நிச்சயமாக அடி-தடி உண்டு : இவனுங்க திருந்துற மாதிரி தெரியல..!

Written By:

வடகொரியா - பிற உலக நாடுகளால் சிறிதும் இடைவெளி விடாத கண்காணிப்பில் உள்ள ஒரு நாடு. அடிக்கடி ஏவுகணை சோதனை, ஆயுத சோதனை, மர்மமான ராக்கெட்களை விண்ணில் செலுத்தல் என அண்டை தீபகற்பத்தில் உள்ள நாடுகள் தொடங்கி ஐநா வரையிலாக ஒருத்தரையும் மதிக்காது, தான்தோன்றி தனமாக திரிகிறது வடகொரியா..!

அதனால் தான் வடகொரியாவை மிக ஆழமான கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளன பிற நாடுகள், முக்கியமாக - தென் கொரியா மற்றும் அமெரிக்கா..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தொடர்ச்சி :

#1

அணு ஆயுத சக்திகள் கொண்ட வடகொரியாவானது, இரண்டு சக்திவாய்ந்த புதிய நடுத்தர தூர ஏவுகணைகளை ஒன்றின் பின் ஒன்றாக தொடர்ச்சியாக சோதனை செய்துள்ளது.

 ஒப்பிடும் போது :

#2

இதற்கு முன்பு தோல்வியில் முடிந்த இரண்டு சோதனைகளோடு ஒப்பிடும் போது இதன் விமான தூரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முசுடான் ஏவுகணை :

#3

உடன் இரண்டு சோதனைகளுமே அமெரிக்காவின் குவாம் தளங்களை அடையும் திறன் கொண்ட மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட இடைநிலை - முசுடான் ஏவுகணையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

150 கிலோமீட்டர் :

#4

முதலில் ஏவப்பட்ட ஏவுகணையானது 150 கிலோமீட்டர் (90 மைல்) கிழக்கு கடல் மீது ( ஜப்பான் கடல் ) பறக்க விட்டு சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

400 கிலோமீட்டர் :

#5

பின்பு இரண்டு மணி நேர இடைவெளிக்கு பின்பு அதே திசையில் இரண்டாவது ஏவுகணை சுமார் 400 கிலோமீட்டர்கள் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

கண்டனம் :

#6

வழக்கம் போல அமெரிக்க அரசுத்துறை இந்த விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொழில்நுட்ப சோதனைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

தடைகள் :

#7

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தெளிவாக மீறும் வடகொரியா மீது தடைகள் விதித்து ஒரு பயனும் இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் வடகொரியா நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.

தோல்வி :

#8

இந்த ஆண்டில் மட்டுமே நான்கு முசுடான் ஏவுகணை தோல்விகளை வடகொரியா சந்தித்துள்ளது என்பதும் அவைகள் ஏவப்பட்ட உடனேயே அல்லது சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறின என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதற்றம் :

#9

வடகொரியாவின் சோதனைகள் தோல்வியையே சந்திக்காத ஒரு நிலையை அடையும் போது அதன் அணு ஆயுத ஏவுகணைகளானது எப்போது வேண்டுமானலும் அமெரிக்க நிலப்பகுதியை தாக்கலாம் என்ற பதற்றம் நிலாவிக் கொண்டே இருக்கும்..!

மேலும் படிக்க :

#10

இரத்த வரலாறு : நாசம் செய்ய பார்த்த ஹிட்லரின் நாஸி வொண்டர் வெப்பன்ஸ்..!


சைபர் போர் : தயாராகும் தென் கொரியா.!!

தமிழ் கிஸ்பாட் :

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
North Korea test-fires two powerful, mid-range missiles after earlier test fails. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot