இது தேவையா..? 'பல்ப் மேல் பல்ப்' வாங்கும் வடகொரியா..!?

|

வடகொரியா - எதில் குறை வைக்கிறதோ, இல்லையோ..!? உலக நாடுகளிலும், அருகாமையில் உள்ள தீபகற்ப பிரதேசங்களிலும் அடிக்கடி பீதியை கிளப்புவதில் எந்த விதமான குறையும் வைப்பதே இல்லை. அதாவது, அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்துகிறது..!

வடகொரியாவின் சோதனைகள், தாங்கள் ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறோம், நங்கள் பலமானவர்கள் என்பதை உலக நாடுகளுக்கு புரிய வைப்பதற்காக வைக்கும் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதா ? அல்லது நிஜமாகவே வடகொரியா தனது நாட்டின் பாதுகாப்பை வளர்த்துக் கொள்கிறதா..? என்பது வரிசையாக சோதனைகளை நிகழ்த்தித்தள்ளும் வடகொரியாவிற்கு மட்டுமே தெரியும்..!

#1

#1

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகள் எதற்காக நடக்கிறதோ என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும்கூட அதன் பெரும்பாலான சோதனைகள் படுதோல்வியில் முடிகின்றன என்பது மட்டும் உறுதி..!

#2

#2

அப்படியாக, சமீபத்தில் வடகொரியா இதுவரை தான் முயற்சித்துப் பார்க்காத ஒன்றை நிகழ்த்திப் பார்த்துள்ளது, அதாவது, தொடர்ச்சியாக நான்கு புது ஏவுகணையை இரண்டு மாதங்களுக்குள் ஏவி பரிசோதனை செய்துள்ளது.

#3

#3

இந்த பரிசோதனையில் வடகொரியாவிற்கு கெட்ட செய்தி என்னவெனில், அதன் 4 சோதனைகளுமே தோல்வியில் முடிந்தன, ஒன்று கூட இலக்கை அடையவில்லை.

#5

#5

விசாரணையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 4 ஏவுகணைகளும் புது வகையான ஏவுகணைகள் அல்ல வடகொரியா பல தசாப்தங்களாக உபயோகிக்கும் சில உள்நாட்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட முசுடான் ஏவுகணை தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

#5

#5

உடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணைகள், அணு ஆயுதங்களை உள்ளடக்கிய ஒரு மொபைல் இடைநிலை தூர ஏவுகணை என்றும், இவைகள் அமெரிக்காவின் க்வாம் தளத்தை தாக்கும் அளவு திறன் கொண்டவைகள் என்றும் கூறப்படுகின்றது.

#6

#6

இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாய் தங்களது முசுடான் ஏவுகணையின் நிஜமான செயல்திறனை வடகொரியா பரிசோதனை செய்ததே இல்லை. தற்போதைய சோதனை மூலம் முசுடான் பெருமளவு திறன் வாய்ந்தது அல்ல என்பதை வடகொரியர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

#7

#7

வடகொரியாவிற்கு ஏவுகணை பரிசோதனை தோல்வி என்பது புதிதல்ல இருப்பினும் குறைவான லட்சியம் மற்றும் குறுகிய எல்லைகள் கொண்ட சோதனைகள் கூட தோல்வியில் முடிவது இதுவே முதன் முறையாகும்.

#8

#8


வடகொரியாவின் முசுடான் மிக பலவீனமாக இருப்பதால் உலக நாடுகள் மற்றும் அண்டை தீபகற்ப பிரதேசங்களில் வடகொரியாவினால் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்த வாய்ப்பு மிக குறைவு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

#9

#9

போர்வெறியில் வடகொரியா : "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்..!"


நிஜமாகவே டெஸ்லாதான் பறக்கும் தட்டை உருவாக்கினாரா..?!


அமெரிக்காவை 'மீண்டும் மீண்டும்' கலங்கடிக்கும் வடகொரியா..!

#10

#10

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
North Korea tried to launch a new missile four times in two months. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X