கிம் ஜொங் உன்னின் முகமூடியை கிழித்த Operation GhostSecret; இப்போ பேசு.!

வடகொரியாவின் ஹிட்டன் கோப்ரா யூனிட் ஆனது லாசரஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது மிகவும் அதிநவீன நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஒரு யூனிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

|

"இனி அணு ஆயுத சோதனைகளை நடத்த மாட்டோம்" என்கிற "இன்பமான" தகவலை வடகொரியா வெளியிட்ட போது, எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. அதை சின்சான் பாணியில் கூறினால் : இனி வடகொரியாவிலும், அதன் அண்டை மற்றும் எதிரி நாடுகளிலும் "அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி" என்கிற வசனம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று நம்பினேன்.

கிம் ஜொங் உன்னின் முகமூடியை கிழித்த Operation GhostSecret; இப்போ பேசு!

அந்த "சின்சான் அமைதி"யில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டியது போல ஒரு - நம்பமுடியாத விபத்து ஏற்பட்டு, பல ஆயுதங்கள் சிதறியதின் விளைவாக, வடகொரியாவின் பிரதான அணுசக்தி சோதனை தளம் சரிந்து விட்டதாக - தகவல் வெளியானது. இனி அங்கு சோதனைகள் நடத்துவது என்பது மிகவும் பாதுகாப்பற்றதாக இருக்கும் மற்றும் அதை அப்படியே விட்டாலும் கூட கதிர்வீச்சு கசிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சீன புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வடகொரியா சத்தமின்றி பார்த்து வந்த வேலை.!

வடகொரியா சத்தமின்றி பார்த்து வந்த வேலை.!

என்னடா இது வடகொரியாவிற்கு வந்த சத்திய சோதனை என்று லேசாக கருணைப்பட ஆரம்பித்த உடனேயே, வடகொரியா சத்தமின்றி பார்த்து வந்த வேலை பற்றிய தகவல் வெளியானது, உடன் நீயெல்லாம் எங்க திருந்த போற.? என்கிற கடுப்பும் கூடவே வெளியானது. வட கொரியாவுடன் இணைக்கப்பட்ட ஒரு ஹேக்கிங் குழுவானது, இதுவரை மொத்தம் 17 நாடுகளில் பரவலான மற்றும் தொடர்ச்சியான ஹேக்கிங் வேலைகளை (சைபர் அட்டாக்) செய்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த மாதிரியான சைபர் திருட்டு.?

எந்த மாதிரியான சைபர் திருட்டு.?

McAfee Advanced Threat Research வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையின் படி, "ஆப்ரேஷன் GhostSecret என்கிற பெயரின் கீழ், முக்கியமான உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு, நிதி, சுகாதார பாதுகாப்பு, மற்றும் தொலை தொடர்பு உட்பட பல நாட்டு துறைகளை மற்றும் தொழில்கள் பற்றிய தகவல்களை, வடகொரியாவின் துணைகொண்ட ஹேக்கிங் குழு திருட முற்பட்டுள்ளது" என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

வடகொரியா சிக்கியது எப்படி.?

வடகொரியா சிக்கியது எப்படி.?

இந்த உலகளாவிய சைபர் திருட்டில், வட கொரியாவின் சைபர் யூனிட் ஆன ஹிட்டன் கோப்ராவுடன் தொடர்புடைய கருவிகள் (டூல்ஸ்) மற்றும் தீம்பொருள் நிரல்கள் (மால்வேர்) பயன்படுத்தப்பட்டுள்ளன. வடகொரியாவின் ஹிட்டன் கோப்ரா யூனிட் ஆனது லாசரஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது மிகவும் அதிநவீன நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஒரு யூனிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் இலக்கு என்ன.?

இதன் இலக்கு என்ன.?

கூறப்படும் Operation GhostSecret ஆனது கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் பல துருக்கிய நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் மீது பாரிய சைபர் குற்றங்களை நிகழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது. மொத்தம் 17 நாடுகளின் தொழில்க துறைகளை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த ஹேக்கிங் குழுவானது இன்றும் ஆக்டிவ் ஆக இருக்கிறது என்பது தான் மிக மோசமான தகவல்.

யாரெல்லாம் பாதிப்பை சந்தித்துள்ளனர்.?

யாரெல்லாம் பாதிப்பை சந்தித்துள்ளனர்.?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள சேவையகங்கள் (சர்வர்கள்) கடந்த மார்ச் 15 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையே பல முறை பாதிக்கப்பட்டன என்பதும், குறிப்பாக, எந்த நாட்டிலும் இல்லாத அளவில் தாய்லாந்தில் கிட்டத்தட்ட 50 சர்வர்கள் (பெரும்பாலானவைகள்) பாதிக்கப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவன் எங்க திருந்த போறான்.!

இவன் எங்க திருந்த போறான்.!

இந்த தகவல்கள் எல்லாம் வெளியான பின்னர் தான், வடகொரியா ஏன் மிகவும் சமத்தாக நடந்து கொண்டது என்பதின் பின்னணி புரிய வந்தது. "ஒன்ஸ் ஏ கிங், ஆல்வேஸ் ஏ கிங்" (ஒருமுறை மன்னன் ஆனவன், எப்போதுமே மன்னன் தான்) என்கிறவொரு ஆங்கில பழமொழியை போல "ஒருமுறை சர்வாதிகாரத்தை கையாண்டவன், எப்போதுமே அதை தான் கையாளுவான்" என்று கூறி முடித்துக் கொள்கிறேன் .

Best Mobiles in India

English summary
North Korean-linked hackers stole data from 17 countries in an ongoing cyber attack that's far bigger than we thought. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X