இந்த ஆளுக்கு மூளை குழம்பி விட்டதா? ஏன் இப்படி செய்கிறார்?
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒரு பெரிய ராக்கெட்டை (ஸ்டார்ஷிப் என்று அழைக்கப்படுகிறது) உருவாக்கி வருகிறது. 1950 களின் பிற்பகுதியில் பாதிப்புகளை சந்தித்த அட்லஸ் ப்ரோக்ராமிற்கு பிறகு, விண்கல கட்டும
அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர் தான் எலான் மஸ்க். அறியாதோர்களுக்கு விண்வெளிக்கு சிவப்பு நிற டெஸ்லா காரை அனுப்பியவர் என்று கூறினால் நினைவிற்கு வரலாம். தற்போது இவர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு மிகவும் பளபளப்பான ஒரு ஸ்டார்ஷிப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்? என்னது ஸ்டீல் கொண்டா? ராக்கெட்டா? இந்த ஆளுக்கு என்ன மண்டையில் ஏதேனும் கோளாறா என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில்கள் இதோ.

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒரு பெரிய ராக்கெட்டை (ஸ்டார்ஷிப் என்று அழைக்கப்படுகிறது) உருவாக்கி வருகிறது. 1950 களின் பிற்பகுதியில் பாதிப்புகளை சந்தித்த அட்லஸ் ப்ரோக்ராமிற்கு பிறகு, விண்கல கட்டுமானத்தில் ஸ்டீல் பயன்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

300-தொடர் துருப்பிடிக்காத ஸ்டீல் கொண்டு உருவாக்கம்:
இம்மாதிரியான ராக்கெட் ஒன்று தயார் ஆகிறது என்றதும் ஆர்வம் கிளம்பியது பின் அதன் வடிவமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்கிற தகவல் வெளியானது அந்த ஆர்வம் கூடியது. இறுதியாக வெளியான தகவல், அந்த ஆர்வத்தை விண்வெளியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. ஏனெனில், வெளியான அந்த தகவல் ஆனது, ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கும் ஸ்டார்ஷிப் ராக்கெட் (முன்னர் பிஎப்ஆர் அதாவது பிக் பல்கான் ராக்கெட் அல்லது பிக் எப்-அதர் வேர்ல்ட் ராக்கெட் என்று பெயரிடப்பட்டு இருந்தது) மற்றும் அதன் சூப்பர் ஹெவி பூஸ்டர் ஆகியவற்றின் உடல் ஆனது 300-தொடர் துருப்பிடிக்காத ஸ்டீல் கொண்டு உருவாக்கம் பெற உள்ளதாக தெரிவித்து உள்ளது.

சோதனை பதிப்பின் புகைப்படத்தை ட்வீட் செய்தார்:
அதை நிரூபிக்கும் வண்ணம், கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அன்றும், எலான் மஸ்க் கூறப்படும் ஸ்டார்ஷிப்பின் ஒரு சோதனை பதிப்பின் புகைப்படத்தை ட்வீட் செய்தார். அந்த புகைப்படத்தில் காணப்படும் ராக்கெட் ஆனது சுமார் 16,400 அடி உயரத்திற்கு செல்லக்கூடும் விடிஓஎல் சோதனை விமானத்தின் முன்மாதிரியை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளதை அறிய முடிந்தது. விடிஓஎல் சோதனை விமான என்றால் செங்குத்தாக கிளம்பி மறுபடியும் செங்குத்தாகவே தரை இறங்கும் விமானம் ஆகும். எலான் மஸ்க் இதை "ஹாப்ஸ்" என்று அழைக்கிறார்.

துருப்பிடிக்காத ஸ்டீல் வடிவமைப்பின் காரணம் என்ன:
துருப்பிடிக்காத ஸ்டீலால் உருவாக்கம் பெறும் ஸ்பேஸ்எக்ஸின் இந்த ராக்கெட் ஆனது பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் இது ஸ்டீல் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்காது என்பதிலும் சந்தேகம் இல்லை. அப்படியானால் துருப்பிடிக்காத ஸ்டீல் வடிவமைப்பின் நிஜமான பின்னணி அல்லது உண்மையான காரணம் தான் என்ன? - அதற்கு எலான் மஸ்க்கே விடை கூறி உள்ளார்.ஆம் இது சார்ந்த கேள்வி ஒன்றிற்கு பாப்புலர் மெக்கானிக்ஸ் உடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் பதில் அளித்து உள்ளார்.

உலகில் யாரும் முயற்சிக்காத ஒன்று:
மிகவும் விலை குறைவானது மற்றும் பலமானது என்பதற்காக மட்டும் ஸ்டீலை நாங்கள் தேர்ந்து எடுக்கவில்லை. இதற்கு முன் உலகில் வேறு எவரும் முயற்சி செய்து பார்த்திடாத ஒன்றை நாங்கள் செய்ய விரும்புகிறோம் : அதாவது முதல் மறு உருவாக்க வெப்ப கவசத்தை உருவாக்க விரும்புவதாக எலான் விளக்கம் அளித்து உள்ளார்.

கவசம் போல் செயல்படும்:
மேலும் கூறுகையில், இந்த ஸ்டார்ஷிப்பின் வெளிப்புறத்தை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும் டிரான்ஸ்பிரேஷன் கூலிங் எனும் என்று ஒரு நுட்பத்தை பயன்படுத்த ஸ்டீல் உதவும். இந்த நுட்பத்தின் கீழ், திரவத்தினால் குளிர்ச்சி அடையும் இடைவெளி கொண்ட பிரிக்கப்பட்ட இரண்டு ஸ்டீல் அடுக்குகள் ராக்கெட் மீது உருவாக்கம் பெரும். அது ராக்கெட்டிற்கான ஒரு கவசம் போல் செயல்படும் என்றும் எலான் மஸ்க் விளக்கினார்.

புத்திசாலித்தனமா? முட்டாள் தனமா?:
சுருக்கமாக, இந்த யோசனை ஆனது ராக்கெட்டை குளிர்ச்சியாக வைக்க அனுமதிக்கும். உடன் அதன் இரட்டை சுவர் கவசம் ஆனது ராக்கெட்டை விறைப்பாக வைத்துக்கொள்ளும், ஆக ராக்கெட் சரிந்து போகும் வாய்ப்பு குறையும். அவ்வளவுதான். இது புத்திசாலித்தனமா அல்லது முட்டாள் தனமா என்பதை ஸ்டார்ஷிப்பின் ஏவலின் போது நாம் அறிந்து கொள்வோம்.


Click it and Unblock the Notifications