அடுத்த 100 ஆண்டுகளுக்குள் இது நடக்கும்?! சமீபத்திய ஆய்வு!

|

சூப்பர்ஃப்ளேர்களை பற்றி அறிந்துகொள்ளும் முன்னர், சோலார்ஃப்ளேர்கள் என்றால் என்ன? சூரியன் வெடிப்பு என்றால் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 மேலோட்டமான புரிதலை நாம் பெறலாம்

மேலோட்டமான புரிதலை நாம் பெறலாம்

முக்கியமாக சூரியநும் ஒரு நட்சத்திரம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சூப்பர்ஃப்ளேர்கள் பற்றிய மேலோட்டமான புரிதலை நாம் பெறலாம்.

விளக்கமாக கூறவேண்டும் என்றால்:

விளக்கமாக கூறவேண்டும் என்றால்:

சூரியன் அதன் மேலோட்டுக்குக் கீழே உருகிய குழம்புநிலையில் உள்ள நிலத்தினை கொண்டுள்ளது. மேலும் அது எந்நேரமும் புயலாக சுழன்றும் கொண்டிருக்கிறது. அதன் தாக்கமானது சூரியனின் மேற்பகுதியில் நிலவும் நிலப் புறவோடுகள் மீது மோதுவதாலும் மற்றும் இன்னும்பிற காரணங்களாலும் அது ஒரு நிலநடுக்கமாக வெளிப்படும் - அந்த நிகழ்வு தான் சோலார்ஃப்ளேர். சுருக்கமாக கூற வேண்டும் என்றால்: சூரியனின் மேற்புறத்தில் நடக்கும் வெடிப்புகள்.

மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

 சரி சூப்பர்ஃப்ளேர்கள் என்றால் என்ன?

சரி சூப்பர்ஃப்ளேர்கள் என்றால் என்ன?

சூப்பர்ஃப்ளேர்கள் என்பது நட்சத்திரங்களில் காணப்படும் மிகவும் வலுவான வெடிப்புகள் ஆகும், அவை வழக்கமான சூரிய எரிப்புகளை (சோலார்ஃபிளேர்களை) விட பத்தாயிரம் மடங்கு ஆற்றல் கொண்டவைகளாக இருக்குமாம். எல்லா நட்சத்திரங்களாலும் சூப்பர்ஃப்ளேர்களை கிளப்பி விட்டுவிட முடியாது. அதற்கு சில தகுதிகள் தேவைப்டுகிறது.

என்னென்ன தகுதிகள்?

என்னென்ன தகுதிகள்?

குறிப்பிட்ட நட்சத்திரம் ஆனது எஃப் 8 முதல் ஜி 8 வரையிலாக இருக்கும் ஸ்பெக்ட்ரல் கிளாஸ் வகை நட்சத்திரங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் அது மிகவும் வேகமாக சுழலும் ஒரு நட்சத்திரமாக இருக்க கூடாது உடன் அது மிகவும் இளமையான ஒரு நட்சத்திரமாக இருக்க கூடாது. இந்த தகுதிகளை கொண்ட ஒரு நட்சத்திரத்தினால் தான் சூப்பர்ஃப்ளேர்களை கிளப்பி விட முடியும். பிறகு என்ன சிக்கல் என்று கேட்கிறீர்களா? இந்த அத்துணை தகுதிகளையும் சூரியன் எனும் நட்சத்திரம் கொண்டுள்ளது, அதுதான் இங்கே சிக்கல்!

ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கியது!

ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கியது!

சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவானது, உலக அழிவு சார்ந்த பீதியை கிளப்பிவிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி, சூரியனில் இருந்து சூப்பர்ஃப்ளேர் எனப்படும் ஒரு பெரிய ஆற்றல் கிளம்பாத வரை மட்டுமே, அதனால் பூமி கிரகத்திற்கான வாழ்வாதாரங்களை வழங்க முடியும். 'தி ஆஸ்ட்ரோபிசிகல்' ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு ஆனது, பால்வெளி மண்டலத்தின் விளிம்புகளை ஆராயும் வானியலாளர்களின் கண்களில் - சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த - சில சூப்பர்ஃபிளேர்ஸ் காட்சிகள் தென்பட்டுள்ளது.

புதிய கோட்பாடுகள் உருவானது எப்படி?

