கூகுள் எர்த் மேப்பில் சிக்கிய மர்ம கோடு; இதெப்படி சாத்தியம்.? என்னவாக இருக்கும்.?

  நம்மில் பெரும்பாலானோர்கள் வானத்தில் ஜெட் விமானங்கள் விட்டுச்சென்ற வெள்ளை நிறப்பாதைகளை கண்டிருப்போம். ஆனால் அவைகள் சில நூறு கிலோமீட்டர்கள் தொலைவு வரை மட்டுமே நீளும், பின்னர் மெல்ல மெல்ல வானத்தோடும் அல்லது மேகத்தோடும் கரைந்து விடும்.

  ஆனால் அதேபோன்றதொரு வெள்ளை நிறப்பாதையானது சுமார் 21,000 கிமீ வரை நீள்வதை, அதாவது அண்டார்டிக்காவில் இருந்து வட துருவ முனை வரை நீள்வதை இதுவரும் யாருமே பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது; ஆனால் பதிவாக்க முடியும். ஆம் அப்படியானதொரு மிக நீளமான வெள்ளைநிறபாதையானது கூகுள் எர்த் மேப்ஸில் துல்லியமாக பதிவாகியுள்ளது. அங்கிருந்து ஏகப்பட்ட மர்மங்களும், பீதிகளும் கிளம்புகின்றன.!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஞாபகம் இருக்கிறதா.?

  கடந்த ஜனவரி 31-ஆம் தேதியன்று ஏற்பட்ட ப்ளூ ரெட் மூன் எனும் அரிய விண்வெளி நிகழ்வின் போது நிலவின் அருகே எதோ பறப்பது போன்றும், நிலவை அந்த மர்மமான பறக்கும் பொருள் கண்காணிப்பது போன்றும் வீடியோ ஒன்று வெளியாக பரபரப்பு ஏற்பட்டது ஞாபகம் இருக்கிறதா.?

  சதியாலோசனை கோட்பாடு.!

  அது எக்ஸ்டராடெர்ரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் ஏலியன்கள் அல்லது வேற்றுகிறவாசிகள் என்ற "வார்த்தைகள்" வெளியானதும் அந்த பரபரப்பு ஒரு பீதியாக மாறியது. அதே பீதி தான் இப்போதும் கிளம்பியுள்ளது. சுமார் 13,000 மைல்கள் (21,000 கிமீ) வரை நமது கிரகத்தை சுற்றி பரவும் ஒரு வித்தியாசமான வெள்ளை கோடு, பிரபல சதியாலோசனை கோட்பாட்டாளரான டைலர் கிளாக்னர் கண்ணில் சிக்கியுள்ளது.

  "மிகப்பெரிய ஒன்றாக இருக்க வேண்டும்"

  அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "இந்த கோடு ஒரு விமானம் மூலம் உருவாக்கப்பட்டது அல்ல. இந்த மிக நீளமான கிளவுட் உருவாக்கத்தின் காரணம் எதுவாக இருந்தாலும், அது மிகப்பெரிய ஒன்றாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

  மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது.!

  அண்டார்டிக்காவிலிருந்து 13,000 மைல்கள் வரை நீளும் அந்த பயண பாதையானது வட துருவத்திற்கு செல்லும் வரை எந்தவொரு சிறு பாதையையும் மாற்றாமல், திசை திரும்பாமல் சென்றுள்ளது குறிப்பாக அது விட்டுச்சென்ற வெள்ளைநிற பாதையானது சற்றும் அழியாமல் திடமாக உள்ளது என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது.

  சில நிமிடங்களில் பூமியை கடந்து செல்லக்கூடிய வேகம்.!

  இதன் அடிப்படையின் கீழ் பார்த்தால், மிகவும் வேகமாக, அதாவது ஒரு சில நிமிடங்களில் பூமியை கடந்து செல்லக்கூடிய வேகத்தில் சென்றால் மட்டுமே இது சாத்தியம். அப்போது தான் பூமி சுழற்சியை பொருட்படுத்தாத நேர் கோட்டிலான பயணப்பாதையும், திடமான வெள்ளைநிறக்கோடும் சாத்தியமாகும்.

  சந்தேகம் கிளம்பியுள்ளது.!

  ஆக இந்த தடமானது ஒரு வேற்றுகிறவாச விண்கலத்தின் மூலமாக விளைந்திருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியுள்ளது. அதே சந்தேகத்தின் அடிப்படையில் தான் டைலர் கிளாக்னர் வெளியிட்டுள்ள வீடியோவானது 590,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையு கடந்து சென்றுள்ளது.

  போலியானதென்று நிரூபிக்கவே முடியாத ஒரு மர்மம் உள்ளது.!

  ஒருபக்கம் இதை ஏலியன் இருப்பிற்கான ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் மறுகையில் இது ஒரு போலியான புகைப்படம், புகைப்படத்தில் ஸ்ட்ரிச் இருப்பதை காணமுடிகிறது என்கிற வாதங்களும் எழுகின்றன. இதைக்கூட போலியானது என்று நிரூபிக்க வாய்ப்புள்ளது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் கடந்த 1977-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இந்நாள் வரையிலாக யாராலுமே போலியானது என்று நிரூபிக்கவும் முடியவில்லை; அது என்னதென்று கண்டுபிடிக்கவும் இல்லை. அதென்னது.?

  சரியாக இரவு 10.16 மணிக்கு.!

