ஐயன் மேன் போல விண்வெளி வீரர்களுக்கு ஏ.ஐ டிஸ்பிளே ஹெல்மெட்.! அசத்தும் விஞ்ஞானிகள்.!

ஐயன் மேன் திரைப்படத்தில் வருவது போல, பில்ட் இன் டிஸ்பிளேயுடன் கூடிய ஹெல்மெட்டை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர புலனாய்வு நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

|

ஐயன் மேன் திரைப்படத்தில் வருவது போல, பில்ட் இன் டிஸ்பிளேயுடன் கூடிய ஹெல்மெட்டை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர புலனாய்வு நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இந்த பில்ட் இன் டிஸ்பிளே கொண்ட ஹெல்மெட் பிரத்தியேகமாக விண்வெளி வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐயன்மேன் உண்மையா வேணும்

ஐயன்மேன் உண்மையா வேணும்

ஐயன் மேன் திரைப்படத்தைப் பார்த்துப் பிடித்துப்போய், இந்த ஹெல்மெட்டை வடிவமைத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளியில் இடப்படும் சிக்கல்களைச் சமாளிக்கும் விதத்தில் பல சிறப்பம்சங்களுடன் இந்த ஹெல்மெட் வடிவைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.40லட்சம் மதிப்புள்ள ஐபோன்கள் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி.!ரூ.40லட்சம் மதிப்புள்ள ஐபோன்கள் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி.!

ஹைப்பர் விஎஸ்ஆர் ஹெல்மெட் என்ன செய்யும்

ஹைப்பர் விஎஸ்ஆர் ஹெல்மெட் என்ன செய்யும்

இந்த ஹெல்மெட்டிற்கு ஹைப்பர் விஎஸ்ஆர்(HyperVSR) பெயரிடப்பட்டுள்ளது. ஹைப்பர் விஎஸ்ஆர் ஹெல்மெட் பணி சம்பந்தமான அறிவுறுத்தல்கள், தகவல்கள் மற்றும் விண்வெளி வீரர்களின் நாடித்துடிப்பு முதல் இரத்த அழுத்தம் வரை அனைத்தையும் அறியும் விதத்தில் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கண் அசைவில் செயற்கை நுண்ணறிவு ஹெல்மெட்

கண் அசைவில் செயற்கை நுண்ணறிவு ஹெல்மெட்

விண்வெளியில் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் பல விதமான சிக்கல்களை ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் முக்கிய அறிகுறிகளை அறிந்து செயல்படும்படி இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டடிஸ்பிளே ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே ஹெல்மெட்டை விண்வெளி வீரர் கட்டுப்படுத்துவதற்குக் கண் அசைவு மட்டும் போதுமானது.

வெடிக்காத எல்பிஜி கேஸ் சிலிண்டர் அறிமுகம்: அசத்திய நிறுவனம்.!வெடிக்காத எல்பிஜி கேஸ் சிலிண்டர் அறிமுகம்: அசத்திய நிறுவனம்.!

குறைந்த புவி ஈர்ப்பை சமாளிக்க என்ன முயற்சி

குறைந்த புவி ஈர்ப்பை சமாளிக்க என்ன முயற்சி

ஹெல்மெட்டில் வழங்கப்பட்டுள்ள பல சேவைகளில் விண்வெளி வீரர் எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்க வேண்டாம் என்பதைத் தீர்மானிக்க கண்ட்ரோல் டேக்களும் வீரரின் கை கிளவுஸ் இல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த புவி ஈர்ப்பு உள்ள விண்வெளியில் வீரர்களால் விரைந்து செயல்பட முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூப்பர் கூல் ஹெல்மெட் இன்னும் சோதனை செய்யப்பட்டு வருகிறது எனது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Ironman like headsup AI inbuilt next generation display spacesuit helmet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X