சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.!

|

இந்திய விண்வெளி ஆய்வு மையம் 'இஸ்ரோ' சார்பில், ஜூலை 22ல், சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக தரையிறங்கப்பட வேண்டிய 'விக்ரம் லேண்டர்' கருவி, தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதன் தொடர்பை இழந்தது.

நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.!

தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பை மீண்டும் பெற இஸ்ரோ பல வழிகளை மேற்கொண்டது. நாசாவுடன் கூட இஸ்ரோ முயற்சித்தது, ஆனாலும் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. ஆனாலும் நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் விண்கலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

குறிப்பாக சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது, நிலவில் தரையிரங்க சரியாக 2கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.!

மேலும் இஸ்ரோ அமைப்பு பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய முயன்ற நாசாவின் முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்நிலையில் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை அமெரிக்க விண்வெளி ஆராயச்சி நிறுவனத்தின் லூனார் புலனாய்வு ஆர்பிட்டர் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. ஆனால் இந்த புகைப்படங்களிலும் லேண்டரை கண்டறிய முடியவில்லை என நாசா தெரவித்துள்ளது.

நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.!

பின்பு புகைப்படங்களை தீவிரமாக ஆராய்ந்துவிட்டதாகவும், விகரம் லேண்டர் விழுந்த பகுதி நிழல்கள் தென்பமுடியாதவை இருப்பதாகவும் தற்சமயம் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
No Trace Of Vikram Lander Yet, New NASA LRO Report: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X