இந்த பக்கமே வர கூடாது! அப்துல் கலாம் தீவில் நடந்த ஆயுத சோதனை.. சைலன்ட் ஆன சீனா!

|

டிஆர்டிஓ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் எதிரி நாட்டு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நாடுவானில் இடைமறித்து தகர்க்கும் ஏடி-1 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதற்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (டிஆர்டிஓ) பாதுகாப்ப அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 ஏடி-1 ரக ஏவுகணை

ஏடி-1 ரக ஏவுகணை

அதாவது அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எதிரிநாட்டுப் போர் விமானங்களை நடுவானில் இடைமறித்துத் தகர்ப்பதற்காக ஏடி-1 ரக ஏவுகணையை டிஆர்டிஒ தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டிஆர்டிஒ தயாரித்த ஏடி-1 ஏவுகணையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன கட்டுப்பாட்டுக் கருவிகள், நேவிகேஷன் உள்ளன. மேலும் இந்த ஏடி-1 ஏவுகணை வளிமண்டலத்தின் 100 கி.மீ உயரத்துக்கு கீழும், அதனைத் தாண்டியும் என இருவிதமாகப் பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!

 ஏபிஜே அப்துல் காலம் தீவில்

ஏபிஜே அப்துல் காலம் தீவில்

அதேபோல் இது தொலைவில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விமானங்களைத் துல்லியமாகத் தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிநவீன ஏடி-1 ரக ஏவுகணை நேற்று ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள ஏபிஜே அப்துல் காலம் தீவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

ஆப்டிக்கல் கண்காணிப்பு நிலையங்கள்

இந்த சோதனையில் ஏவுகணை செல்லும் பாதை சென்சார்கள், ரேடார்கள், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. குறிப்பாக இலக்கை நோக்கி இந்த ஏவுகணை துல்லியமாகச் சென்றது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளில் மட்டுமே உள்ளது

சில நாடுகளில் மட்டுமே உள்ளது

மேலும் இந்த சோதனை வெற்றி பெற்ற பிறகு டிஆர்டிஓ அமைப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங். அதேபோல் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உலகளவில் ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்த பரிசோதனை நாட்டின் ஏவுகணை திறனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று, நாட்டின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Silent ஆ இருங்க

Silent ஆ இருங்க

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சீனா இதுபோன்ற ஏவுகணைகளை வைத்து தான் கெத்து காட்டி வந்தது. ஆனால் சீனாவையே மிஞ்சும் அளவுக்கு இந்தியா உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் துல்லியமாகத் தாக்கும் இந்த ஏடி-1 ரக ஏவுகணையைப் பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இனிமேல் சீனா சைலன்ட் இருக்க வேண்டியது தான்.

விஸ்வரூபம் எடுக்கும் VI.. ரூ.401க்கு 200GB டேட்டா! பிரைம், ஹாட்ஸ்டார் இன்னும் பல! இப்போ வாங்க..விஸ்வரூபம் எடுக்கும் VI.. ரூ.401க்கு 200GB டேட்டா! பிரைம், ஹாட்ஸ்டார் இன்னும் பல! இப்போ வாங்க..

சந்திரயான் 3

சந்திரயான் 3

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

லேண்டர் ரோவர்

லேண்டர் ரோவர்

குறிப்பாக சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர்சோம்நாத் கூறினார்.

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ தலைவர், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் தயாராக உள்ளது. பின்பு இந்த சந்திரயான் 3 விண்கலம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சந்திரயான் 2 இல் ஏற்பட்டபிரச்சனைகள் இதில் இருக்காது எனவும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை கண்டிப்பாக முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றவருவதால், இந்த முறை லேண்டர் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார் இஸ்ரோ தலைவர்.

Best Mobiles in India

English summary
India successfully conducts maiden flight-test of ballistic missile defence interceptor: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X