இந்தியா VS சீனா : கொஞ்சம் அப்படி ஓரமா போய் விளையாடுங்க.!

|

ஒரு அரசாங்க அலுவகத்துல வேலை பாக்குற கடைநிலை ஊழியன் கூட எவ்வளவு பந்தா காட்ட முடியுமோ அவ்ளோ பந்தா காட்டி, தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வர்ற குடிமக்கள்கிட்ட என்ன என்ன உருட்டல் மிரட்டல்களை செய்வார்கள் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம், அனுபவப்பட்டிருப்போம்.

இது வெறும் தமிழகத்தின் அல்லது இந்தியாவின் நிலைப்பாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான அதிகார மற்றும் ஆளும் வர்க்கத்தினைரையும் குனியும் கூட்டம் அப்படிதான் உருவாக்கி வைத்திருக்கிறது. இதற்கு விதிவிலக்கும் உண்டு.

இந்தியா VS சீனா : கொஞ்சம் அப்படி ஓரமா போய் விளையாடுங்க.!

குனிய வேண்டிய அவசியமோ, கும்பிடு போட வேண்டிய தேவையோ இல்லை. மதித்தாலும் மதிக்காவிட்டாலும் - நானே ராஜா நானே மந்திரி - நான் செய்வதை செய்துகொண்டே தான் இருப்பேன். ஏனெனில் என்னிடம் அதிகாரம், பலம் இருக்கிறது என்ற சில உலக நாட்டாமைகளும் உண்டு. சுட்டிக்காட்டி கூற வேண்டுமெனில் உலகின் மாபெரும் அணுவாயுத தேசங்களாக திகழும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் அந்த பட்டியலிலேயே இல்லாத ஆனால் மிகவும் ஆர்வக்கோளாறு நிறைந்த வடகொரியா ஆகிய நாடுகளை கூறலாம்.

ஓரமாக போய் விளையாடுங்கப்பா

ஓரமாக போய் விளையாடுங்கப்பா

இந்தியா மற்றும் பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களைக் கையகப்படுத்துகின்றன என்றாலும் கூட உலகின் அணுவாயுதங்களில் 95%-க்கும் மேற்பட்டவைகளை அமெரிக்க-ரஷ்ய சரக்குகளில் தான் உள்ளன. அதிலும் அமெரிக்கா, அணு ஆயுதம் சார்ந்த விடயத்தின் மீது காலம் காலமாக காட்டிவரும் ஈடுபாட்டையும், அதற்காக செய்யும் செலவையும் பற்றி உங்களுக்கு தெரிந்தால் இந்தியாவையும் சீனாவையும் அப்படி ஓரமாக போய் விளையாடுங்கப்பா என்று நீங்களே சொல்வீர்கள்.

1945 :

1945 :

முதல் அணுகுண்டை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமான மேன்ஹாட்டன் ப்ராஜக்ட்காக ( the Manhattan Project) அமெரிக்க செய்த செலவு : 20,000,000,000 டாலர்கள்.

1951 :

1951 :

அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட அணு ஏவுகணைகளின் மொத்த எண்ணிக்கை : 67,500க்கு மேல்.

1966 :

1966 :

அமெரிக்காவால் அதிகபட்சமான அணு ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் தயாரிக்கப்பட்ட ஆண்டு 1966. எண்ணிக்கை : 32,193.

1945 -1990 :

1945 -1990 :

1945 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலாக மட்டுமே 65 வகைகளில் மொத்தம் 70,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை அமெரிக்கா தயாரித்தது.

1956 & 1957 :

1956 & 1957 :

956 மற்றும் 1957 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் கோரிக்கை விடுத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை : 151,000.

சதுர மைல்கள் :

சதுர மைல்கள் :

அமெரிக்காவில் உள்ள 'அறியப்பட்ட' அணு ஆயுத உற்பத்தி தளங்களின் மொத்தம் பரப்பளவு : 15,654 சதுர மைல்கள்.

எமர்ஜென்சி நிலை :

எமர்ஜென்சி நிலை :

அணு ஆயுத போரின் போது ஜனாதிபதியின் கீழ் எமர்ஜென்சி நிலையில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை : 75-க்கும் மேல்.

1988 :

1988 :

அணு ஆயுத போருக்கு பிறகு பயன்படுத்தவதற்காகவே என மவுண்ட் போனி திட்டத்தின் கீழ் 'ஃபெடரல் ரீசர்வ்'வில் 1988 ஆம் ஆண்டு வரையிலாக சேர்த்து வைக்கப்பட்ட தொகை : 2,000,000,000 டாலருக்கும் மேல்.

1954 :

1954 :

இதுவரை நிகழ்த்தப்பட்ட அணு ஆயுத வெடிப்புகளிலேயே மிகவும் பெரியது மார்ச் 1, 1954-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட 15 மெகா டன் அளவிலான 'ப்ராவோ' (Bravo).

காணாமல் போனவைகள் :

காணாமல் போனவைகள் :

தொலைந்து போய் இன்றைய தேதி வரையிலாக மீட்கப்படாத அமெரிக்க அணு ஆயுதங்களின் எண்ணிக்கை : 11.

Best Mobiles in India

English summary
Not India or China US is the biggest nuclear weapon stockpiles. Read more abuout this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X