Subscribe to Gizbot

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டெஸ்லாவை தெரியாமல் போனதின் பின்னணி என்ன.?

Written By:

நிக்கோலா டெஸ்லா (Nikola Tesla) என்பவர் யாரென்று பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. தெரியவில்லை. ஏன்.? யார் இந்த நிக்கோலா டெஸ்லா.? இவரின் தொடக்கம் எது.? வரலாற்றில் வேண்டுமென்றே தூசி படியப்படவிட்ட டெஸ்லாவின் பக்கங்களை புரட்டுவோம் வாருங்கள்.!

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டெஸ்லாவை தெரியாமல் போனதின் பின்னணி என்ன?

அவர் ஐன்ஸ்டீனைக் காட்டிலும் மிகவும் குறைவான பிரபலத்தன்மை கொண்டுள்ளார். அவர் லியோனார்டோவை விட குறைவான பிரபலமானவர். இன்னும் சொல்லப்போனால் அவர் ஸ்டீபன் ஹாக்கிங் அடைந்திருக்கும் பிரபலத்தை கூட அடையவில்லை. டெஸ்லாவின் பெரும்பாலான ரசிகர்களின் மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் வரலாற்றில் டெஸ்லாவின் பரம எதிரியாக சித்தரிக்கப்படும் தாமஸ் ஆல்வா எடிசனை விட டெஸ்லா மிகவும் குறைவாக பிரபலமானவர் என்பது தான்.

ஆனால் நிதர்சனம் என்னவாக இருந்திருக்க வேண்டுமென்றால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரபலங்களை காட்டிலும் அதிக பிரபலமானவராக நிக்கோலா டெஸ்லா இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ அது நடக்கவில்லை, ஏன்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டெஸ்லாவிற்கு நன்றி

டெஸ்லாவிற்கு நன்றி

நீங்கள் இந்த கட்டுரையை எதோ ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் வழியாக வாசிக்கிறீர்கள் அல்லவா.? அதற்கு முதலில் நீங்கள் நிக்கோலா டெஸ்லாவிற்கு நன்றி கூறவேண்டும். ஏனெனில் ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட் (Alternative Current - AC) உடன் வேலை செய்யும் இன்டக்ஷன் மோட்டாரை (Induction Motor) கண்டுபிடித்து நவீன மின் அமைப்புகளில் ஒரு மைல்கல்லை பதித்தவர் நிக்கோலா டெஸ்லா ஆவார்.

மதிப்புமிக்க காப்புரிமை

மதிப்புமிக்க காப்புரிமை

பின்னாளில் நிக்கோலா டெஸ்லாவின் நட்பை முறித்துக்கொண்ட மார்க் ட்வைன் அவரது கண்டுபிடிப்பை "தொலைபேசிக்கு பின்னர் மிகவும் மதிப்புமிக்க காப்புரிமை" என்று விவரித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே நாம் டெஸ்லாவின் பெருமையை அறிய முடிகிறது.

வார் ஆப் கரண்ட்ஸ் (War of Currents)

வார் ஆப் கரண்ட்ஸ் (War of Currents)

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் தாமஸ் எடிசன் ஆகியோருக்கு இடையில் மின்சக்தி பரிமாற்றத்திற்கு ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட் (ஏசி) அல்லது டைரக்ட் கரண்ட் (டிசி) - இரண்டில் எது பயன்படுத்தப்பட வேண்டுமென்ற உறுதிப்படுத்துவதற்காக வார் ஆப் கரண்ட்ஸ் என்ற போட்டியில் டெஸ்லா வெற்றி பெற்ற பக்கத்தில் இருந்தார். ஆனால் பிரலப்படுத்தும் சுவரொட்டியைப் பொறுத்தவரையில் நேரம் டெஸ்லாவை ஒதுக்க சிறிதும் தயக்கம் காட்டவில்லை.

நயாகரா நீர்வீழ்ச்சியில் முதல் ஹைட்ரோ-மின் ஆலை

நயாகரா நீர்வீழ்ச்சியில் முதல் ஹைட்ரோ-மின் ஆலை

இப்போது குரோஷியாவாக இருக்கும் இடத்தில செர்பியா பெற்றோருக்கு பிறந்த நிக்கோலா டெஸ்லா 1884-ஆம் ஆண்டில் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார். அங்கிருந்து ரேடியோ கட்டுப்பாட்டு வாகனங்கள், வயர்லெஸ் எனர்ஜி மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சியில் முதல் ஹைட்ரோ-மின் ஆலை ஒன்றையும் உருவாக்கினார்.

புறாவுடன் காதலில் விழுந்தார்

புறாவுடன் காதலில் விழுந்தார்

மறுபக்கம், நிக்கோலா மிகவும் விசித்திரமானவராக திகழ்ந்தார். அவர் தனது மூளையில் மனத்துறவு பரவுள்ளதாக உணர்ந்தார். அவர் ஏலியன்கள் எனப்படும் எக்ஸ்டராடெரஸ்டியல்ஸ்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று நினைத்தார், மேலும் ஒரு புறாவுடன் காதலில் விழுந்தார்.