புதிய கோட்பாடுகள் உருவானது எப்படி?

இந்நிகழ்வு எதனால் ஏற்படுகிறது என்பதற்கான துல்லியமான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் கூட, நிகழும் சூப்பர்ஃபிளேரின் பேராற்றல் ஆனது நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து கூட பார்க்க முடியும் என்பது மட்டும் கண்டறியப்பட்டு இருந்தது. சிறிது காலங்களுக்கு முன்பு வரையிலாக, இத்தகைய வெடிப்புகள் பெரும்பாலும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் நச்சத்திரங்களில் மட்டுமே நிகழும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஆய்வு முடிவுகளின் படி, பூமி கிரகத்தின் நெருங்கிய வேலைகளில் இருப்பது போன்ற பழைய, அமைதியான நட்சத்திரங்களில் தான் சூப்பர்ஃப்ளேர்கள் ஏற்படக்கூடும் என்பது உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.!தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.!

எப்போது நடக்கலாம்?

எப்போது நடக்கலாம்?

"மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றான இது ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நிகழும் போது, பூமி கிரகத்தின் வாழ்க்கை பாதிக்கப்படலாம்" என்கிறார் வெளியான ஆய்வின் முதன்மை எழுத்தாளர் ஆன யூட்டா நோட்சு. ஒருவேளை சூரியனில் இருந்து ஒரு சூப்பர் ஃப்ளேர் வெடித்து கிளம்பினால், நாம் வாழும் பூமி கிரகம் ஆனது பீச்சியடிக்கப்படும் உயர் ஆற்றல் கதிர்வீச்சின் அலைகளால் தாக்கப்படும். அந்த தாக்கம் ஆனது உலகெங்கிலும் உள்ள மின்னணுவியலை சீர்குலைத்து, பரவலான இருட்டடிப்புகளை ஏற்படுத்துவதோடு சேர்த்து சுற்றுப்பாதையில் (விண்வெளியில்) உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும் பாதிப்படைய செய்யும் என்றும் யூட்டா நோட்சு கூறியுள்ளார்.

சூரியன் நம்மை கொல்லுமா?

சூரியன் நம்மை கொல்லுமா?

மேலும் கூறுகையில்: "சூப்பர்ஃபிளேர்கள் என்பது மிகவும் அரிதான விண்வெளி நிகழ்வுகள் தான் என்று எங்கள் ஆய்வு காட்டுகிறது. இருந்தாலும் கூட அடுத்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நிகழ்வை நாம் அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கால சூரியன் ஆனது, இளமையாக இருந்தபோது, மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது, ஏனெனில் அது மிகவும் வேகமாக சுழன்றது மற்றும் அதிக சக்திவாய்ந்த ஃபிளேர்களை உருவாக்கியது. ஆனால் தற்போதைய நவீனகால சூரியனில் இதுபோன்ற பெரிய எரிப்புகள் மிகக்குறைந்த அதிர்வெண்ணின் கீழ் நிகழ்கின்றனவா என்பது எங்களுக்குத் தெரியாது."

சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தரவுகளின் படி!

சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தரவுகளின் படி!

நிகழ்த்தப்பட்ட ஆய்வை பொறுத்தவரை, சூப்பர்ஃப் ளேர்கள் பற்றி இதுவரை அறியப்படாத விவரங்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தின் கீழ் நோட்சு மற்றும் ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு பல தரவுகளை சேகரித்தது. நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் வாயிலாக, இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது நமது சூரியனை ஒத்த 43 நட்சத்திரங்களிலிருந்து வந்த சூப்பர் ஃப்ளேர்களின் பட்டியலை சேகரித்ததுள்ளது.

சந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு! என்னது அது?சந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு! என்னது அது?

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!?

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!?

பின்னர் ஆராய்ச்சியாளர்கள், அந்த அரிய நிகழ்வுகளை கடுமையான புள்ளிவிவர பகுப்பாய்விற்குள் உட்படுத்தி உள்ளனர். முடிவில், சூப்பர்ஃப்ளேர்கள் என்பது முழுக்க முழுக்க நட்சத்திரத்தின் வயது சம்பந்தப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் நமது சூரியன் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு நட்சத்திரம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Oh no Superflare may destroy Earth one day : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X