ஏவுகணை சோதனையில் விபரீதம்; தன் நாட்டையே தாக்கிக்கொண்ட வடகொரியா.!

வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனையொன்று தோல்வியில் முடிந்தது மட்டுமின்றி வடகொரியாவின் சொந்த நகரம் ஒன்றிலேயே விழுந்து வெடித்துள்ளது. இந்த தகவலை ஒரு அமெரிக்க அரசாங்க அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

|

சர்வாதிகாரம் என ஒருபக்கம் தாழ்த்தியும், அமெரிக்காவை கண்டு அஞ்சாத நாடு என ஒருபக்கம் உயர்த்தியும் பேசப்படும் நாடுதான் வடகொரியா. அந்நாட்டை ஆளும் கிம் ஜாங்-உன் தனது இராணுவ வல்லமையை உலகிற்கு காட்சிப்படுத்த, அதை காட்சிப்படுத்தி பீதிகளை கிளப்ப ஒருபோதும் தவறியதில்லை.

ஏவுகணை சோதனையில் விபரீதம்; தன் நாட்டையே தாக்கிக்கொண்ட வடகொரியா.!

அனுதினமும் ஒர் ஆயுத சோதனையை நிகழ்த்தும் முனைப்பில் உள்ள வடகொரியா பலமுறை பலவகையான தோல்விகளை சந்தித்துள்ளது. இருப்பினும் கூட தொடர்ச்சியான முறையில் (அறிவிப்பு முதல் ஏவுகணை சோதனை வரை) ஏதாவதொன்றை செய்துகொண்டே தான் உள்ளது. ஆனால் அதன் சமீபத்திய தோல்வியானது வட கொரியாவையே பீதியடைய செய்துள்ளது.

சொந்த நகரம் ஒன்றிலேயே விழுந்து வெடித்துள்ளது.!

சொந்த நகரம் ஒன்றிலேயே விழுந்து வெடித்துள்ளது.!

வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனையொன்று தோல்வியில் முடிந்தது மட்டுமின்றி வடகொரியாவின் சொந்த நகரம் ஒன்றிலேயே விழுந்து வெடித்துள்ளது. இந்த தகவலை ஒரு அமெரிக்க அரசாங்க அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவெனில்.?

அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவெனில்.?

அவரின் கூற்றுப்படி, இரகசியமான மாநிலங்களில் ஒன்றான டோக்க்சனில் தான் இந்த தோல்வியுற்ற ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவெனில் அந்த நகரத்தில் சுமார் 200,000 மக்கள் வாழ்கின்றன என்பது தான்.

தாக்கத்தையும், சேதத்தையும்..

தாக்கத்தையும், சேதத்தையும்..

தோல்வியுற்ற இந்த ஏவுகணை சோதனையின் தாக்கத்தையும் அது ஏற்ப்படுத்திய சேதத்தையும் சமீபத்திய செயற்கைகோள் புகைப்படங்கள் (சாட்டிலைட் இமேஜிங்) வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பியோங்யாங்கிற்கு 40 மைல்கள் வடக்கே உள்ள தென் பியோங்கான் மாகாணத்தில் உள்ள புகாசங் ஏவுதளத்தில் இருந்து ஹெவசோங் கேஎன்-17 என்கிற மிட்-ரேன்ஜ் (நடுத்தர வரிசை) ஏவுகணை ஒன்று பரிசோதனைக்காக ஏவப்பட்டுள்ளது.

வெறும் 70 கிலோமீட்டர் உயரத்தை மட்டுமே..

வெறும் 70 கிலோமீட்டர் உயரத்தை மட்டுமே..

ஏவப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளேயே அந்த ஏவுகணையின் இலக்கு பயணம் தோல்வியடைந்து, வெறும் 70 கிலோமீட்டர் உயரத்தை மட்டுமே எட்டிய பின்னர் அது தொழிற்துறை அல்லது விவசாய கட்டிடம் போல காட்சியளிக்கும் ஒரு கட்டித்ததின் மீது விழுந்து தாக்கியுள்ளது.

ஆயுதத் திட்டங்கள் பற்றிய அறியாமை.!

ஆயுதத் திட்டங்கள் பற்றிய அறியாமை.!

இந்த சம்பவம் வட கொரியாவின் ஆயுதத் திட்டங்கள் பற்றிய அறியாமையை வெளிப்படையாக காட்டுகிறது என்று அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் சாடியுள்ளார், மேலும் இந்த ஏவுகணை சோதனையானது ஜப்பானின் கடலோர பகுதியை பாதையாக கொண்டிருந்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதித் தாக்கம் நிகழ்ந்த இடத்தின் புகைப்படம்.!

இறுதித் தாக்கம் நிகழ்ந்த இடத்தின் புகைப்படம்.!

இந்த தோல்வியடைந்த ஏவுகணையின் இறுதித் தாக்கம் நிகழ்ந்த இடத்தின் புகைப்படமானது ஏப்ரல் மற்றும் மே 2017 ஆகியவற்றிலிருந்து வணிகரீதியாக கிடைக்கக்கூடிய செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது.

குருட்டுத்தனமான ஆயுத சோதனை

குருட்டுத்தனமான ஆயுத சோதனை

வடகொரியாவின் இந்த மோசமான தோல்வியானது, அணுவாயுதம் என்பது இருபக்கமும் கூர்மிக்க ஒரு கத்தி என்பதையும், குருட்டுத்தனமான ஆயுத சோதனைகள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு பெரிய ஆபத்துகளை உண்டாகும் என்பதையும் காட்டுகிறது, குறிப்பாக இம்மாதிரியான சக்திகள் ஒரு சர்வாதிகாரியின் கைகளில் இருக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகிறது.

Best Mobiles in India

English summary
North Korea Accidentally Hit Own City With Missile Test. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X