Home
Scitech

எச்சரிக்கை பேய் புயல் வீசும்.! பீதியை கிளப்பும் நாசாவின் புதிய ஆய்வு!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஒரு எச்சரிக்கை விடுக்கிறது என்றால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது, அதிலும் குறிப்பாக பருவநிலை பற்றிய எச்சரிக்கைகளை நிகழ்த்தும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஒரு எச்சரிக்கை விடுக்கிறது என்றால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது, அதிலும் குறிப்பாக பருவநிலை பற்றிய எச்சரிக்கைகளை நிகழ்த்தும் போது அதனை காதில் வாங்காமல் கடக்க கூடாது. ஏனெனில் செவ்வாய் கிரகத்தையும், சனி கோளின் வளைவுகளையும் ஆராய்வது மட்டுமே நாசாவின் வேலை அல்ல. பூமியையும் அதன் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் நாசாவின் வேலை தான்.

அப்படியான நோக்கத்தின் கீழ், சமீபத்தில் நாசா நிகழ்த்திய ஒரு பருவநிலை சார்ந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அதை முடிவு என்று கூறுவதை விட எச்சரிக்கை என்றே கூறலாம்.

முதலில் வெப்பமடைதல் என்றால் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

முதலில் வெப்பமடைதல் என்றால் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

பூமியின் வெப்பநிலையின் சராசரி அளவானது நீண்டகாலமாக உயர்ந்து வர, அதன் விளைவாக பூமியின் வெப்பநிலை அளவீடுகள் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு ஆனது ஒரு சுழற்சியை போல் செயல்பட்டு பல வகையான விளைவுகளை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் பூமியின் வெப்பநிலையில் மாற்றத்தை (அதிகரிப்பை) கொண்டு வரும் - இதை தான் வெப்பமடைதல் என்கிறோம்.

சரி இப்போது நாசாவின் அந்த முடிவு (எச்சரிக்கை) என்ன என்பதற்குள் வருவோம்!

சரி இப்போது நாசாவின் அந்த முடிவு (எச்சரிக்கை) என்ன என்பதற்குள் வருவோம்!

காலநிலை மாற்றம் (climate change) காரணமாக, வெப்பமண்டல கடல்களில் (tropical oceans) நடக்கும் வெப்பமயமாதல் ஆனது தீவிமான மழை மற்றும் புயல்களின் அதிர்வெண்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது நாசாவின் சமீபத்திய ஆய்வு.

எந்த தரவின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது?

எந்த தரவின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது?

கலிஃபோர்னியாவின், பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தை (JPL) சேர்ந்த ஹார்ட்முட் அமுன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு தான் இந்த ஆய்வை நிகழ்த்தி உள்ளது. இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தரவானது, நாசாவின் வளிமண்டல அகச்சிவப்பு ஒலி கருவி மூலம் சுமார் 15 ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட "கடுமையான புயல்களின்" தரவு என்பதும், நாம் குறிப்பிடும் இந்த கருவி ஆனது, சராசரியான கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அதன் இடையேயான உறவை நிர்ணயிக்கும் வெப்பமண்டல கடல்களை கண்காணித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசாவின் பிறவியில்

நாசாவின் பிறவியில் "கடுமையான மழை" என்றால் எது?

25 கிமீ பரப்பளவுக்கு குறைந்தபட்சம் மூன்று மில்லிமீட்டர் மழை பெய்யும் பட்சத்தில் அது கடுமையான புயல்கள் என்கிற வரையறைக்குள் வருகிறது. இம்மந்திரியான புயலானது, கடல் மேற்பரப்பின் வெப்பநிலை ஆனது 28 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும்போது தான் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது எங்கு போய் முடியும்?

இது எங்கு போய் முடியும்?

கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆனது ஒரு டிகிரி செல்சியஸ் என்கிற விகிதத்தில் அதிகரித்தால் கூட, கடுமையான புயல்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் 21 சதவிகிதம் கூடும் என்றும் இந்த ஆய்வின் மூலம் கண்டுடறிய பட்டுள்ளது. ஆய்வின் தலைவரான ஹார்ட்முட் அமுனின் படி, வெப்பமான சூழலின் கீழ் தான் கடுமையான புயல்கள் அதிகம் உருவாகும் என்று கூறியதோடு சேர்த்து, பொதுவாக இடியுடன் கூடிய புயல் ஆனது ஆண்டின் வெப்பமான பருவத்தில் தான் நிகழும் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார். மேலும் அவர் "புயல்களின் உருவாக்கம் எந்த அளவில் அதிகரிக்கும் என்பதை மதிப்பீட்டு அடிப்படையில் வெளிப்படுத்தும் முதல் தரவு இதுவாகும்" என்றும் கூறி உள்ளார்.

2.7 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிற்கு உயர்த்தும்!

2.7 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிற்கு உயர்த்தும்!

தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாதிரிகளின் படி, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் ஒரு நிலையான அதிகரிப்பு உண்டாகி வருகிறது. அதாவது ஆண்டு ஒன்றிற்கு 1 சதவிகிதம் என்கிற அளவில் உயர்ந்து வருகிறது. இந்த கிடுகிடு உயர்வானது, இந்த நூற்றாண்டின் முடிவில், வெப்பமண்டல கடல் மேற்பரப்பு வெப்பநிலையை 2.7 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிற்கு உயர்த்தும். இது நடந்தால், தீவிரமான புயல்களின் அதிர்வெண் ஆனது 60 சதவிகிதம் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிக வெள்ளம், அதிக கட்டமைப்பு சேதம், அதிக பயிர் சேதம்!

அதிக வெள்ளம், அதிக கட்டமைப்பு சேதம், அதிக பயிர் சேதம்!

"எங்களின் ஆய்வு முடிவுகளானது, பெருங்கடல்களின் கணிசமான வெப்பமயமாதலின் கீழ் உருவாகப்போகும்/ உருவாகும் விளைவுகளுக்கு கண்கூடான உதாரணங்களை வழங்குகிறது" என்று கூறிய ஹார்ட்முட் அமுன், "அதிக புயல்கள் என்றால் அதிக வெள்ளம், அதிக கட்டமைப்பு சேதம், அதிக பயிர் சேதம் என்று அர்த்தம்" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Best Mobiles in India

English summary
New NASA study shows warming seas may increase frequency of extreme storms : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X