இந்தமுறை ஜப்பான் கடலில் 2ஏவுகனைகளை பரிசோதனை செய்தது வடகொரியா.!
ஐ.நா தீர்மானங்களையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகளை சோதனைசெய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வடகொரியா. குறிப்பாக ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு
தெரிவித்து வந்தன.

டிரம்ப் சந்தித்துப் பேசினார்
முதன்முறையாக அமெரிக்கா-வடகொரியா இடையிலான போர்ப்பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக சிங்கப்பூரில் வைத்து, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில்அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது, பின்னர் அதிலும் பரஸ்பரம் கருத்துவேறுபாடு நிலவியது.

உடன்பாடு ஏற்படவில்லை
அடுத்து இரண்டாவது முறையாக வடகொரியா அதிபரை, வியட்நாமில் வைத்து டிரம்ப் சந்தித்தார், இந்த பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்தது. மூன்றாவது முறையாக தென்கொரியாவிற்கு சென்ற அமெரிக்க அதிபர்,வடகொரிய அதிபரை சந்தித்து பேசினார்,இந்த சந்திப்பும் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது, இருநாடுகளின் அதிகாரிகள், முன்னிலையில் டிரம்ப்-கிம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

காலை 6.45 மற்றும் 7.02மணியளவில்
இந்நிலையில் மீண்டும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது, இதுபற்றி தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில்,வடகொரிய நாடு தெற்கு ஹம்கியோங்கில் இருக்கும் சொந்தோக் என்ற நகரில் இருந்து இன்று காலை 6.45 மற்றும் 7.02மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைசு சென்று
இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது.

380கி.மீட்டர் தொலைவு
இரண்டு ஏவுகணைகளும் மேக் 7.5 என்ற உயர் வேகத்தில் 380கி.மீட்டர் தொலைவுக்கு,97கி.மீட்டர் உயரத்தில் பறந்து சென்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுடைய ராணுவம், கூடுதலாக ஏவுகணைகள் ஏவப்படுகின்றனவா? என்று நிலைமையை கண்காணித்து வருகிறது, அதே சமயம் தயார் நிலையிலும் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

7-வது பரிசோதனை ஆகும்
மேலும் கடந்து ஜூலை 25-ம் தேதியில் இருந்து வடகெரியா மேற்கொள்ளும் 7-வது பரிசோதனை ஆகும். இதற்கு முன்பு ஜூலை 25, ஜூலை 31,ஆகஸ்டு 2, ஆகஸ்டு 6, ஆகஸ்டு 10 மற்றும் ஆகஸ்டு 16 ஆகிய தேதிகளில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ப்ளூ ஹவுஸ்
தென் கொரியாவின் ஜனாதிபதி ப்ளூ ஹவுஸ்
குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் இராணுவ பதட்டங்களை தணிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக வட கொரியாவில் செயல்பாடுகள் இருக்கிறது. இது பதட்டத்தை முடிவுக்கு என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்"
என்று தென் கொரியாவின் ஜனாதிபதி ப்ளூ ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Click it and Unblock the Notifications