சூரிய குடும்பத்தின் மர்மத்தை அவிழ்க்க போகும் இரட்டை கிரகங்கள்; நாசா சாதனை!

என்னதான் பகையாளி நாடாக இருந்தாலும் கூட ஒரு அளப்பறியாத சாதனையை செய்தால் பாராட்டி தானே ஆகவேண்டும்.

|

என்னதான் பகையாளி நாடாக இருந்தாலும் கூட ஒரு அளப்பறியாத சாதனையை செய்தால் பாராட்டி தானே ஆகவேண்டும். அது தானே பெரிய மனுசத்தனம். மாறாக கேலி செய்தால் பின் அமெரிக்க பத்திரிக்கைகளுக்கும் நமக்கும் என்ன வித்தியசம்? அப்படி என்ன சாதனையை அமெரிக்க செய்து விட்டது?

சூரிய குடும்பத்தின் மர்மத்தை அவிழ்க்க போகும் இரட்டை கிரகங்கள்; நாசா.!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மீண்டும் ஒருமுறை தான் உலகின் முற்போக்கான விண்வெளி ஆராய்ச்சி மையம் என்பதை நிரூபித்து உள்ளது. ஆம் ஜனவரி முதல் தேதியில் நாசாவின் விண்கலம் ஒன்று இதுவரை மனித இனம் எட்டாத ஒரு தூரத்தை எட்டி சாதனை படைத்து உள்ளது.

ஜனவரி

ஜனவரி

சுமார் 20 மைல் நீளமும், பூமியில் இருந்து பில்லியன் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு புதிய விண்மீன் மண்டலத்தின் ஒரு பகுதியை அடைந்து உள்ளது. நாம் வாழும் பூமி கிரகத்தை உள்ளடக்கிய சூரிய மண்டலம் ஆனது எப்படி உஉருவானது என்பது பற்றிய குறிப்பேடுகளை சேகரிப்பதற்காக நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் அங்கு சென்றுள்ளது.

விண்ணில் மிதக்கும் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் ஆனது, ஜனவரி முதல் தேதி அன்று அதிகாலை 12:33 மணியளவில், குய்பேர்ப் பெல்ட்டின் அன்சார்ட்டட் இதயத்தின் 'மூன்றாம் மண்டலத்தை' அடையும் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நாசா அதை காலை 10:31 வரை வெற்றிகரமாக சென்று அடைந்தது என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை.

 நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம்

நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம்

விண்ணில் மிதக்கும் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் ஆனது, ஜனவரி முதல் தேதி அன்று அதிகாலை 12:33 மணியளவில், குய்பேர்ப் பெல்ட்டின் அன்சார்ட்டட் இதயத்தின் 'மூன்றாம் மண்டலத்தை' அடையும் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நாசா அதை காலை 10:31 வரை வெற்றிகரமாக சென்று அடைந்தது என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை.

'எம்ஓஎம்' என்று அறியப்படும் புதிய ஹாரிசான்ஸ் மிஷனின் ஆபரேஷன்ஸ் மேனேஜர் ஆன ஆலிஸ் போமான், மிஷன் பொறியியலாளர்களிடமிருந்து புதுப்பித்தல்களைப் பெற்றார், அவற்றில் ஒன்று பச்சை நிறம் (வெற்றி) என்று அழைக்கப்பட்டது, அறிவிக்கப்பட்டது. "எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான விண்கலம் உள்ளது, நாங்கள் மிகவும் தொலைதூரப் பயணம் செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

"காண்டாக்ட் பைனரி"

உடன் நியூ ஹாரிஸான் விண்கலம் ஆனது அதன் அருகாமையில் இருக்கும், அதாவது சுமார் 17,000 மைல் (27,000 கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும் "காண்டாக்ட் பைனரி" என்று அழைக்கப்படும் அல்டிமா டுலேவின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளது. அருகாமை புகைப்படங்களை பார்த்த பின்னரே, அது இரண்டு கோள்கள் ஒன்றாக இணைந்தது போன்ற ஒரு உருவத்தை கொண்டுள்ளது வெளிப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க தெளிவையும் பெறலாம்

வரலாற்று சிறப்புமிக்க தெளிவையும் பெறலாம்

அந்த கிரகத்தின்மொத்த நீளம் சுமார் 19 மைல் (31 கிலோமீட்டர்) நீளம் ஆகும் என்பதும், அதன் பெரிய கோளம் "அல்டிமா" (12 மைல் / 19 கிலோமீட்டர் நீளமும்) மற்றும் சிறிய கோளம் "டுலே" (9 மைல்கள் / 14 கிலோமீட்டர் நீளமும்) கொண்டுள்ளது.


இந்த இரண்டு கோளமும் சூரிய குடும்பத்தின் உருவாக்கம் ஆனது 99 சதவிகிதம் முடிந்த காலத்தில், ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அத்துடன் நாம் வாழும் இந்த சூரிய குடும்பம் உருவானது எப்படி என்கிற வரலாற்று சிறப்புமிக்க தெளிவையும் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது

ஜெஃப் மூர்

ஜெஃப் மூர்

அதனை கருத்தில் கொண்டு தான் "நியூ ஹார்சன்ஸ் ஒரு டைம் மெஷின் போன்றது. சூரிய மண்டலத்தின் பிறப்புக்கு நம்மை திரும்ப அழைத்துச் செல்கிறது." என்று நியூ ஹாரிசன்ஸ் புவியியல் மற்றும் ஜியோ பிசிக்ஸ் குழுவின் முன்னணி தலைவரான ஜெஃப் மூர் கூறியுள்ளார். மேலும் அவர் "கிரகங்களின் தோற்றத்தை நாம் புரிந்து கொள்ள அல்டிமா துலூவை ஆராய்வதனால் சாத்தியமாகும் என்றும் கூறி உள்ளார்.

டஜன் கணக்கான தரவு

டஜன் கணக்கான தரவு

அடுத்தடுத்த மாதங்களில், நியூ ஹார்சான்ஸ் ஆனது டஜன் கணக்கான தரவுகளை பூமிக்கு அனுப்பி வைக்க உள்ளதால், விண்வெளி ஆராய்ச்சி உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன. ஆகமொத்தம் இந்த அல்டிமா டுலே மீதான நெருக்கமும் ஆய்வும் சூரிய மண்டலத்தின் மீதான புத்தம்புதிய அத்தியாயங்களை எழுத உதவ போகிறது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Best Mobiles in India

English summary
On Jan 1 NASA Will Reach The Farthest Object in Our Solar System At 6.35 Billion Km Away: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X