அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களை செல்போன் டவர்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்!

|

போர்க்களத்தில் செல்போன்களுக்கான நெட்வொர்க் கவரேஜ் நம்பகமானதாக இல்லை என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? இருப்பினும் இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

நெட்வொர்க் சிஸ்டம்ஸ்

நெட்வொர்க் சிஸ்டம்ஸ்

ஆனால் போர்க்களத்திற்கு ஒரு செல்போன் டவரை கொண்டு வர இராணுவத்தால் முடிந்தால் என்ன நடக்கும்? இந்த யோசனையின் மூலம் தான் ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்பை அறிவித்துள்ளது.

 ஹியூஸ் ஹெலோசாட் சொல்யூஷன்

ஹியூஸ் ஹெலோசாட் சொல்யூஷன்

ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் சமீபத்தில் அறிவித்துள்ள ஒரு புதிய தயாரிப்பின் மூலம், ஒரு ஹெலிகாப்டரை மொபைல் மற்றும் வான்வழி செல் கோபுரமாக மாற்ற உதவுகிறது. வெர்சுவல் நெட்வொர்க் கம்யூனிகேஷன்ஸ் உருவாக்கிய எல்.டி.இ தொழில்நுட்பத்தை ஹியூஸ் ஹெலோசாட் சொல்யூஷனுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த அற்புதமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ரோட்டரி-விங் விமானங்களில் பியண்ட் லைன் ஆஃப் சைட் தகவல்தொடர்புகளை வழங்கக்கூடிய அமைப்பின் பெயர் தான் ஹியூஸ் ஹெலோசாட் சொல்யூஷன்.

ஒரு நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட பயனர்களை கையாளும்

ஒரு நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட பயனர்களை கையாளும்

இந்த புதிய தயாரிப்பை பயன்படுத்தி இவ்வமைப்பு ஒரு ஹெலிகாப்டரை தற்காலிக மொபைல் செல் கோபுரமாக மாற்றும் திறன் கொண்டது என்று ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் உறுதியாக கூறுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஹெலிகாப்டர் அல்லது ட்ரோனில் கூட இணைக்க முடியும். இது அவற்றை வான்வழி செல் கோபுரமாக மாற்றுவதுடன், இது பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை தனது சிக்னல்களை அனுப்பும் வகையில் நீட்டிக்க முடியும். ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ்-ன் தகவலின் படி,இந்த நெட்வொர்க் ஒரு நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட பயனர்களை கையாளும் திறன் கொண்டது.

 மார்ஹெப்கா

மார்ஹெப்கா

ஹியூஸ் பாதுகாப்பு பிரிவின் வணிக மேம்பாட்டு மூத்த இயக்குநரான வெய்ன் மார்ஹெப்கா கூறுகையில், ‘வி.என்.சி உடன் சேர்ந்து ஹியூஸ் நிறுவனம், தொலைதூர மற்றும் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுக்கள் தங்களது பணியை மேற்கொள்ளும் வகையில் இணைப்பை விரிவுபடுத்த முடியும். இந்த புதிய செல்லுலார் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு வலையமைப்பு கட்டமைப்பை உருவாக்க உதவும் டிஓடி மூலம் விரைவான மற்றும் அதிக திறன்வாய்ந்த முடிவெடுக்கமுடியும் . ' என்கிறார்.

விவாதிக்க மறுத்துவிட்டார்

விவாதிக்க மறுத்துவிட்டார்

இந்த புதிய செல்லுலார் தொழில்நுட்பத்திற்காக எந்தவொரு ஒப்பந்தமும் இதுவரை எந்த நிறுவனத்திடம் கையெழுத்திடப்படவில்லை என்று ஹியூஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்; இருப்பினும் இது இத்தளத்தின் உயர்-செயல்திறன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களை பெற்றுவருகிறது. ஆனால் அந்த செய்தித் தொடர்பாளர் இந்த ஒப்பந்தங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் விரிவாக விவாதிக்க மறுத்துவிட்டார்.

Best Mobiles in India

English summary
New technology to transform US military helicopters into cell phone towers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X