இவரு நல்லவரா? கெட்டவரா? புரிஞ்சுக்கவே முடியலயேப்பா!
வட கொரிய மாநில ஊடகங்கள் இது எந்த வகையான ஆயுதம் என்கிற எந்தவொரு விவரத்தையும் வழங்கவில்லை.
உலகின் வாழும் சர்வாதிகாரி என்று நம்பப்படும், வட கொரிய அதிபரான கிம் ஜொங் உன்னின் மேற்பார்வையின் கீழ், ஒரு புதிய "உயர் தொழில்நுட்ப" தந்திரோபாய ஆயுதம் வெற்றிகரமான முறையில் சோதனை செய்யப்பட்டு உள்ளதாக, வட கொரியா அரசு நடத்தும் ஊடகம் அறிவித்து உள்ளது.

வடகொரியாவின் கே.என்.என்.ஏ செய்தி நிறுவனம் ஆனது கூறப்படும் "ஹை டெக்" ஏவுகணை வகை பற்றிய எந்த விவரத்தையும் வழங்கவில்லை. ஆனால் அது ஒரு நீண்ட காலமாக வளர்ச்சி பனியின் கீழ் இருந்தது என்கிற தகவலை மட்டும் வெளிப்படுத்தி உள்ளது.

ஆயுத சோதனை
இது இந்த ஆண்டு வடகொரியா நடத்திய ஆயுத சோதனையின் முதல் உத்தியோகபூர்வ அறிக்கையாகும் என்பதும், ஜூன் மாதம் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அதிபர் கிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே கொரிய தீபகற்பம் ஆனது அணு ஆயுதம் இல்லாத தளமான இருக்கும் என்கிற ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை தளம்
வட கொரிய மாநில ஊடகங்கள் இது எந்த வகையான ஆயுதம் என்கிற எந்தவொரு விவரத்தையும் வழங்கவில்லை, ஆனால் நாட்டின் வட பகுதிகளில் உள்ள ஏவுகணை தளம் ஆனது விரிவு படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் ஆனது காட்டிக்கொடுத்து உள்ளது.

கிம் கொடுத்த வாக்குறுதிகள்
தென் கொரியாவை பொறுத்தமட்டில், இது எந்த வகையான ஆயுதம் என்பதை கண்டு அறியும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறுகிறது. பல நாடுகளின் கருத்துப்படி, வடகொரியா ஆனது அதன் எந்த ஆயுத வளத்தையும் தடுத்து நிறுத்தவோ அல்லது அதன் ஏவுகணைத் தளங்களை மூடும் உறுதிப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. இது சார்ந்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், "ஜனாதிபதி டிரம்ப்பிற்கு, தலைவர் கிம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.

வடக்கு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
"வடகொரியா நாட்டின் அதிபர் ஆன கிம் ஜாங்-உன், தேசிய பாதுகாப்பு அறிவியல் அகாடமியின் வாயிலாக ஒரு புதிய உயர் தொழில்நுட்ப தந்திரோபாய ஆயுதத்தின் சோதனையை நிகழ்த்தி உள்ளார்" என்கிறது கே சிஎன்ஏ (KCNA) அறிக்கை. மேலும் அது "ஹைடெக் தந்திரோபாய ஆயுதம் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது." என்றும், "இது எங்கள் நாட்டின் அசைக்கமுடியாத தற்காப்புகளை உருவாக்குகிறது மற்றும் இராணுவத்தின் சண்டை சக்தியை பலப்படுத்துகிறது" என்றும், "அரசின் கலை" என்றும், இந்த ஆயுதத்தின் மீது திரு கிம் "பெரும் திருப்தியை" வெளிப்படுத்தியதாக வும் தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஏவுகணை
இதற்கிடையில், தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், அவர் (கிம்) நவம்பர் 2017 ஆம் ஆண்டில் ஹ்வாசோங் -15 சர்வதேச அணுசக்தி ஏவுகணை அறிமுகப்படுத்தியதில் இருந்து, சோதனைத் தளத்தில் நேரடியாக பங்கு கொண்டது இப்போது தான் என்று தெரிவித்து உள்ளது.

வட கொரியா ஏதேனும் மறுப்பு தெரிவிக்கிறர்களா?
மறுப்பு தெரிவிக்கிறது தான் ஆனால் தெரிவிக்கவில்லை. ஜூன் மாதத்தின் சிங்கப்பூர் உச்சிமாநாட்டில், திரு டிரம்ப் மற்றும் திரு கிம் இருவரும் கொரிய தீபகற்பம் ஆனது அணுசக்திக்கு எதிராக வேலை செய்யும் என்கிற உடன்பாட்டை ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தம் எவ்வளவு நாள் நீடிக்கும்? இதன் விவரங்கள் அல்லது செயல்முறைகள் என்ன என்பது பற்றிய மேலதிக தகவல்கள் இல்லை. தகவல் இருந்தாலும் கூட பிரயோஜனம் கிடையாது. ஏனெனில், இந்த இரு நாடுகளும் "அணுசக்தி அழிப்பு" என்கிற வார்த்தையை எப்போதுமே கடைபிடித்து கிடையாது. சபையில் அதை ஒப்புக் கொண்டதும் கிடையாது.

இரண்டாவது மாநாடு
வடகொரியாவானது தொடக்கத்திலிருந்தே ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், எப்போதும் நிராயுதபாணியாக இருக்காது என்பதும் தெளிவு. இருந்தாலும் கூட, அது "முழுமையான அணுசக்தி அழிப்பை" செயல்படுத்தும் வரை, அதன் மீதான எந்தவித தடையும் தகர்த்தப்படாது என்பதில் அமெரிக்க தெளிவாக உள்ளது. இதற்கிடையில், இது சார்ந்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன என்பதும், இரு நாட்டு தலைவர்களுக்கிடையில் இரண்டாவது மாநாடு நிகழ்வதற்கான கலந்துரையாடல்கள் இன்னும் செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிம்மின் உதவியாளர் கிம் யோங்
கடந்த வாரம் திரு கிம்மின் உதவியாளர் கிம் யோங்- சோல், நியூயார்க்கிற்கு பயணம் செய்து மாநில செயலாளர் ஆன மைக் பாம்போவை சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்ததும், ஆனால் அவர் திட்டமிட்ட விமானத்தில் வரவில்லை என்கிற காரணத்தால் குறிப்பிட்ட வெளியுறவுத் துறை கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கிம் ஜோங் உன் மற்றும் டொனால்ட் டிரம்ப்பிற்கு இடையே மற்றொரு உச்சிமாநாடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறுகிறது.


Click it and Unblock the Notifications








