ஏலியன்ஸ் பூமிக்கு வர மாட்டார்களாம், ஏனெனில்..??

முதலில், பெர்மி முரண்பாடு அல்லது பெர்மி பெராடாக்ஸ் என்றால் என்பதை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

|

ஒரு புதிய ஆய்வானது நமது பூமி ஆனது, ஏற்கனவே ஏலியன்களால் காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு விட்டது என்று கூறி உள்ளது. அதாவது, ஏலியன்ஸ் பூமிக்கு வர மாட்டார்கள், ஏனெனில் 'ஏலியன் நாகரிகம்' ஏற்கனவே பூமிக்கு வந்து சென்று விட்டது என்கிறது. என்னடா இது புது குழப்பமாக இருக்கிறது? என்று தலையை சொரிவதற்கு பதிலாக, அந்த ஆய்வையும், அதன் முடிவையும் அலசுவோம், வாருங்கள்!

ஏலியன்ஸ் பூமிக்கு வர மாட்டார்களாம், ஏனெனில்..??

முதலில், பெர்மி முரண்பாடு அல்லது பெர்மி பெராடாக்ஸ் என்றால் என்பதை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பெர்மி முரண்பாடு என்பது இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மியின் பெயரின் கீழ் உருவான ஒரு பெயராகும். இந்த கோட்பாடு ஆனது ஏலியன்ஸ் எனப்படும் வேற்று வாசிகளின் நாகரிகங்களின் இருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கொக்கரிக்கும் ஒரு கோட்பாடு ஆகும்.

காலனித்துவப்படுத்தி உள்ளனர்!

காலனித்துவப்படுத்தி உள்ளனர்!

ஆனால், சமீபத்தில் வெளியாகி உள்ள இந்த விரிவான ஆய்வானது, ஃபெர்மி பெராடாக்ஸின் மீதான ஒரு வித்தியாசமான அணுகுமுறை வெளிப்படுத்தி உள்ளது. பல வகையான கோட்பாடுகள் மற்றும் உருவகப்படுத்துதல்களின் கலவையைப் பயன்படுத்திய பின், ஆராய்ச்சியாளர்கள் "மேம்பட்ட வேற்று நாகரிகங்கள்" ஆனது நீண்ட காலமாக நமது கேலக்ஸியை காலனித்துவப்படுத்தி உள்ளனர் என்று கூறி உள்ளனர்.

மிகப்பழைய கடந்த காலத்தில் நடந்து இருக்கலாம்!

மிகப்பழைய கடந்த காலத்தில் நடந்து இருக்கலாம்!

இந்த காலனியாக்கம் அல்லது குடியேற்றம் ஆனது, பூமியின் மிகப்பழைய கடந்த காலத்தில் நடந்து இருக்கலாம் என்பதால் அத்தகைய அன்னிய குடியேற்றத்திற்கான எந்தவிதமான அறிகுறியும், ஆதாரமும் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த ஆய்வின் தொடக்கம் எது?

இந்த ஆய்வின் தொடக்கம் எது?

ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வான் அறிவியலாளர் ஆன ஆடம் பிராங்கின் தலைமையிலான ஒரு குழுவானது, ஏன் இன்னமும் அறிவார்ந்த நாகரிகத்தை (ஏலியன்ஸ்) நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக காரணங்களை ஒரு ஆய்வாக எடுத்து நடத்தி உள்ளது, அதுதான் இந்த ஆய்வின் தொடக்கம் ஆகும்.

வெறும் கனவு தான்!

வெறும் கனவு தான்!

இதுவரை கிடைத்த தரவுகளின் மூலம், மூன்று முக்கிய சூழல்களை ஆரய்ச்சியாளர்கள் உருவகப்படுத்தி உள்ளனர். அந்த மூன்றில் முதல் இரண்டு உருவகம் ஆனது ஃபெர்மி முரண்பாட்டுடன் ஒற்று போகிறது: அதாவது உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களை கொண்டுள்ள கிரகங்கள் ஏராளமாக உண்டு என்றால் உயிர் வாழ்தல் என்பதும் எளிதானது தான். இல்லையெனில், தொலைதூரத்தில் மற்றும் ஆட்கொல்லி சூழ்நிலைகளை கொண்ட இடங்கள் தான் ஏராளமாக இருக்கிறது என்றால் குடியேறுவது என்பதும் அங்கு வாழ்க்கை என்பதும் வெறும் கனவு தான் என்கிறது.

 பூமி மட்டும் தானா அல்லது?

பூமி மட்டும் தானா அல்லது?

ஆனால் மூன்றாவது நிலைப்பாடு: ஏலியன் நாகரிகங்கள் ஆனது மிகவும் தொலைதூர மண்டலங்களுக்கு பயணம் செய்யும் திறனைக் கொண்டிருக்கலாம், மற்றும் அவர்கள் பயணத்தின்போது, ​​பிரபஞ்சத்தில் ஆங்காங்கே குடியேற்றங்களை கூட ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறது. அந்த ஆய்வானது, இன்னும் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளது என்பதும், பூமி மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது கேலக்ஸிகளிலும் இது நடந்து உள்ளதா கணக்கீடுகளும், மாதிரி கோட்பாடுகளும் உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள் உண்டு என்று கூறும் இதே ஆய்வானது!

வாய்ப்புகள் உண்டு என்று கூறும் இதே ஆய்வானது!

ஏலியன்கள் பூமியில் குடியேறியதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூறும் இதே ஆய்வானது ஒரு கேலக்சியில் இருந்து ,மற்றொரு கேலக்சிக்கு பயணிப்பது என்பது மிக மிக மிக நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால், எவ்விதமான ஜீவராசிகளும் இல்லாத ஸ்பேஸ்ஷிப்கள் கூட பூமியை வந்து அடைந்து இருக்கலாம் என்கிறது. இப்படியானதொரு "மதில் மேல் பூனை" என்பது போன்ற இடைப்பட்ட நிலைப்பாட்டின் கீழ் தான், பிராங்க் மற்றும் அவரது ஊழியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
New Study Suggests Earth May Have Been ‘Colonized’ Long Ago by ‘Alien Civilizations: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X