சத்தம் போடாமல் வடகொரியா செய்த வேலை! காட்டிக்கொடுத்த செயற்கைகோள் புகைப்படம்!

சிலரால் கிறுக்குப்பிடித்த ஆளுமை என்றும் மற்றும் சிலரால் முரட்டுத்தனமான ஆளுமை கொண்ட நாடு என்றும் குறிப்பிடப்படும் வடகொரியா ஆனது சரியாக 18 மாதங்கள் கழித்து அதன் முதல் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.

|

"கழுதை கெட்டா குட்டிச் சுவரு" என்கிற பழமொழிக்கு ஏற்றவாறு, கடந்த சில மாதங்களாக (துல்லியமாக கூற வேண்டும் எனில் ஒன்றரை ஆண்டுகள்) உலக நாடுகளின் மத்தியில் நன்பெயரை வாங்கி கொண்டு வந்த வட கொரியாவும், அந்நாட்டின் "சர்வாதிகாரியான" கிம்மும் மீண்டும் அதன் பழைய போக்கிற்கு திரும்பி உள்ளனர். அதை செயற்கைகோள் புகைப்படம் ஒன்று பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சத்தம் போடாமல் வடகொரியா செய்த வேலை! காட்டிக்கொடுத்த செயற்கைகோள்.!

சிலரால் கிறுக்குப்பிடித்த ஆளுமை என்றும் மற்றும் சிலரால் முரட்டுத்தனமான ஆளுமை கொண்ட நாடு என்றும் குறிப்பிடப்படும் வடகொரியா ஆனது சரியாக 18 மாதங்கள் கழித்து அதன் முதல் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இந்த ஏவுகணை சோதனை ஆனது கடந்த சனிக்கிழமை அதிகாலை (மே 4) நடத்தப்பட்டுள்ளது.

குறுகிய தூர ஏவுகணை ஆகும்

குறுகிய தூர ஏவுகணை ஆகும்

செலுத்தப்பட்ட ஏவுகணை ஆனது பசிபிக் பெருங்கடலில் கிழக்கை நோக்கி சீறிப்பாய்ந்த ஒரு குறுகிய தூர ஏவுகணை ஆகும். இந்த சோதனையை சான் பிரான்சிஸ்கோ நிறுவனமான பிளானட் ஆய்வகத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட புவி-கவனிப்பு டவ் செயற்கைகோள் மூலம் புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் காட்சி

அதிர்ச்சியூட்டும் காட்சி

ஏவுகணை தொடங்கப்பட்ட சில நேரத்திலேயே பதிவாகி உள்ளதால், அந்த புகைப்படத்தில் ஏவுகணையின் வளைவு, காற்று-துண்டிக்கப்பட்ட புகைப்பகுதி போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சி ஆனது மிகவும் துல்லியமாக பதிவாகி உள்ளது.

மார்ஷல்

"இதுபோன்ற வட கொரியாவின் ஏவுகணை சோதனை ஆனது விண்வெளியில் புகைப்படம் பிடிக்கப்படுவது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒன்றாக தெரிகிறது. நாங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான படங்களை எடுத்தாலும் கூட கோடியில் ஒரு புகைப்படம் தான் இப்படி சிக்கும்" என்று பிளானட் லேப்ஸின் இணை நிறுவனர் மற்றும் சி இ ஓ ஆன வில் மார்ஷல் ட்விட்டர் வழியாக கருத்து தெரிவித்து உள்ளார்.

10 அடி முதல் 16.5 அடி

10 அடி முதல் 16.5 அடி

பிளானட் லேப்ஸின் டவ் க்யூப்சாட் ஆனது ஒரு ரொட்டி விட அளவில் சிறியதாக இருந்தாலும் கூட, அதனால் 10 அடி முதல் 16.5 அடி (3 முதல் 5 மீட்டர்) வரையான ரெசல்யூஷன் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்ய முடியும் என்பதும், பிளானட் லேப்ஸ் ஆனது பூமியின் சுற்றுப்பாதையில் 100 க்கும் மேற்பட்ட செயல்பாட்டு செயற்கைகோள்களை கொண்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம், எப்படியும் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை ஆனது சிக்கி இருக்கும் என்றே என்றே வைத்துக்கொள்ளலாம்.

