ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!

|

செவ்வாய் கிரக வரலாற்றின் ஆரம்பக்கட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடலின் பாதி அளவுக்கு சமமான திரவு நீர் இருந்திருக்கலாம் எனவும் இது முழு கிரகத்தையும் சுமார் 1.5 கிலோ மீட்டல் ஆழத்திற்கு மூழ்கிய நிலையில் வைத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏணைய நீர்நிலைகள்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏணைய நீர்நிலைகள்

செவ்வாய் கிரக வரலாற்றை பார்க்கையில், செவ்வாய் ஒருகாலக்கட்டத்தில் ஈரமான உலகமாக இருந்திருக்கலாம் எனவும் கிரகத்தின் மேற்பரப்பில் ஏணைய நீர்நிலைகள் இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. இருப்பினும் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை தலைகீழாக மாறியது எனவும் இன்றிருக்கும் வரண்ட நிலை ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அங்கிருந்த தண்ணீருக்கு என்ன ஆனது? என விஞ்ஞானிகள் சிலவைகளை கணித்துள்ளனர்.

அட்லாண்டில் பெருங்கடலின் பாதியளவு நீர்

அட்லாண்டில் பெருங்கடலின் பாதியளவு நீர்

செவ்வாய் கிரகத்தின் பெரும்பகுதி நீரினால் சூழப்பட்டிருந்ததாக கணிக்கப்படுகிறது எனவும் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் வறண்ட கிரகமாக மாறி இருக்கிறது என கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பிஎசிடி ஈவா ஷெல்லர் தெரிவித்தார்.

செவ்வாய் கிரக வரலாறு

செவ்வாய் கிரக வரலாறு

செவ்வாய் கிரக வரலாறு குறித்து பார்க்கையில், கிரகத்தின் மேற்பரப்பில் அட்லாண்டில் பெருங்கடலின் பாதி அளவிற்கு நிகரான திரவ நீரைக் கொண்டிருக்கலாம், எனவும் இது முழுகிரகத்தை கிட்டத்தட்ட ஒரு மைல் அதாவது 1.5 கிலோமீட்டர் ஆழத்திற்கு நீரில் மூழ்கி இருந்திருக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரக நீர் அளவு

செவ்வாய் கிரக நீர் அளவு

செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் ஆனது ஒரு ஆக்ஸிஜன், இரண்டு ஹைட்ரோஜன் அணுக்களால் ஆனது என தெரிவிக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் டியூட்டீரியம் எனப்படும் ஹைட்ரோஜன் ஐசோடோப்பின் நீர் இல்லாமல் போனது குறித்த சில அணுக்கருவுகளை வழங்கியுள்ளது.

ராசா., நம்பி பொறுப்ப கொடுக்குறோம்: நீங்களே ரோடு போடலாம்., சாலை பெயரையும் மாற்றலாம்- ராசா., நம்பி பொறுப்ப கொடுக்குறோம்: நீங்களே ரோடு போடலாம்., சாலை பெயரையும் மாற்றலாம்- "கூகுள் மேப்" அப்டேட்!

நீர் காணாமல் போனதற்கு ஈர்ப்பு விசைதான் காரணமா?

நீர் காணாமல் போனதற்கு ஈர்ப்பு விசைதான் காரணமா?

செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு விசை குறைவாகவே இருப்பதாக கணிக்கப்பட்டது. இதன் காரணமாக கிரகத்தில் உள்ள நீர் மொத்தமும் வெளியேறி இருக்கலாம் என கணிக்கப்பட்டது. ஆனால் ஈர்ப்புவிசை காரணமாக கிரகத்தில் இருந்து நீர் விண்வெளியில் ஓரளவு மட்டுமே வெளியேறியிருக்க கூடும் எனவும் முழுநீரும் வெளியேற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

கிரகத்தில் உள்ள கனிமங்களால் உறைந்திருக்கும்

கிரகத்தில் உள்ள கனிமங்களால் உறைந்திருக்கும்

செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர்வளத்தின் 30-99 சதவீதம் கிரகத்தல் உள்ள கனிமங்களில் உறைந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சாதாரண ஹைட்ரோஜன் மட்டும் வளிமண்டலத்தின் மூலமாக விண்வெளியில் வெளியேறியிருக்கு கூடும். டியூட்டீரியத்தின் மிகப் பெரிய வீதம் கொண்ட திரவம் கிரகத்தில் தேங்கியிருக்கும் என கூறப்படுகிறது.

முழுவதும் விண்வெளியில் வெளியேறியிருக்க வாய்ப்பேயில்லை

முழுவதும் விண்வெளியில் வெளியேறியிருக்க வாய்ப்பேயில்லை

மூன்று மாதிரியான செயல்முறை மூலமாக விண்வெளி மற்றும் மேலோட்டத்தின் மூலம் எவ்வளவு நீர் இழப்பு ஏற்பட்டது என கணிக்க முடியும் என விஞ்ஞானி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கணிப்புப்படி முழுநீரும் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை எனவும் கனிம வளம் காரணமாக தண்ணீர் உறைந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

மனிதர்கள் வாழ உகந்த கிரகம் எது

மனிதர்கள் வாழ உகந்த கிரகம் எது

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பது உறுதி

நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பது உறுதி

செவ்வாய் கிரகத்தில் குறிப்பிட்ட பகுதியில் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளது. மேலும் நீர்ப்பனிக்கட்டிகள் எடுப்பதற்கு வேறுசில உபகரணங்கள் தேவையில்லை எனவும் மண்வெட்டி மூலமாகவே வெட்டி எடுக்கலாம் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Once Upon a Time Mars Had Water in Volume of Half of Atlantic Ocean: Now Where the Water

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X