எடிசன் தோல்வி

எடிசன் தோல்வி

டெஸ்லாவின் ஆகப்பெரிய வெற்றிகளானது அவரின் ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட் சிஸ்டம் சார்ந்த பணிகளாலேயே நிர்ணயம் செய்யப்பட்டது. எடிசனின் டிசி, அதாவது டைரக்ட் கரண்ட் ஆனது விளக்குகளில் நன்கு வேலை செய்தது, ஆனால் அவற்றால் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை பரிமாறிக்கொள்ள முடியவில்லை.

முட்டுக்கட்டை

முட்டுக்கட்டை

மறுபக்கம் ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட் ஆனது வெஸ்டிங்ஹவுஸ் கார்பரேஷன் நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்டது. அதன் மின்னழுத்தம் அதிகரிக்கவும், எளிதாகவும் குறைக்கவும் படலாம், இதனால் அதிக மின்னழுத்தத்தில் நீண்ட தூரத்திற்கு செல்லமுடியும். மேலும் குறைந்த மின்னோட்டத்தை பயன்படுத்தி அதனால் டிரான்சிஸ்டில் குறைவான ஆற்றலையே இழக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட்டின் மோட்டார்கள் நின்றன. இங்குதான் டெஸ்லாவின் பிராகாசிக்கிறார்.

டெஸ்லாவின் இண்டக்ஷன் மோட்டார்

டெஸ்லாவின் இண்டக்ஷன் மோட்டார்

அதாவது நிக்கலா டெஸ்லாவின் வடிவமைப்பில் உருவாக்கம் பெற்ற இண்டக்ஷன் மோட்டார் ஆனது டிரான்ஸ்பார்மர்களுக்கான முட்டுக்கட்டையை உடைத்தெறிந்தது, தெளிவான வழியை வகுத்தது. டெஸ்லாவை விட தொழில்நுட்ப தத்தெடுப்பு முறைமைகளை நியாயமான முறையில் நிகழ்த்திக்காட்ட ஆளில்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

பின்னர் எடிசனின் எதிர்வினைகள் கிளம்பின

பின்னர் எடிசனின் எதிர்வினைகள் கிளம்பின

கதை அத்தோடு முடிந்தபோகவில்லை, பின்னர் தான் எடிசனின் எதிர்வினைகள் கிளம்பின. பிரபலம் என்ற பண்பாட்டு பிரசன்னம் இல்லாத போதிலும் கூட டெஸ்லாவின் வார் ஆப் கரண்ட்ஸ் ஆனது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்கு இணையாக உள்ளதென்பதில் சந்தேகமேயில்லை. எடிசன் அவரின் போட்டி தொழில்நுட்பமான ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட் ஆனது பாயகரமான ஒன்றாக சித்தரிக்க முயன்றார்.

மிகவும் ரகசியமாக நிதியுதவிகள்

மிகவும் ரகசியமாக நிதியுதவிகள்

எடிசன், யானை உட்பட பல விலங்குகளின் மீது பொது மின்னழுத்தங்களை ஏற்பாடு செய்தார். மிகவும் ரகசியமாக முதல் மின்சார நாற்காலியின் வளர்ச்சிக்கு நிதியுதவிகள் செய்தார். அதன் மூலம் ஏசி (ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட்) ஆபத்துக்களை உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று அவர் நம்பினார். ஆனால் ஏசி-க்கு எதிரான விளம்பர பிரச்சாரம் ஏசி-யின் தெளிவான நன்மைகளை வீழ்த்துவதற்கு போதுமானதாக இல்லை. 400,000 வோல்ட் மின்சாரத்தை நீண்ட தூரம் செலுத்தும் இங்கிலாந்தின் நேஷனல் க்ரிட் போன்ற அமைப்புகள் டெஸ்லா மற்றும் அவருடைய சக ஏசி அட்வகேட்ஸ்களையே பயன்படுத்துகின்றன.

யோசனை மீது அவர் அதிகம் அக்கறை காட்டினார்

யோசனை மீது அவர் அதிகம் அக்கறை காட்டினார்

டெஸ்லா மற்றும் எடிசன் ஆகிய இருவரும் மிகவும் வித்தியாசமான மேதைகளாக இருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. டெஸ்லா அவரது தலைக்குள் விடயங்களைப் புரிந்துகொள்ளவும், வேலை செய்யவும் விரும்பினார். அதன் நடைமுறைச் சுரண்டலைக் காட்டிலும் அது சார்ந்த யோசனை மீது அவர் அதிகம் அக்கறை காட்டினார். எடிசன் வணிக ரீதியிலான ஆற்றலுடன் தொடங்கி, உடல் ரீதியிலான விசாரணையையே மீண்டும் மீண்டும் சோதனை செய்பவராய் திகழ்ந்தார்.

