சத்தமில்லாமல் இன்று அதிகாலை 2ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த வடகொரியா.!

|

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது என்று தான் கூறவேண்டும்,அதன்படி இன்று மட்டும் 2 ஏவுகணை சோதனைகள் நடத்தி உள்ளது வடகொரியா. குறிப்பாக ஐ.நா தீர்மானங்களையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகளை சோதனைசெய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வடகொரியா.

அமெரிக்கா-வடகொரியா

அமெரிக்கா-வடகொரியா

முதன்முறையாக அமெரிக்கா-வடகொரியா இடையிலான போர்ப்பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக சிங்கப்பூரில் வைத்து, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில்அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது, பின்னர் அதிலும் பரஸ்பரம் கருத்துவேறுபாடு நிலவியது.

உடன்பாடு ஏற்படவில்லை

உடன்பாடு ஏற்படவில்லை

அடுத்து இரண்டாவது முறையாக வடகொரியா அதிபரை, வியட்நாமில் வைத்து டிரம்ப் சந்தித்தார், இந்த பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்தது. மூன்றாவது முறையாக தென்கொரியாவிற்கு சென்ற அமெரிக்க அதிபர்,வடகொரிய அதிபரை சந்தித்து பேசினார், இந்த சந்திப்பும் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது, இருநாடுகளின் அதிகாரிகள், முன்னிலையில் டிரம்ப்-கிம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

வைரல் வீடியோ: குடியிருப்பு பகுதிக்குள் நாயைத் தாக்கிய முதலை! அதிகரிக்கும் முதலை நடமாட்டம்!வைரல் வீடியோ: குடியிருப்பு பகுதிக்குள் நாயைத் தாக்கிய முதலை! அதிகரிக்கும் முதலை நடமாட்டம்!

 செய்திகள் வெளிவந்துள்ளது

செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது, கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3முறை ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. பின்பு இன்று அதிகாலை 2.59மணி மற்றும்3.23 மணிக்கு குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை இரண்டுமுறை வடகொரியா பரிசோதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் செய்து அனுப்புவது எப்படி?சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் செய்து அனுப்புவது எப்படி?

 155மைல் தூரம் பறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்

155மைல் தூரம் பறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் இதுகுறித்து தென்கொரியாவின் இராணுவம் கூறுகையில் கடந்தமுறை ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்ட அதே பிராந்தியமான வடக்கின் ஹம்ஜியோங் மாகணத்திலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. சுமார் 15 மைல்கள் உயரத்தில் 135 மைல் தூரம் பறந்ததாகவும், அதேபோல் 2-வது பாலிஸ்டிக் ஏவுகனை அதிகபட்சமாக 18மைல் உயரத்தில் 155மைல் தூரம் பறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

புதிய வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்.!புதிய வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்.!

தென் கொரியாவின் ஜனாதிபதி ப்ளூ ஹவுஸ்

தென் கொரியாவின் ஜனாதிபதி ப்ளூ ஹவுஸ்

குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் இராணுவ பதட்டங்களை தணிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக வட கொரியாவில் செயல்பாடுகள் இருக்கிறது. இது பதட்டத்தை முடிவுக்கு என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று
தென் கொரியாவின் ஜனாதிபதி ப்ளூ ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Best Mobiles in India

English summary
North Korea Fires Two Short-Range Projectiles Off Country’s East Coast : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X