நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு: 2019ல் மூன்றாம் உலகப்போர்.!

மூன்று உலகப்போர் பற்றிய நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு உள்ளதாக சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

|

நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் பற்றிய பல்வேறு ஆய்வுகளின் படி, 2019ல் அறிவியலில் மிகப்பெரிய மேம்பாடுகள் இருக்கும் எனவும், பேரழிவை விளைவிக்கும் போர் மற்றும் இதுவரை கண்டிராத இயற்கை பேரழிவுகள் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு: 2019ல் மூன்றாம் உலகப்போர்.!

எதிர்காலத்தில் நடக்கக்கூடியவற்றை கணிக்கக்கூடிய வல்லுநர்கள், 1555ல் வெளியான "Les Propheties" எனும் புத்தகத்தை ஆராய்ந்த பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அந்த புத்தகத்தில், இரண்டு வல்லரசு நாடுகள் இடையே 2019ல் துவங்கும் மூன்றாம் உலகப்போர் 27 ஆண்டுகள் நீடிக்கும் என நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். போரில் ஈடுபடும் அந்த வல்லரசு நாடுகள் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அல்லது அமெரிக்கா மற்றும் வடகொரியாவாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-ம் இந்த நீண்ட போரில் பங்குவகிக்கும் சூழலும் உள்ளது.

பேரழிவை ஏற்படுத்தும்

பேரழிவை ஏற்படுத்தும்

இதுவரை எந்தவொரு முடிவுக்கும் வராதநிலையில், ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதமும், மத்திய கிழக்கு நாடுகளில் மத தீவிரவாதமும் அதிகரிக்கும் என ப்ரென்ச் ஜோதிடரும் கணித்துள்ளார். மேலும், காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகாணும் வகையில் உலக அரசியல் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவார்கள் எனவும், ஆனால் அது கலிபோர்னியா மற்றும் கனடாவின் வான்கவ்வர் தீவுகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை தடுக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு மேல்

200 ஆண்டுகளுக்கு மேல்

இவையனைத்தும் பார்பதற்கு ஆபத்தானதாக தெரிந்தாலும், மனிதர்களுக்கு அது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தாது. இந்த.ப்ரென்ச் தீர்த்ததரிசியின் கூற்றுப்படி, விலங்குகளுடன் பேசும் தொழில்நுட்பத்தை நம்மால் உருவாக்கமுடியும் எனவும், மேம்பட்ட மருத்துவ அறிவியல் மூலம் மனிதர்களை 200 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சியாளர் வாழ வைப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.

மூன்று உலகப்போர்

மூன்று உலகப்போர்

மூன்று உலகப்போர் பற்றிய நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு உள்ளதாக சில வல்லுநர்கள் கூறுகின்றனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வல்லரசு நாடுகளுக்கு இடையே எந்தவொரு முக்கிய யுத்தமும் நிகழவில்லை. உண்மையான ஐரோப்பிய போருக்கு பிந்தைய செயல்திட்டம், அமைதி, சமூகநீதி மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டது.

எனினும் வளர்ந்துவரும் தேசியவாதம் காரணமாக இந்த செயல்திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டால், இரத்தக்களரிகளுடன் கூடிய கண்டங்களுக்கு இடையேயான போருக்கு வரலாற்றில் அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

வல்லுரசு நாடுகளுக்கு இடையே ஏற்படும்

வல்லுரசு நாடுகளுக்கு இடையே ஏற்படும்

ஆனால் 20ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டு உலகப்போர்களும் எதிர்பாராத விதமாக நடைபெற்றதையும் கவனிக்க வேண்டும். எனவே எதிர்காலத்தில் வல்லுரசு நாடுகளுக்கு இடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகள் பனிப்போருக்கு மட்டுமில்லாமல், உலகப்போருக்கும் வழிவகுக்கலாம். மற்றும் 21ம் நூற்றாண்டில் நடைபெறவுள்ள எதிர்கால போர்களுக்கு 3 முக்கிய காரணிகள் இருக்கலாம்.

அமெரிக்க மற்றும் சீனா

அமெரிக்க மற்றும் சீனா

முதலாவது, உக்ரைன் தொடர்பான கருத்துவேறுபாடு ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையேயான பனிப்போருக்கு வழிவகுக்கும். இரண்டாவதாக, ஐஎஸ்ஐஎஸ் மற்றும் சிரிய போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் ஏற்படலாம். மூன்றாவது, அமெரிக்க மற்றும் சீனா இடையேயான மோதல் காரணமாக ஆசிய பசிபிக் பகுதியில் போர் ஏற்படலாம்.

Best Mobiles in India

English summary
Nostradamus predicted the Third World War for 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X