Home
Scitech

தண்ணி பாட்டில கூட ரோபோவா மாற்றலாம்.! "புதிய ரோபோ ஸ்கின்" தொழில்நுட்பம் அறிமுகம்.!

ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய "ரோபோ ஸ்கின்" என்ற தோல் போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், இது பயனர்கள் தினசரி பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களையும் ரோபோக்களாக மாற்றுவதற்கும் உதவுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய "ரோபோ ஸ்கின்" என்ற தோல் போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், இது பயனர்கள் தினசரி பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களையும் ரோபோக்களாக மாற்றுவதற்கும் உதவுகிறது.

என்னப்பா சொல்ற, தினசரி பயன்படுத்தும் பொருளை ரோபோவா மாற்ற முடியுமா? அப்ப என்னுடைய தண்ணி பாட்டில்ல ரோபோவா மத்த முடியுமானு நீங்க கேட்பிங்க எனக்குத் தெரியும்.

தண்ணி பாட்டில கூட ரோபோவா மாற்றலாம்.! புதிய

ஆராய்ச்சியாளர்களின் பதில் "ஓ- தாராளமா உங்கள் தண்ணி பாட்டில்ல ரோபோவா மாற்றலாமே என்பது தான்". இதற்காகத் தானே பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த ரோபோ ஸ்கின்களை உருவாகியிருக்கிறோம்.

ரோபோ ஸ்கின்

ரோபோ ஸ்கின்

அன்றாடப் பயன்படுத்தும் பொருட்களை ரோபோக்களாக மாற்றி, செவ்வாய் மற்றும் வேற்றுக் கிரக ஆய்வுக்கு இந்த ரோபோ ஸ்கின் தொழில்நுட்பம் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இத்துடன் விண்வெளி வீரர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். எவ்விதமான சுற்றுச்சூழலிலும் இந்த ரோபோ ஸ்கின்கள் செயல்படும் என்று கூறப்படுகிறது.

யேல் பல்கலைக்கழகம்

யேல் பல்கலைக்கழகம்

யேல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஆராய்ச்சியாளர்களால் இந்த ரோபோ ஸ்கின் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோபோ தோல்களை, தேடல் மற்றும் மீட்பு ரோபோக்கள் என அனைத்துச் சேவைக்கும் பயன்படுத்த முடியும். இது ஒரு அணியக்கூடிய தொழில்நுட்பம் எனவும், உயிரற்ற தினசரி பொருள்களை அசைவூட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ரோபோட் மற்றும் ரோவர்

விண்வெளி ரோபோட் மற்றும் ரோவர்

அதே போன்று, இந்த தொழிநுட்பத்தை மறுசீரமைக்கப்பட்ட பொருட்களுடன் இனைத்து விண்வெளித் திறன்களை ஆராய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. விலை உயர்ந்த விண்வெளி ரோபோட்களுக்கு பதிலாகவும் ரோவர்களுக்கு பதிலாகவும் மிகக் குறைந்த செலவில் ரோபோவாகவும் மற்றும் ரோவராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு.

உதவி பேராசிரியர்

உதவி பேராசிரியர்

இந்தத் தொழில்நுட்ப உதவியுடன் பலூன் முதல் கசங்கி போன காகிதம் வரை அனைத்தையும் ரோபோவாக மற்ற முடியும். கணிக்க முடியாத சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் ஆழ்ந்த விண்வெளி ஆராய்ச்சிக்காகவும் பல்வகைத் தன்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே இந்த ரோபோ ஸ்கின்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக, யேல் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கிராமர் போடிக்லியோ(Kramer-Bottiglio) கூறினார்.

 சட்டை

சட்டை

இந்த புதிய தொழில்நுட்ப உதவியுடன் பல வகை ரோபோ ஸ்கின்களை ஆராய்ச்சியாளர்களின் குழு உருவாக்கியுள்ளது. போம் சிலிண்டர் உதவியுடன் இன்ச்வார்ம் போல பொருட்க்களை நகர வைக்க முடியும். மோசமான வளைந்த தோற்றத்தை மாற்ற கூடிய சட்டை ஒன்றையும் தயாரித்திருக்கிறது. கிரிப்பர் உடன் கூடி ரோபோ உதவியுடன் பொருட்களை பிடிக்கவும் நகர்த்தவும் உதவுகிறது.

Best Mobiles in India

English summary
New 'Robotic Skins' Can Assist Astronauts in Mars Exploration : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X