பதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.! மிரட்டும் வைரல் வீடியோ.!

|

பதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.!

அமெரிக்க தொடர்ந்து அதிநவீன ஆயுந்தங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி மிகவும் ஆழமான பதுங்கு குழிகளை அழிக்கும் புதிய குண்டுகளை சோதிப்பது போன்ற

வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

பதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.!  மிரட்டும் வைரல்

மேலும் இதுதொடர்பாக அந்நாட்டு விமானப்படை வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் பி 2 ஸ்டீல்த் (B2 stealth) வகை அதி நவீன விமானம் மூலம் பதுங்கு குழிகளையும், சுரங்கப் பாதைகளையும் அழிக்கும் புதிய குண்டு ஒன்றை வீசுவது போல வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 13 ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த குண்டு 20 அடி நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜிபிஎஸ் வழிகாட்டுதலின் படி இயக்கப்படும் அந்த குண்டுகள் தரைக்கும் கீழே சுமார் 200அடி ஆழம் வரை ஊடுருவிச் சென்று வெடிக்கும் திறன் கொண்டது. ஈரானுடனான போர்ச்சூழல் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த வீடியோ வெளியாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

76 ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்தார் ஹிட்லர்.

ஹிட்லரின் நாஸி படை போலாந்துக்குள் படையெடுக்கவும், ஆரம்பித்தது இரண்டாம் உலக யுத்தம். இந்த நிகழ்வு நடந்து 76 ஆண்டுகள் ஆகிவிட்டன, இருந்த போதிலும் இரண்டாம் உலகப்போர் மற்றும் ஹிட்லர் ஆகிய இரண்டு மாபெரும் வரலாறுகளும் முடிந்ததாய் இல்லை.

அனுதினம் பல விடயங்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன, சில சமயம் அம்பலமாகி கொண்டிருக்கின்றன என்று கூட சொல்லலாம்.

அப்படியாக, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் நிகழ்காலத்தை தோற்கடிக்கும் சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் (Future Weapons) உருவாக்கப்பட்ட சான்றுகள் வெளியாகி உள்ளன.

வெற்றி பங்கு :

ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.

ஜெர்மானிய வளர்ச்சி :

அதிகப்படியான புகைப்பழக்கத்தின் மூலமாகத்தான் புற்றுநோய் உண்டாகிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜெர்மானிய விஞ்ஞானிகள்தான் - என்பதில் இருந்து அவர்களின் அதிநவீன வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

வருங்காலம் :

அப்படியாக, இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே நாஸி என்ஜினீயர்கள், வருங்காலத்தை மனதில் கொண்டு அதிநவீன ஆயுதங்களை உருவாக்க தொடங்கி விட்டனராம்.

பட்டியல் :

அந்த ஆயுதங்கள் அனைத்தும் ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) என்ற பட்டியலில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமானவை :

அப்படியாக, உருவான அதிநவீன ரகசிய ஆயுதங்களில் - சோனிக் கேனான்கள் (Sonic Cannons), எக்ஸ்-ரே துப்பாக்கிகள் (X-Ray Guns), லேன்ட் க்ரூஸர்ஸ் (Land cruisers) ஆகியவைகள் மிக முக்கியமானவைகளாகும்.

நாளிதழ் :

உலகப்போர் தொடங்கி 67 ஆண்டுகள் ஆனதையோட்டி 'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' (Weapons of WWII) என்ற பெயரில் வெளியான நாளிதழ் ஒன்று ஹிட்லரின் நாஸி ரகசிய ஆயுதங்களை ஆவணப்படுத்தியுள்ளது.

தி ஃப்ரீட்ஸ் எக்ஸ் :

அந்த தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்ட நாஸி ரகசிய ஆயுதங்களில் ஒன்று தான் - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ் (The Fritz X)..!

கொள்ளுத்தாத்தா :

இக்கால நவீன வகை ஆயுதமாக கருதப்படும் 'ஸ்மார்ட் பாம்'களின் (Smart Bomb) கொள்ளுத்தாத்தா தான் இந்த - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ்..!

ரகசியம் :

அது மட்டுமின்றி இது தான் ஹிட்லரின் மிகவும் ரகசியமான ஆயுதங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் ரேடியோ :

317.5 கிலோ வெடி பொருளை உள்ளடக்கிய இந்த ஆயுதமானது வயர்லெஸ் ரேடியோ மூலம் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதமாகும்.

ஹோர்டன் ஹோ 229 பாமர் :

ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆயுதம் தான் - ஹோர்டன் ஹோ 229 பாமர் (Horten Ho 229 bomber)..!

முன்மாதிரி :

இவ்வகை "ஃப்ளையிங் விங்" பாமர் ("flying wing" bomber) தான் உலகின் முதல் முன்மாதிரி கள்ள விமானம் (world's premiere stealth aircraft) ஆகும்..!

வேகம் :

அது மட்டுமின்றி, ஹோர்டன் ஹோ 229 பாமர் ஆனது சுமார் 907 கிலோ வெடிபொருளை உள்ளடக்கி, மணிக்கு 600 மைல் வேகத்தில் பயணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் :

1944-ஆம் ஆண்டு முதன்முதலில் விண்ணில் சீறிப் பாய்ந்த, இவ்வகை விமானம் 2 டர்போ என்ஜீன்கள், 2 பீரங்கிகள் மற்றும் ஆர்4எம் (R4M) ராக்கெட்களை உள்ளடக்கி இருந்ததாம்.

அதிநவீனம் :

நார்த்‌ரப் கிருமன் பி-2 பாம்‌பர் (Northrop Gruman B-2 bomber) போன்ற, இக்கால அதிநவீன ஸ்டீல்த் (Stealth) விமானங்களெல்லாம் பார்த்தே உருவாக்கப்பட்டனர் என்பது தான் ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களின் அதிநவீனமாகும்.

பீட்டல் டேங்ஸ் :

'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' என்ற தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நாஸி படையினரின் மற்றொரு ரகசிய ஆயுதம் தான் - பீட்டல் டேங்ஸ் டு தி அல்லிஸ் (Beetle tanks to the Allies)..!

சிறிய வகை டாங்கி :

பீட்டல் டேங்ஸ் என்பது ஜாய் ஸ்டிக் (Joystick) மற்றும் எலெக்ட்டிரிக் மோட்டார் (Electric motors) அல்லது கேஸ் பர்னர்ஸ் (Gas Burners) பயன்படுத்தி கட்டுப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்ட சிறிய வகை டாங்கிகள் ஆகும்.

ஜாய் ஸ்டிக் :

60 முதல் 100 கிலோ எடை வரை வெடிபொருள் உள்ளடக்கப்பட்ட பீட்டல்கள், ஜாய் ஸ்டிக் கன்ட்ரோல் மூலம் எதிரிகளின் பெரிய வகை டாங்கிகளின் அடியில் செலுத்தப்பட்டு, வெடிக்க வைக்கப்படுமாம்.

டூடல் பக்ஸ் :

இவ்வகை ஆயுதத்தை நாஸி படையினர் "டூடல் பக்ஸ்" (Doodle Bugs - ஒரு வண்டு வகை) என்றும் அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னோடி :

இக்கால அதிநவீன ரேடியோ கன்ட்ரோல்டு (Radio-Controlled) ஆயுதங்களின் முன்னோடி தான் இந்த - 'பீட்டல் டேங்ஸ்', என்பதில் எந்த சந்தேகமுமில்லை..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Best Mobiles in India

English summary
Ominous message US shows B-2 stealth bomber drop bunker busters amid Iran tensions: Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more