ஒருபக்கம் எடிசனின் புகழ்

ஒருபக்கம் எடிசனின் புகழ்

டெஸ்லா அதிகமான பெருமூளை கொண்டவராய் இருந்தார், அவர் தத்துவங்களின் உலகில் வாழ்ந்ததை போல வாழ்வார். எடிசனும் டெஸ்லாவும் சரிக்கு சமானவர்களாய் இருந்திருந்தால், ஒரேபோல் உயர்ந்திருந்தால் ஒருபக்கம் எடிசனின் புகழ் இன்றுவரை மேலோங்கிக்கொண்டே போக டெஸ்லா வீழ்ச்சியுறபோகாரணமென்ன என்பதே இங்கு நமக்குள் எழும் மிகப்பெரிய கேள்வியாகும்.

ஆனால், எடிசனுக்கே இன்றுவரை பெயரும் புகழும்

ஆனால், எடிசனுக்கே இன்றுவரை பெயரும் புகழும்

நானும் சரி, நீங்களும் சரி, விஞ்ஞானிகளை எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறோம் என்பதில் மோசமாக செயல்படுபவர்களாகவே இருக்கிறோம். லைட் பல்பை கண்டுபிடித்தது யாரென்று கேட்டதுமே எடிசன் பெயரை உரக்க கத்துவோம். உண்மையென்னவெனில் நியூயார்க்கில் இருந்த எடிசன் தனது முக்கிய கண்டுபிடிப்பை (பல்ப்) செய்த அதே நேரத்தில், நியூகாஸ்ட்டில் சர் ஜோசப் ஸ்வான் ஒரு லைட்பல்ப்பை கண்டுபிடித்தார். ஆனால், எடிசனுக்கே இன்றுவரை பெயரும் புகழும்.

டெஸ்லா ஒரு மிகப்பெரிய பலியாள்

டெஸ்லா ஒரு மிகப்பெரிய பலியாள்

ஒரு பொறியியலாளர் முதலில் நடைமுறை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதில் மிகவும் கடினமான விடயம் என்னவென்றால் உங்கள் கைளுக்கு எந்தெந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கும், அவைகளை கொண்டு இதை நிகழ்த்த முடியுமா என்பதுதான். பெரும்பாலானோர்கள் சாத்தியமே இல்லை என்று நம்பிய டெஸ்லாவின் வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றம் போன்ற ஒரு யோசனையை கொண்டிருந்த புத்திசாலித்தனமானவர் என்பதில் சந்தேகமேயில்லை. மறுபுறம்,எடிசன் மக்களை வென்றெடுக்கவும், அவர் கருத்துக்களை ஒரு தயாரிப்பாக மாற்றவும் என ஒரு வலிமையான பாத்திரமாக உருவாகினர். ஒரு சிலர் புகழ் அடைவதும் மறுகையில் சாதித்த சாதனைக்கு கூட பெயர் கிடைக்காத நிலைப்பாடும் வரலாற்றின் இயல்புதான் என்பதற்கு டெஸ்லா ஒரு மிகப்பெரிய பலியாள் ஆவார்.

எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.?

எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.?

நமக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை தெரிந்த அளவிற்கு ஹென்றிக் லாரென்ஸை தெரியாது. ஆனால் நிதர்சனம் என்னவெனில் இன்றும் சில அறிவியலாளர்கள் ஐன்ஸ்டீன், லொரண்ட்ஸ் முதலில் பணிபுரிந்த வழித்தடத்தின் தொடர்ச்சியை பின்பற்றியவர் என்றே நம்புகின்றன. இவ்வாறான மங்கலான வரலாற்றில் டெஸ்லா எப்படி தொலைந்துபோனார் என்பதில் தெளிவு தேடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.?

டெஸ்லாவை வழிபடுகிறார்கள்

டெஸ்லாவை வழிபடுகிறார்கள்

இருப்பினும் டெஸ்லா வின் பெயர் காந்த புலத்திற்க்கான ஒரு அளவீடாக பெயரிடப்பட்டுள்ளது. குரோஷியாவிலும் செர்பியாவிலும் டெஸ்லா கொண்டாடப்படுகிறார், அங்கு ஒரு மின் ஆலைக்கு டெஸ்லா பெயர் இடப்பட்டுள்ளது. அறிவியல் அறிஞர்கள் டெஸ்லாவை வழிபடுகிறார்கள். நியு யார்க்கர் ஹோட்டலின் சூட் 3327-இல் மரணம் அடைந்த டெஸ்லா, ஐன்ஸ்டீனின் அல்லது எடிசன் பிரதான கலாச்சார புகழுக்கு பின்னால் இன்னமும் மறைக்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Why doesn't everyone know who Nikola Tesla was? Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot