Home
Scitech

பூமியை சுற்றிவரும் நீர்யானை அளவிலான புதிய நிலவு கண்டுபிடிப்பு! உண்மையை சொன்ன விஞ்ஞானி!

விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், தற்பொழுது பூமியை சுற்றி வரும் நீர்யானை அளவிலான ஒரு புதிய நிலவை கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு இதுவரை ஒரு நிலவு மட்டும் தான் என்று கூறி வந்த விஞ்ஞானிகள், தற்பொழுது பூமிக்கென்று மற்றொரு துணைக்கோள் பூமியை சுற்றி வலம்வருகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சிறு நிலவு ஒரு குறுங்கோளாகும். இதற்கு '2020 CD3' என்று விஞ்ஞானிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

பூமிக்கு புதிய நிலவு!

பூமிக்கு புதிய நிலவு!

இந்த சிறிய நிலவு 1.9-3.5 மீட்டர் விட்டம் கொண்டதாகவுள்ளது, ஏறக்குறைய இதுவொரு பசுவின் அளவு அல்லது நீர்யானையின் அளவைக் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த 'புதிய நிலவு' தற்காலிகமாக பூமிக்கு மிக அருகாமையில் இருக்கிறது என்று சர்வதேச வானியல் ஒன்றியத்தில் உள்ள மைனர் பிளானட் மையம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கண்டுபிடித்துள்ளது.

புதிய நிலவு குறித்த உண்மை தகவல்

புதிய நிலவு குறித்த உண்மை தகவல்

இந்த ஆய்வு மையம் பல ஆண்டுகளாகச் சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து சிறிய கிரக மற்றும் கூடுதல் கிரக பொருட்களை ஆய்வு செய்து அவற்றை பெயரிட்டு, பகுப்பாய்வு செய்து வரும் ஒரு ஆராய்ச்சி மையமாகும். காக்பர் வியர்சோஸ் என்ற விஞ்ஞானிகளின் குழு தலைவர் இந்த ‘புதிய நிலவு' குறித்த உண்மை தகவலை தற்பொழுது டிவிட்டர் மூலம் ட்வீட் செய்து, வெளியுலகிற்கு இந்த செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறு நிலவு 2020 CD3

சிறு நிலவு 2020 CD3

விஞ்ஞானிகள் அண்மையில் ஒரு புதிய தற்காலிகமான நிலவைப் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சிறு நிலவிற்கு 2020 CD3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவு, கேடலினா ஸ்கை சர்வே என்ற அணியில் உள்ள டெடி ப்ரூயி என்ற விஞ்ஞானியும், காக்பர் வியர்சோஸ் என்ற விஞ்ஞானியும் சேர்ந்து இந்த 20வது பரிமாணமுள்ள சிறுப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 2006 RH120 பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 2006 RH120 பற்றி உங்களுக்கு தெரியுமா?

சூரியக் குடும்பத்தில் சுமார் பத்து லட்சத்திற்கு அதிகமான விண்கற்கள் வலம்வருவதால், இந்தச் சிறிய நிலவைக் கண்டுபிடித்தது என்பது உண்மையில் பெரிய வியப்பாகக் கருதப்படுகிறது. விண்வெளி ஆய்வுகளின் படி அறியப்பட்ட பூமியின் இரண்டாவது பருப்பொருளாக இந்த புதிய நிலவு கூறப்படுகிறது. இதற்கு முன் இதேமாதிரியான ‘2006 RH120' என்ற பொருள் பூமியைச் சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று ஆண்டுகளாக பூமியை சுற்றும் 2020 CD3 சிறு நிலவு

மூன்று ஆண்டுகளாக பூமியை சுற்றும் 2020 CD3 சிறு நிலவு

இந்த 2020 CD3 சிறு நிலவு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. இது அக்டோபர் 2020 முதல் 2021 மே வரை பூமியை சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சிறிய நிலவு குறித்த தகவல்கள் இன்னும் அதிகம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இதன் உண்மை நிலை பற்றி ஆராய்ச்சி

இருப்பினும், அடுத்த ஆண்டு இந்த சிறிய நிலவு பூமிக்கு மிக அருகாமையில் வரும் பொழுது இதன் உண்மை நிலை பற்றி ஆராய்ச்சி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறு நிலவுகள் அல்லது சிறுகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க காரணம், பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் சந்திரனிலிருந்து வரும் சூரியனின் ஈர்ப்பு விசையின் கலவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் தான் இவை ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க காரணம் என்ன?

இந்த சிறு நிலவுகள் அல்லது சிறுகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க காரணம், பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் சந்திரனிலிருந்து வரும் சூரியனின் ஈர்ப்பு விசையின் கலவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் தான் இவை ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

சிறிய நிலவு மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்

சிறிய நிலவு மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்

மற்றொருபுறம் இந்தச் சிறிய நிலவு மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று நாசாவின் நியர்-எர்த் ஆப்ஜெக்ட் ஸ்டடிஸ் மையத்தின் இயக்குநர் பால் சோடாஸ் கூறியுள்ளார்.

பூமிக்கு மிக அருகாமையில் வரும் நீர்யானை அளவு புதிய நிலவு

பூமிக்கு மிக அருகாமையில் வரும் நீர்யானை அளவு புதிய நிலவு

இது செப்டம்பர் 20, 1966 ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட சர்வேயர் 2 லூனார் லேண்டராக கூட இருக்க வாய்ப்புள்ளது என்று பால் சோடாஸ் கூறியுள்ளார். உண்மையில் இது என்ன என்பது இந்த சிறிய நிலவு பூமிக்கு மிக அருகாமையில் வரும் பொழுது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Newly-discovered mini-moon orbiting Earth : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X