சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை! கலக்கத்தில் அமெரிக்கா!

|

கிம் ஜாங் உன்னின் "இந்த சமீபத்திய புறவாசல் வேலையை" பற்றி அறிந்த பின், நடிகர் வடிவேலுவின் ஒரு நகைச்சுவை காட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா

இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா

"இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா?" என்று கேட்டு சட்டையை கிழித்தெறிந்த பைத்தியத்தை மீண்டும் பார்க்கும் வடிவேலு "இவனா?" என்று பதறுவார். உடனே அந்த பைத்தியக்காரன் "பயப்படாதீங்க! நான் முன்ன மாதிரி லாம் இல்ல, ரொம்பவே மாறிட்டேன்" என்பார். ஆனால் கடைசியில் பைத்தியக்காரனாவது வடிவேலுவாகத்தான் இருக்கும்.

 நம்ம கிம் ஜாங் உன் தான்

நம்ம கிம் ஜாங் உன் தான்

இந்த இடத்தில் வரும் பைத்தியக்காரனாக வருவது வேறு யாருமில்லை - நம்ம கிம் ஜாங் உன் தான். நம்பி நம்பி ஏமாந்து போகும் வடிவேலு, வேறு யாருக்குமில்லை - நமது ஐ.நா சபை தான்! நான் ரொம்பவே மாறிட்டேன். முன்ன மாதிரிலாம் ஆயுத தயாரிப்புகள் மற்றும் ஏவுகணை சோதனைகளை எல்லாம் நான் நடத்துறதே இல்ல என்கிற தொனியில், கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக பேசிய கிம் ஜாங் உன்னின் உண்மையான (பழக்கப்பட்ட) முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

ஆறாவது அணுசக்தி சோதனை!

ஆறாவது அணுசக்தி சோதனை!

தாவது கிம் ஜாங்-உன்னின் ஆறாவது அணுசக்தி சோதனையில் சுமார் 250 கிலோட்டன் அளவிலான டி.என்.டி இருந்தது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஜியோபிசிகல் ரிசர்ச் ஜர்னலின் ஆராய்ச்சியின் படி, இந்த ஆணு ஆயுதத்தின் "சாலிட் எர்த்" வலிமை ஆனது 328 கிலோட்டான்கள் வரை இருந்திருக்க கூடும். கடந்த 2006 முதல் 2016 வரையிலாக நடந்த முந்தைய சோதனைகளுடன் ஒப்பிடும்போது 2017 சோதனை ஆனது கற்பனைக்கு எட்டாத விதத்தில், அளவில் மிகப்பெரியதாக இருந்துள்ளது என்கிற உண்மை வெளிப்பட்டுள்ளது.

போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்! அதிர்ச்சியூட்டும் ஆய்வுமுடிவுகள்போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்! அதிர்ச்சியூட்டும் ஆய்வுமுடிவுகள்

குறைந்த பட்சம் 1 கிலோட்டனில் இருந்து அதிக பட்சம் 20 கிலோட்டன்கள் !

குறைந்த பட்சம் 1 கிலோட்டனில் இருந்து அதிக பட்சம் 20 கிலோட்டன்கள் !

ஆய்வின் இணை எழுத்தாளர் ஆன தோர்ன் லே கூற்றின்படி, "2006 முதல் 2016 வரையிலாக வட கொரியா நிகழ்த்திய அணு ஆயுத சோதனைகளின் அளவானது மிகவும் சீரான முன்னேற்றத்தையே கண்டன. அதாவது குறைந்த பட்சம் 1 கிலோட்டனில் இருந்து அதிக பட்சம் 20 கிலோட்டன்கள் வரையிலான வெடிப்பொருளையே பயன்படுத்தினர். வடகொரியாவின் ஆரம்பகால சோதனைகள் ஆனது மிகவும் சிறப்பாக செயல்படவில்லை. ஏனெனில் அந்த ஆயுதங்கள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிறியவைகளாக இருந்தன.

பூகம்பத்தை தூண்டியது!

பூகம்பத்தை தூண்டியது!

