Home
Scitech

உலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு! உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்?

பூமி அதிக வெப்பமயம் ஆனதினால், அண்டார்டிக் பகுதிகளில் உள்ள பனிக்கட்டி பாறைகள் வழக்கத்திற்கு மாறாக வெகு வேகமாக உருகி வருகிறது. இதனால் கடல் மட்ட நீர் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சரியாக இன்னும் 50 ஆண்டுகளில் இந்த காரணத்தினால் கடல் அளவு அதிகரித்து பூமியின் கடலோர பகுதிகள் நீருக்குள் மூழ்கும் என்று ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவு தெரிவித்திருக்கிறது.

பூமியைக் காப்பாற்ற புதிய முயற்சி

பூமியைக் காப்பாற்ற புதிய முயற்சி

அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பூமியைக் காப்பாற்ற உலக நாடுகல் அனைத்தும் பல விசித்திர யோசனைகளை முயற்சித்து வருகிறது. அதேபோல் அண்டார்டிக்காவில் உருகும் பனிக்கட்டிகளை மீண்டும் பனிக்கட்டிகளாக்கும் புதிய முயற்சியை ஒரு ஆராய்ச்சியாளர் குழு கண்டுபிடித்துள்ளது.

புதிய பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்

புதிய பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்

இந்தோனேஷியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு, இந்த பிரச்சனைக்குத் தீர்வாக புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலில் உள்ள நீரை மீண்டும் பனிக்கட்டிகளாக மாற்றி, புதிய பனி படுக்கையை அண்டார்டிக்காவில் உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கப்பல்களின் நடுவே உள்ள அறுகோண வடிவம்

கப்பல்களின் நடுவே உள்ள அறுகோண வடிவம்

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் நடுவே அறுகோண வடிவம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் நீருக்குள் மூழ்கும் பொது இந்த அறுகோண வடிவத்தில் கடல் நீர் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட கடல்நீரிலிருந்து உப்பு நீர் மற்றும் சுத்தமான நீர் டீசாலினேஷன்(desalination) முறைப்படி பிரித்தெடுக்கப்படுகிறது.

ஃபிரோஸன்(Frozen) தொழில்நுட்பம்

ஃபிரோஸன்(Frozen) தொழில்நுட்பம்

பிரித்தெடுக்கப்பட்ட சுத்தமான நீர் ஃபிரோஸன்(Frozen) தொழில்நுட்பம் மூலம், அண்டார்டிக்காவில் உள்ள வெப்பத்திற்கு ஏற்ற வெப்பத்தில் தண்ணீரைப் பனிக்கட்டிகளாக மாற்றம் செய்கிறது. அறுகோண பனிக்கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்ட பனிக்கட்டிகள் மீண்டும் தண்ணீரில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் புதிய பனிக்கட்டி படுக்கை அண்டார்டிக்கா கடலில் உருவாக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமி நீருக்குள் மூழ்குவதைத் தடுக்கலாம்

பூமி நீருக்குள் மூழ்குவதைத் தடுக்கலாம்

இந்த முறையைப் பல பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு பல முறை செய்தால், உருகிய பனிக்கட்டி நீர்களை மீண்டும் பனிக்கட்டிகளாக மாற்றம் செய்து, நிச்சயம் கடலோர பகுதிகள் நீருக்குள் மூழ்குவதைத் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்திருக்கிறது.

அங்கீகாரத்திற்கு காத்திருக்கும் தொழில்நுட்பம்

அங்கீகாரத்திற்கு காத்திருக்கும் தொழில்நுட்பம்

இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்கள் இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள் டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்குவதாக இருந்தால் நிச்சயம் அதிலும் ஆபத்து உள்ளதென்று தெரிவித்துள்ளனர். சூரிய சக்தி அல்லது இயற்கை வாயுக்களை எரிபொருளாகக் கொண்டு இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்பட்டால், இந்த யோசனையை நடைமுறைப் படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New technology to prevent global catastrophe Will these icy submarines help : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X