பசிபிக் கடலின் தென்கிழக்கு தெற்கில்

பசிபிக் கடலின் தென்கிழக்கு தெற்கில்

கடலுக்குள் விழுந்து வெடிக்கும் முன்னதாக, பசிபிக் கடலின் தென்கிழக்கு தெற்கில் சீறிப்பாய்ந்த ஏவுகணை ஆனது சுமார் 44 மைல்கள் முதல் 149 மைல்களுக்கு (70 முதல் 240 கி.மீ) இடையிலேயான ஒரு தூரத்தை கடந்து இருக்கலாம் என்று தென் கொரிய இராணுவ அதிகாரிகள் மேற்கோளிட்டு அசோசியேட்டட் பிரஸிடம் கூறி உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணை ஆனது ரஷ்யாவின் 9கே720 இஸ்கேன்டர் எனும் சிறிய அளவிலான மற்றும் குறுகிய தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஏவுகணையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்யாவின் இஸ்கேன்டர் ஏவுகணை ஆனது அணு ஆயுதத்தை சுமக்கும் திறன் கொண்ட மற்றும் 310 மைல் (500 கிமீ) தூரத்தை கடந்து தாக்கும் வல்லமை கொண்ட ஒரு ஏவுகணை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஏவுகணை

கடைசி ஏவுகணை

இதற்கு முன்னதாக வட கொரியா செய்த கடைசி ஏவுகணை சோதனை ஆனது கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்தது. சமீபத்திய சோதனையோடு ஒப்பிடுகையில் அந்த ஏவுகணை சோதனை ஆனது மிகவும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. 2017 நவம்பரில் சீறிப்பாய்ந்த அந்த ஏவுகணை ஆனது கிட்டத்தட்ட 54 நிமிடங்களுக்கு பயணித்து, சுமார் 620 மைல்கள் (1000 கிலோமீட்டர்) தொலைவை எட்டிய பின்னர் கடலுக்குள் விழுந்து வெடித்தது. இதிலிந்து அந்த ஏவுகணை ஆனது ஒரு கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை என்பதை புரிந்து கொள்ளலாம்.

சுமார் 8,100 மைல்களை கூட கடக்குமாம்

சுமார் 8,100 மைல்களை கூட கடக்குமாம்

ஆனால் உண்மையில் அந்த ஏவுகணை ஆனது சுமார் 8,100 மைல்களை கூட கடக்குமாம், அதாவது கிட்டத்தட்ட 13,000 கிமீ. இது உண்மையாகும் பட்சத்தில் வடகொரியாவின் இந்த ஏவுகணை ஆனது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களை தத்துவார்த்த ரீதியாக அடைய முடியும்.

அணுவாயுதத் தொழில்நுட்பம்

அணுவாயுதத் தொழில்நுட்பம்

நவம்பர் 2017 சோதனையை தொடர்ந்து, சர்வதேச சமூகம் ஆனது வட கொரியா மீது பல சுற்று தடைகளை சுமத்தியுள்ளது என்பதும், அதன் விளைவாக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான சோதனைகளை நடந்த மாட்டோம் என்று வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 கிம்மின் அதிருப்தியும் வெளிப்படுத்துகிறது

கிம்மின் அதிருப்தியும் வெளிப்படுத்துகிறது

ஆனால் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை வெளியீடு ஆனது கிம்மின் வாக்குறுதியை மீறுவதோடு மட்டுமின்றி, பேச்சுவார்த்தைகளின் மீதான கிம்மின் அதிருப்தியும் வெளிப்படுத்துகிறது, மேலும் இன்னும் சில வியத்தகு எதிர்ப்புகளை வடகொரியா நிகழ்த்தலாம் என்றும் பீதி கிளம்பியுள்ளது.


கலிபோர்னியாவின் மான்டேரியில் உள்ள, மிடில்பீரியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்ஸின் ஆய்வாளர் மற்றும் இயக்குநரான ஜெப்ரி லெவிஸ், "இது ஒரு எச்சரிக்கை மட்டுமே, இன்னும் நிறைய வரவிருக்கிறது. அவர்களை பொறுத்தவரை இதுவொரு அற்புதமான மற்றும் சிறிய தொடக்கமாகும். இந்த இடத்தில் இருந்து அவர்கள் பணியாற்ற தொடங்குவார்கள் " என்று கூறி உள்ளார்.

Best Mobiles in India

English summary
North Koreas Short-Range Missile Test Spotted from Space Photo: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X