வட கொரியா அணிவகுப்பில் புதிய ஏவுகணை..இது உலகளாவிய அச்சுறுத்தல் என்கிறது அமெரிக்கா.!

|

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் புதன்கிழமை அன்று, வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். பியோங்யாங் இராணுவ அணிவகுப்பிற்குப் பின்னர் புதிதாகக் காணப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பார்த்த பின்னர் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஹவாசோங் 16 என்ற புதிய ஏவுகணை

ஹவாசோங் 16 என்ற புதிய ஏவுகணை

வட கொரியாவின் ஆளும் கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டில் ராணுவ அணிவகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்த்திராத அதிநவீன ஹவாசோங் 16 என்ற புதிய ஏவுகணையோடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணை மற்றும் மல்டிபிள் லான்ச் ராக்கெட் சிஸ்டம் (MLRS) ஆகியவற்றை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹவாசோங் -14 என்ற ICBM ஏவுகணை

ஹவாசோங் -14 என்ற ICBM ஏவுகணை

வட கொரியாவில் ஏற்கனவே இரண்டு சோதனை செய்யப்பட்ட ஐசிபிஎம்-கள் உள்ளது, ஹவாசோங் -14 என்ற ICBM ஏவுகணை 2017 ஆண்டில் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சுமார் 10,000 கி.மீ (6,213 மைல்கள்) தூரம் பயணிக்கக்கூடியது. இதன் வரம்பு கிட்டத்தட்ட மேற்கு ஐரோப்பா முழுவதையும் அடையலாம் மற்றும் அமெரிக்க நிலப்பரப்பில் பாதியை அடையும் ஒரு நியூக்ளியர் அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லக்கூடியது.

iPhone SE 2020 போனை எப்படி வெறும் ரூ.17,949 என்ற விலையில் வாங்குவது? நல்ல சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க.!iPhone SE 2020 போனை எப்படி வெறும் ரூ.17,949 என்ற விலையில் வாங்குவது? நல்ல சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க.!

ஹவாசோங் -15

ஹவாசோங் -15

அடுத்தபடியாக 2017 ஆம் ஆண்டில் பரிசோதிக்கப்பட்ட ஹவாசோங் -15, 13,000 கி.மீ தூரத்தை அடையக்கூடியது. அதாவது இது அமெரிக்க நிலப்பரப்பில் எங்கு வேண்டுமானாலும் ஒரு அணு ஆயுதத்தை ஏவக்கூடிய சக்தி வாய்ந்தது. புதிய ஹவாசோங் 16 ஐசிபிஎம், இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, இது இரண்டு கட்ட திரவ எரிபொருள் ஏவுகணையாகும், ஆனால் ஹ்வாசோங் -15 ஐ விட அதிக தாக்குதல் நீளம் மற்றும் விட்டம் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் நீளம் மற்றும் விட்டம் பற்றிய விபரங்கள்

தாக்குதல் நீளம் மற்றும் விட்டம் பற்றிய விபரங்கள்

என்ஜின்கள் பற்றிய தகவல்கள் வெளிப்படும் வரை இதன் அசல் தாக்குதல் நீளம் மற்றும் விட்டம் பற்றிய விபரங்களை அறிய முடியாது அல்லது ஒரு சோதனை மேற்கொள்ளப்படும் வரை, அதன் சரியான வரம்பை நாம் அறிந்து கொள்வது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வடிவமைப்பு வட கொரியாவின் நோக்கங்களை மிகவும் தெளிவாகத் தெளிவுபடுத்தியுள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

உலக பாதுகாப்பின் கடுமையான அச்சுறுத்தலா?

உலக பாதுகாப்பின் கடுமையான அச்சுறுத்தலா?

பென்டகனில் தென் கொரிய பாதுகாப்பு மந்திரி சு வூக் உடனான சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு பேசிய எஸ்பர் கூறியதாவது, "வட கொரியாவின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் பிராந்தியத்தின் மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.

பென்டகன் சொன்னது என்ன?

பென்டகன் சொன்னது என்ன?

"கொரியா குடியரசின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதியாக உள்ளது" என்று எஸ்பர் கூறியுள்ளார். இருப்பினும், தென் கொரியாவும் அமெரிக்காவும் பாதுகாப்புச் செலவுகளைப் பகிர்வதற்கு மிகவும் சமமான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதனால் அது "அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சமமாக விழாது." என்றும் கூறியுள்ளார்.

28,500 அமெரிக்க இராணுவ படை

28,500 அமெரிக்க இராணுவ படை

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உடனான தனது உறவைப் பற்றி பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெற்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் செலவில் பெரும் பங்கை சியோல் செலுத்த வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார். தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க இராணுவ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இவை பியோங்யாங்கிற்கு ஒரு தடுப்பாகக் கருதப்படுகிறது.

சீனாவுக்கு எடுத்துரைக்கும் ஒரு செய்தி

சீனாவுக்கு எடுத்துரைக்கும் ஒரு செய்தி

இது ஆசியாவில், அமெரிக்கவின் செல்வாக்கு மற்றும் திறனைப் பற்றி சீனாவுக்கு எடுத்துரைக்கும் ஒரு செய்தியாய் இருக்கிறது. கடந்த ஆண்டு பியோங்யாங்கின் ஐசிபிஎம் சோதனைகள் இல்லாததைத் தகவல்கள் காட்டியுள்ளது.

மைக் பாம்பியோ சொன்னது என்ன?

மைக் பாம்பியோ சொன்னது என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது, ட்ரம்பின் கொள்கையின் காரணமாக வட கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஆபத்து கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
North Korea's Nuclear, Missile Programs Is a 'Serious Threat' To Security Says Pentagon Chief : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X