பதவியில் இருந்து விலகும் முன் ஒபாமாவின் கடைசி அறிவிப்பு இது தானா.??
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய இருக்கின்றது. புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது அனைவரும் அறிந்த செய்தி தான்.
இதையும் பாருங்கள் : கண்டுபிடிப்புகள் புதுசு தான், ஆனா அது ரொம்ப பழசு!!
அமெரிக்க அதிபர் தேர்தலின் பிரச்சாரங்கள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் பதவிக்காலம் முடிய இருக்கும் ஒபாமா தனது பதிவியில் இருந்து விலகும் முன் அறிவிக்க இருக்கும் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன..

ஏலியன்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக்காலம் நிறைவடையும் முன் ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என பல்வேறு சதியாலோசனை கோட்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிஸ்க்ளோஷர் கேம்பெயினர்கள்
2016 ஆம் ஆண்டு வேற்றுக்கிரக வாசம் குறித்த உண்மைகள் வெளியாகலாம் என டிஸ்க்ளோஷர் கேம்பெயினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரகசியம்
உலக அரசாங்கங்களுக்கும் வேற்றுக் கிரக வாசிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பல காலமாக ரகசியமானதாகவே இருக்கின்றது. இந்த ஆண்டு ஏலியன் சார்ந்த ரகசியங்கள் முழுமையாக அம்பலப்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தரகர்
யுஎஃப்ஒ தகவல்களை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ தரகராக இருக்கும் ஸ்டீபன் பசாட் ட்ரூத் எம்பார்கோ (Truth Embargo) என்ற பெயரில் பல ஆண்டுகளாக இது குறித்த பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

செய்தி
ஏலியன் சார்ந்த அறிவிப்பு இயேசு கிறிஸ்து திரும்ப வருவதை விட ஆழமானதாக இருக்கும் எனக் காணொளி பேட்டி ஒன்றில் பசாட் தெரிவித்தார்.

அறிவிப்பு
வேற்றுக்கிரக வாசம் குறித்த அறிவிப்பு அமெரிக்க அரசியல் மரபியங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வரலாற்று
அமெரிக்க அதிபரின் வேற்றுக்கிரக வாசம் குறித்த அறிவிப்பு உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோட்பாடு
ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ எனும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் குறித்த பல்வேறு சர்ச்சைகளை நாம் கடந்து வந்த நிலையில் ஏலியன் சார்ந்த அறிவிப்பு எந்தளவு ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்ப்பு
ஏலியன் குறித்த அறிவிப்பு உலக வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு நிச்சயம் அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பசாட் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்கள்
கூகுள் மேப்ஸில் மறைக்கப்படும் இடங்கள், உள்ளே இருப்பது இதுதான்..!?
நாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்..!? பூமிக்கு வருகை தந்தது யார்..?


Click it and Unblock the Notifications