சுற்றி 350 கிமீ தூரத்துக்கும் இனி இந்தியா தான் ராஜாதி ராஜா; பாக். மீண்டும் Silent Mode.!

ஒடிசா கடற்கரையிலிருந்து, இந்திய கடற்படை கப்பலில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமான எட்டியுள்ளது தனுஷ் ஏவுகணை. இந்த ஏவுகணை சுமார் 500 கிலோ எடையுள்ளவொரு ஏவுகணையாகும்.

|

சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அசாதாரணமாக எட்டி அழிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத பலமான அக்னி -2 ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமான முடித்த கையோடு இந்திய ராணுவம் மீண்டுமொரு வெற்றிகரமான தனுஷ் பல்லிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது.

இதில் சுவாரசியம் என்னவெனில், இதற்கு முன் நடந்த சர்பேஸ்-டூ-சர்பேஸ் ஏவுகணையான அக்னி-2 ஏவுகணை சோதனையும் சரி, இந்த தனுஷ் ஏவுகணையும் சரி, இரண்டுமே அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் கொண்டவைகளாகும். ஆக எப்படி பார்த்தாலும், இனி பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவை மிரட்ட "டாப்பிக்" கிடைக்காது. ஏனெனில் இப்போது - ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா.!

சுமார் 500 கிலோ எடையுள்ளவொரு  ஏவுகணை.!

சுமார் 500 கிலோ எடையுள்ளவொரு ஏவுகணை.!

ஒடிசா கடற்கரையிலிருந்து, இந்திய கடற்படை கப்பலில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமான எட்டியுள்ளது தனுஷ் ஏவுகணை. இந்த ஏவுகணை சுமார் 500 கிலோ எடையுள்ளவொரு ஏவுகணையாகும்.

நிலம் மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் திறன்.!

நிலம் மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் திறன்.!

தனுஷ் ஏவுகணையானது, நிலம் மற்றும் கடல் அடிப்படையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக உள்ளதா என்பதை சோதிக்கும் நோக்கத்தின்கீழ், பாதுகாப்பு வட்டாரங்களின் மூலோபாய கட்டளை படைகளின் (எஸ்.எஃப்.சி) மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

"ஒரு முழுமையான" வெற்றி.!

"ஏவுகணை ஏவுதல் இந்திய கடற்படையின் எஸ்எப்சி (SFC) பயிற்சிக்கான ஒரு பகுதியாகும்" எனக்கூறிய ஒரு அதிகாரி, இந்த சோதனையானது "ஒரு முழுமையான" வெற்றியை பெற்றுள்ளதாகவும், சோதிக்கப்பட்ட ஏவுகணையானது அதன் அனைத்து பணி இலக்குகளும் சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆர்டிஓ உருவாக்கிய ஐந்து ஏவுகணைகளில் இது ஒன்றாகும்.!

ஆர்டிஓ உருவாக்கிய ஐந்து ஏவுகணைகளில் இது ஒன்றாகும்.!

சிங்கிள்-ஸ்டேஜ் மற்றும் லிக்வுட்-ப்ரோபெல்டு ஏவுகணையான 'தனுஷ்', ஏற்கனவே பாதுகாப்பு சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஏவுகணை அபிவிருத்தி திட்டத்தின் (IGMDP) கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ உருவாக்கிய ஐந்து ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும்.

கண்டம் தாண்டி அழிக்கக்கூடியது.!

கண்டம் தாண்டி அழிக்கக்கூடியது.!

முன்னதாக, கடந்த ஏப்ரல் 9, 2015 அன்று தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. கடைசியாக நடந்த அக்னி 2 ஏவுகணை சோதனையை பொறுத்தமட்டில், அதும் அணுவாயுதம் சுமந்து செல்லும் திறன்கொண்ட ஏவுகணையாகும். ஆனால் அது ஒரு 20 மீட்டர் நீளமுள்ள கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கக்கூடிய (பாலிஸ்டிக்), 17 டன் எடை கொண்ட ஒரு ஏவுகணையாகும். மேலும் அது சுமார் 1000 கிலோ எடையை சுமந்து கொண்டு 2,000 கிமீ தூரத்திற்கு பாயும் திறன் கொண்டது

தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு.!

தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு.!

இன்னும் குறிப்பிட்டு கூறவேண்டுமெனில் அக்னி -2 என்பது ஒட்டு இரண்டு கட்ட பாதை கொண்ட ஏவுகணையாகும். ஒரு மேம்பட்ட மற்றும் உயர் துல்லியமான வழிசெலுத்தல் அமைப்பு (high accuracy navigation system) மற்றும் ஒரு தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (unique command and control system ) இது வழிநடத்தப்படும்.

துல்லியமான வெற்றி

துல்லியமான வெற்றி

இந்த சமீபத்திய சோதனையின் முழு போக்கும் - அதிநவீன ரேடார்கள், டெலிமெட்ரி கண்காணிப்பு நிலையங்கள், எலெக்ட்ரோ-ஆப்டிக் கருவிகள் மற்றும் - வங்க கடலோரப் பகுதியின் வரம்பிற்கு கீழ் அமைந்துள்ள இரண்டு கடற்படை கப்பல்களால் கண்காணிக்கப்பட்டு, துல்லியமான வெற்றியை அடைந்துள்ளது.

லாஜிஸ்டிக் ஆதரவு

லாஜிஸ்டிக் ஆதரவு

அக்னி 2 ஏவுகணையானது ஏற்கனவே சேவையில் ஈடுபட்டுள்ளதென்பதும், இந்த சமீபத்திய சோதனையானது, இராணுவ ஆராய்ச்சி மூலோபாய படைகளின் (SFC) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வழங்கிய லாஜிஸ்டிக் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அக்னி ஏவுகணைகளின் வீச்சு

அக்னி ஏவுகணைகளின் வீச்சு

இதர அக்னி ஏவுகணைகளின் வீச்சை பொறுத்தமட்டில் அக்னி 1 ஆனது 700 கிமீ வீச்சும், அக்னி -3 ஆனது 3,000 கிமீ வீச்சும், அக்னி -4 மற்றும் அக்னி-5 ஆகுல ஏவுகணைகள் மிக நீண்ட தூர தாக்குதல் எல்லைகளை கொண்டுள்ளன. அக்னி-2 ஏவுகணையின் முதல் சோதனையானது கடந்த ஏப்ரல் 11, 1999 அன்றும் பின்னர் இறுதியாக மே 4, 2017 அன்றும் நடந்தது.

Best Mobiles in India

English summary
Nuclear Capable 'Dhanush' Ballistic Missile With 350Km Range Successfully Test-Fired. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X