பின்னர் ஒரு வருட இடைவெளிக்குள் அவர்கள் 250 கிலோட்டான்கள் என்கிற எல்லையை அடைந்துள்ளனர். அது ஒரு பெரிய சாதனமாக இருந்திருக்கும் என்பதிலும், அது ஒரு பெரிய தாவல் என்பதிலும் சந்தேகமே இல்லை. இந்த குறிப்பிட்ட அணு ஆயுத சோதனை ஆனது புங்க்கே-ரி அணுசக்தி சோதனை தளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பத்தை தூண்டியதும் குறிப்பிடத்தக்கது".

4ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகமாகும் கேலக்ஸி எம்30எஸ்.!4ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகமாகும் கேலக்ஸி எம்30எஸ்.!

ஒரு நம்பமுடியாத அழிவுகரமான ஆயுதம்!

ஒரு நம்பமுடியாத அழிவுகரமான ஆயுதம்!

வெளியாகியுள்ள அறிக்கையில் இருந்து, வட கொரியாவின் அணுசக்தி திறன் வியத்தகு முறையில் 20 கிலோட்டானிலிருந்து 250 கிலோட்டானாக உயர்ந்துள்ளது. இந்த வெடிகுண்டை புவி இயற்பியலாளர் ஸ்டீவன் கிப்பன்ஸ் ஒரு "நம்பமுடியாத அழிவுகரமான ஆயுதம்" என்று விவரித்து உள்ளார். மேலும் திரு கிப்பன்ஸ் கூறுகையில்: "அறிக்கையில் ஆசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள கற்பனைக்கு எட்டாத அளவானது, மிகவும் யதார்த்தமான ஒரு வரம்பு தான் என்று நான் நினைக்கிறேன்."

இரண்டாவது ஆயுத சோதனையில் !

இரண்டாவது ஆயுத சோதனையில் !

நிகழ்த்தப்பட்ட சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட சரியான எண்களுக்கு இடையிலான விகிதங்கள் மிகவும் துல்லியமாக இருக்கிறது. வட கொரியர்கள் கூறியபடியே, இரண்டாவது ஆயுத சோதனையில் (2016 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது சோதனையில்) அவர்கள் சரியாக 25 கிலோடோன்கள் என்கிற அளவை பயன்படுத்தி இருந்தால், அதிலிருந்து மற்ற ஆயுதங்களின் அளவுகளை நாம் துல்லியமாக கணக்கிட முடியும்.

90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா? பிஎஸ்என்எல் கவலை.!90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு: முடிவு நெருங்குகிறதா? பிஎஸ்என்எல் கவலை.!

ஒரு கொடூரமான ஆயுதம் !

ஒரு கொடூரமான ஆயுதம் !

"கடந்த 2006 ஆம் ஆண்டில், ​​இதை (அணு ஆயுத சோதனையை) சரியாகச் செய்வதற்கான தொழில்நுட்பம் ஆனது வட கொரியாவிடம் இருப்பதை பலர் நிராகரித்தனர். ஆனால் இப்போது வடகொரியாவின் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட ஆயுத மேம்பாட்டு திட்டங்கள் ஆனது கண்கூடான வெற்றிகளை உலகிற்கு காட்சிப்படுத்தி வருகிறது. குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோதனையை பொறுத்தவரை, ஒரு நம்பமுடியாத அழிவுகரமான ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிச்சயமற்ற, ஒரு கொடூரமான ஆயுதம் ஆகும்" என்றும் ஸ்டீவன் கிப்பன்ஸ் கூறியுள்ளார்.

உள்ளொன்று நடத்தி புறமொறு கதை!

உள்ளொன்று நடத்தி புறமொறு கதை!

வட கொரியாவின் நிலைப்பாடு சார்ந்த இந்த தகவல் ஆனது, அதன் பிரதான எதிரியாக உருவாக்கப்படுத்தப்படும் அமெரிக்காவிற்கு பேரிடியாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம், உள்ளொன்று நடத்தி புறமொறு கதை கட்டுவது ஒன்றும் வட கொரியாவிற்கு புதிது அல்ல என்பதையும் அமெரிக்க நன்கு அறியும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் கடந்த சில மாதங்களாக "நல்ல பிள்ளை" ஆக வலம் வந்த கிம் ஜாங் உன் மறுபடியும் "கைப்பிள்ளை" ஆக அவதாரம் எடுத்துள்ளார்.

Best Mobiles in India

English summary
North Korea’s weapon is 16 times more powerful than Hiroshima bomb : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X