ஆஹா வந்துட்டான்யா! தேதி குறிச்சு வச்சுக்கோங்க! தலைவன் OnePlus Nord 3 Lite 5G வரான்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தால், பட்ஜெட் பிரியர்களை கவரும் நோக்கத்திற்காக வெளியிடப்பட்ட சீரிஸ் தான் நோர்ட் (Nord) மாடல் ஸ்மார்ட்போன்கள். இந்த வரிசையின் புது வரவாக அறிமுகமாகும் அடுத்த மாடல் தான் OnePlus Nord 3 Lite 5G.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் இந்திய சந்தையில், புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய சாதனங்களின் அறிமுக நிகழ்வு எப்போது நடைபெறும் என்ற உறுதியான நாளையும் நிறுவனம் இப்போது வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் நிறுவனம் OnePlus Nord 3 Lite 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

இதேபோல், பட்ஜெட் ஒன்பிளஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், மற்றொரு சாதனத்தையும் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த பட்டியலில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord Buds 2 சாதனமும் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், மக்களே.. OnePlus India ஆனது OnePlus Nord 3 Lite 5G மற்றும் OnePlus Nord Buds 2 ஆகியவற்றை வரும் ஏப்ரல் 4, 2023 அன்று அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த நிகழ்வை 'லார்ஜர் தான் லைஃப் - ஒன்பிளஸ் நார்ட் லான்ச் ஈவென்ட் (Larger than Life - A OnePlus Nord Launch Event)' என்ற பெயரில் அறிமுகம் செய்யவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் வெளியிட்ட தகவலை பார்த்தால், 2 சாதனங்களும் எப்படி இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. புதிய OnePlus Nord CE 3 Lite 5G இந்த ஆண்டின் மிகவும் மலிவு விலை போனாக இருக்கும்.
தெரியாதவர்களுக்கு, நிறுவனம் OnePlus Nord CE 2 Lite 5G சாதனத்தைக் கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தியது. OnePlus Nord CE 3 Lite 5G ஒன்பிளஸ் வரிசையின் மிகவும் மலிவு விலை போனாக இருக்கும் என்பதைத் தாண்டி, 5ஜி தொழில்நுட்பத்தை பிராண்டின் தொடக்க நிலை ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

OnePlus சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த போன் புதிய மாற்றத்தை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய விலை இல்லாமல், நெகிழ்வான பட்ஜெட்டிற்குள் 5ஜி போனை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த சாதனம் சரியானது. OnePlus Nord CE 3 Lite 5G ஆனது OnePlus இன் சிக்னேச்சர் ஆன 'ஃபாஸ்ட் அண்ட் ஸ்மூத் எக்ஸ்பீரியன்ஸ்' உடன் புதிய பேஸ்டல் லைம் நிறத்தில் இந்த போன் வருகிறது.
OnePlus Nord CE 3 Lite 5G சாதனத்தில் வசீகரமான இரண்டு வட்ட கேமரா அமைப்பு உட்பட, கூட்டத்திலிருந்து தனித்து நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. OnePlus Nord CE 3 Lite 5G ஆனது அதன் முன்னோடிகளின் வெற்றியைப் பின்தொடர்கிறது, உயர்ந்த முக்கிய அம்சங்களை மலிவு விலையில் பேக் செய்கிறது என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
OnePlus Nord CE 3 Lite 5G சாதனம் OnePlus Nord Buds 2 டிவைஸ் உடன் வரும் ஏப்ரல் 4, 2023 அன்று மாலை 7:00 மணிக்கு இந்திய நேரப்படி ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வு மூலம் அறிமுகமாகும். இந்த நிகழ்வு OnePlus இன் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். புது Nord போனை வாங்க விருப்பமுள்ளவர்கள் உங்கள் காலெண்டரில் இந்த தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