  ஈடி (ET)எனப்படும் எக்ஸ்ட்ரா டெர்ரெஸ்ட்ரியல் (Extra Terrestrial) வானியலாளரான ஜெர்ரி ஏமன் (Jerry Ehman), வேற்று கிரக நாகரீகத்தில் இருந்து ஏதேனும் சிக்னல் கிடைக்குமா என்று 'பிக் இயர் தொலைநோக்கி' ஒன்றின் மூலம் வானத்தை அலசிக் கொண்டிருந்தார். சரியாக இரவு 10.16 மணிக்கு, அவருக்கு மிகவும் விச்திரமான சிக்னல் ஒன்று கிடைத்தது - அது தான் 'வாவ்' சிக்னல் (Wow Signal).!

  பலமான வேற்று கிரகவாசிகள் சார்ந்த ஆதாரங்களில் ஒன்று.!

  ஏலியன்கள் பற்றிய எண்ணற்ற அறிவியல் புனைக்கதைகளில் பொதுவாக காணப்படும் ஒன்று தான் இந்த 'வாவ்' சிக்னல். அந்த அளவிற்கு மிகவும் பலமான வேற்று கிரகவாசிகள் சார்ந்த ஆதாரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நாம் 'தனியாக இல்லை' என்பதை நாம் நம்பியே ஆக வேண்டும் என்று உணர்த்தும் வாவ் சிக்னல் உண்மையில் என்ன சொல்ல வருகிறது

  கண்டுப்பிடிக்கவே இல்லை.!

  ஓஹியோ தேசிய பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கி மூலம் வாவ் சிக்னலை கண்டறிந்த ஜெர்ரி முதல் பல வானவியலாளர்கள், சுமார் 39 வருடங்களாக வாவ் சிக்னலில் இருந்து என்ன புரிந்துக்கொள்ள முடியும், என்பதை கண்டுப்பிடிக்கவே இல்லை. சகிட்டாரியஸ் விண்மீன் குழாமில் (constellation of Sagittarius) உள்ள 'ச்சி சகிட்டரி' (Chi Sagittarii) என்ற 3 நட்சத்திர அமைப்புகளை நோக்கிய திசையில் தொலைநோக்கி மூலம் ஆராயும் போதுதான் 'வாவ்' சிக்னல் கிடைக்கப்பெற்றது.

  பின்னணி இரைச்சல்

  சுமார் 72 நொடிகள் நீளமுள்ள 72 ரேடியோ அலை வெடிப்பு சத்தத்தை அதாவது, ஒரு வலுவான மற்றும் மிகவும் தொலைவான பின்னணி இரைச்சலின் சிக்னல் பதிவு செய்யப்பட்டது. வானிலை ஆய்வு கம்ப்யூட்டரில் இருந்து வெளியான அந்த சிக்னலின் பிரிண்ட் அவுட்டிலில் மிகவும் அசாதாரணமான அந்த சிக்னல் ஆனது ஜெர்ரி மூலம் வட்டமிடப்பட்டு வாவ் என்று குறிப்பும் எழுதப்பட்டது.

  தொழில்நுட்ப திறன்

  கிடைக்கபெற்ற இந்த சிக்னல் ஆனது ஒரு வகையான வானியல் தொழில்நுட்பமாகும், இதை கொண்டு வேற்றுகிரகங்களை அடையக்கூடிய தொழில்நுட்ப திறன்களை நம்மால் உருவாக்கி கொள்ள முடியும் என்று ஜெர்ரி அப்போதே கோட்பாடுகள் வகுத்தார்

  3 வரிசை

  கிடைத்த சிக்னலில் "6EQUJ5" என்ற எழுத்துக்கள் ஒரு வரிசையிலும், "6" , "7" ஆகியவைகள் வெவ்வேறு வரிசையிலும் ஜெர்ரியால் வட்டமிடப்பட்டு இருக்கின்றன. இதில் 1-9 வரையிலான எண்கள் குறியீடாகும், ஆங்கில எழுத்துகள் கிடைக்கப்பெற்ற சிக்னலின் வலிமையை உணர்த்தின. இப்படி பல வகையான சிக்கலான முறைகளில் ஆய்வு செய்தும்கூட 'வாவ்' சிக்னலின் விளக்கம் கண்டுபிடிக்கப்படவேயில்லை.

  Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?

  "சந்தேகத்திற்கிடமான"

  பீடர்ஸ்பர்க் கல்லூரியின் பேராசிரியரும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆய்வாளர் ஆன அந்தோனியோ பாரிஸ் புதிய வகை அண்ட நிகழ்வு முயற்ச்சியை நிகழ்த்த இருக்கிறார். அதுமட்டுமின்றி வாவ் சிக்னல் கிடைக்கப்பெற உதவியதாக கூறப்படும் இரண்டு "சந்தேகத்திற்கிடமான" வால்மீன்கள் (266P/Christensen and 335P/Gibbs) முறையே 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  இப்படியிருக்க 1977-ஆம் ஆண்டில் இப்படியான இரண்டு விண்மீன்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமல், வாவ் சிக்னல் பதிவாக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் பாரிஸ் கருத்துக் கூறியுள்ளார். மேலும் அவர், தற்செயலாக வேற்றுகிரக வாசிகளை கண்டுப்பிடித்து விட முடியாது. ஆனால், அவர்கள் எந்த வகையான 'டெம்ப்ளேட்' (Template) பயன் படுத்துகிறார்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் அதிர்வெண் ஆகியவைகளை நெருக்கமான அனுமானத்தில் கணித்தால் அவர்களை அடைய முடியும் என்றும் பாரிஸ் கருத்து கூறியுள்ளார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Conspiracist Discovers Mysterious 21,000-Km Long Line Running Across The Globe, On Google Earth. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more