TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
ஆயுதம் என்றால் என்ன? என்றவொரு கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கான பெரும்பாலான பதில் - "காயம் தொடங்கி உயிர் இழப்பு வரையிலான சேதத்தை ஏற்படுத்தும் ஒன்று" என்பதாகத்தான் இருக்கும். ஆனால், ரஷ்யாவின் சமீபத்திய ஆயுதம் ஒன்று எதிரிகளின் மனநிலையை பாதிக்கும் படியான உருவாக்கத்தை பெற்று உள்ளது.
நம்பும் படி இல்லையா? ஆரம்பத்தில் எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் ரஷ்யாவின் பிலின் 5பி - 42 (Filin 5P-42) பற்றிய விளக்கத்தை படித்த பின், நம்ப தொடங்கினோம். அப்படி என்ன விளக்கம்?
ஆயுத தயாரிப்பின் முன்னோடி
ரஷ்ய கடற்படை படகுகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஒட்டு ஆயுதம் தான் - பிலின் 5பி - 42. இதன் தாக்கம் அது எதிரிகளை மயங்க வைக்கும், மனநிலையை குழப்பும் திறனை கொண்டது என்கிறது, ஆயுத தயாரிப்பின் முன்னோடி நாடான ரஷ்யா.
ஆர் ஐ ஏ நோவோஸ்டி
ரஷ்யாவின் தேசிய செய்தி ஊடகமான ஆர் ஐ ஏ நோவோஸ்டியின் செய்தி அறிக்கையின் படி, பிலின் 5பி - 42 எனும் ஆயுதம் ஆனது, அதன் இலக்குகளை நோக்கி வலுவான ஒளியின் அலைவுகளை உருவாக்கும், அந்த அலைவுகள் ஆனது குழப்பத்தை விளைவிக்கும் மற்றும் திசை திருப்பப்படுவதற்கு காரணமாக அமையும்.
தன்னார்வலர்கள்
மிகவும் ரகசியமான நடத்தப்பட்ட இந்த் ஆயுதத்தின் சோதனையில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்களாம். சோதனையில், இந்த புதிய ஆயுதத்தால் பாதுகாக்கப்பட்ட இலக்குகளை தன்னார்வலர்கள் சுட முடியவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உறுதியற்ற தன்மை மற்றும் மயக்கம் ஆகும். ஆம், சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்கள் எதையும் தாக்க முடியவில்லையாம் மற்றும் கிட்டதட்ட தன்னார்வலர்கள் குழுவின் இருபது சதவிகிதம் பேர், இந்த புதிய ஆயுதத்தின் விளைவாக தங்கள் கண்களில் மிதந்து கொண்டிருக்கும் ஒளிப் புள்ளிகளை மட்டுமே கண்டதாக கூறி உள்ளனராம்.
நான் லீத்தல்
அதனால் தான் இந்த பிலின் 5பி - 42 ஆனது மரணத்தை உண்டாக்காத (நான் லீத்தல்) விஷூவல் ஆப்டிகல் குறுக்கீட்டு சாதனம் என்று அழைக்கப்படுகிறது. இது ரஷ்ய கடற்படை போர்க்கப்பல்களான அட்மிரல் கோர்ஷ்கோவ் மற்றும் அட்மிரல் கசடோனோவ் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சன்கிளாஸ்கள்
இந்த தகவல் ஆனது ரஷ்யாவின் மாநில செய்தி ஊடகத்தை தவிர வேறு எந்த அமைப்புகளாலும் வெளியிடப்படவில்லை. ஒரு கருத்துரையாளரின் கருத்துப்படி; வெறுமனே சன்கிளாஸ்கள் அணிந்து கொள்வதின் மூலம் இந்த ஆயுதம் ஏற்படுத்தும் சேதத்தை நம்மால் குறைக்க முடியும்.
ஒளியை மூலமாக வைத்து ஆயுதம் உருவாக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல
வெளியான அறிக்கைகளின் படி, பிலின் 5பி - 42 ஆனது ரோஸ் எலெக்ட்ரானிக்ஸால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது ரஷ்யாவின் மின்னணு உற்பத்திகளில் 80 சதவிகித்தை தயாரிக்கும் ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று ஒளியை மூலமாக வைத்து ஆயுதம் உருவாக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. உண்மையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிய ஆனால் சக்திவாய்ந்த டார்ச்சுகள் (ஒளி) மூலம் ஆயுதங்கள் உருவாக்கும் பணியானது, பாதுகாப்பு சேவை நிறுவனங்களினால் தொடர்ச்சியாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
பிலின் 5பி-42
ஒருபக்கம், நாம் பரபரப்பாக பேசும் ரஷ்யாவின் பிலின் 5பி-42 பற்றிய மேலும் விவரங்களைக் கண்டுபிடிப்பதற்காக காத்திருக்க வேண்டும் என்பது இருக்கு, மறுபக்கம் இது உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என்பதும் கேள்விக்குறியில் தான் இருக்கிறது!