சேகரிக்கவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. ஒரு மாதிரியின் கலவையைத் தீர்மானிக்க, செமின் எக்ஸ்-கதிர்களை அதில் செலுத்தி, எக்ஸ்-கதிர்கள் எந்த கோணத்தில் டிடெக்டரை நோக்கி வேறுபடுகின்றன என்பதை அளவிடுகிறது. கியூரியாசிட்டியின் எஸ்ஏஎம் மற்றும் செமின் குழுக்கள் கரிம பள்ளங்களில் உள்ள ஷார்ப் மவுண்டில் ரோவர் ஒரு புதிய பகுதிக்கு நகரும்போது கரிம உப்புகளின் சமிக்ஞைகளைத் தொடர்ந்து தேடும் என்று தெரிவித்துள்ளது.

ரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G ஸ்மார்ட்போன் இது தான்.. ஜியோவின் ரூ.3000 சலுகையும் இருக்கு..ரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G ஸ்மார்ட்போன் இது தான்.. ஜியோவின் ரூ.3000 சலுகையும் இருக்கு..

செவ்வாயில் 6.5 அடி ஆழம் துளையிடும் எக்ஸோமார்ஸ் ரோவர்

செவ்வாயில் 6.5 அடி ஆழம் துளையிடும் எக்ஸோமார்ஸ் ரோவர்

மேலும், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் வரவிருக்கும் எக்ஸோமார்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை சுமார் 6.5 அடி அல்லது 2 மீட்டர் ஆழம் வரை துளையிடுவதற்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆழமான செவ்வாய் அடுக்குகளின் வேதியியலைப் பகுப்பாய்வு செய்யும் கோடார்ட் கருவியைக் கொண்டு இந்த ஆராய்ச்சி மேலும் சில புதிய திருப்பங்களைக் கட்டவிழ்க்கும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Organic Salts Detected on Mars May Provide Evidence That Life Exited Before : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X