இனி ஒரு மீனவரின் உயிர்கூட போகக்கூடாது : களத்தில் இறங்கிய இஸ்ரோ.!

|

இனி ஆழமான கடல் பகுதிகளுக்குள் மீன் பிடிக்க செல்லும் நாட்டின் மீனவர்களை, நாம் இழக்க வேண்டிய அல்லது தொலைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இனி ஒரு மீனவரின் உயிர்கூட போகக்கூடாது : களத்தில் இறங்கிய இஸ்ரோ.!

ஏனெனில் இம்முறை களத்தில் இறங்கியுள்ளது அரசியல் கட்சிகளோ அல்லது அவர்களின் வாக்குறுதிகளோ அல்ல - நாசா உட்பட உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களை திணறடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரோ, மீனவர்களுக்காக களமிறங்கியுள்ளது.

சுமார் 1,500 கிமீ தூரம் வரை இணைப்பு..

சுமார் 1,500 கிமீ தூரம் வரை இணைப்பு..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பெற்ற ஒரு ஹை-டெக் தொடர்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் இணையம் அல்லது டவர்களின் உதவி இல்லாமல் சுமார் 1,500 கிமீ தூரம் வரை இணைப்பில் இருக்க முடியும்.

மற்றொரு இரண்டு மாதங்களில்..

மற்றொரு இரண்டு மாதங்களில்..

இந்த ஹை-டெக் கம்யூனிகேஷன் சாதனமானது மற்றொரு இரண்டு மாதங்களில் வர்த்தக சுழற்சியின்கீழ் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் அனைத்து கடலோர மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இருப்பிடத்தை லாக் செய்யும்..

இருப்பிடத்தை லாக் செய்யும்..

படகுகளில் பொருத்தப்படும் இந்த சாதனம், படகு இருக்கும் பகுதியின் இருப்பிடத்தை லாக் செய்யவும் மற்றும் அந்த இருப்பிடத்தை, நிலத்தில் இருக்கும் வழிசெலுத்தும் கட்டுப்பாட்டு அறைக்கு அப்டேட் செய்ய உதவும் இந்தியாவின் சொந்த பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைகோள் ஆன நாவிக் (NavIC) சாட்டிலைட்டை பயன்படுத்திக்கொள்ளும்.

குறைந்த அழுத்த தாழ்வுநிலை அல்லது புயல்..

குறைந்த அழுத்த தாழ்வுநிலை அல்லது புயல்..

இந்த இருப்பிட கண்காணிப்பு தவிர, மீனவர்களுக்கு கடல் வளி மண்டலத்தின் நிலை குறித்த உரை மற்றும் வீடியோ செய்திகளும் இந்த சாதனத்தின் வழியாக அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு, புயல் ஏற்பட்டால் அல்லது அது தீவிரமடைந்தால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படும்.

இந்திய வளிமண்டலவியல் திணைக்களம்..

இந்திய வளிமண்டலவியல் திணைக்களம்..

இஸ்ரோவின் தலைவர் கிரன் குமார் கூறுகையில், இந்த திட்டமானது இந்தியன் நேஷனல் சென்டர் ஃபார் ஓசன் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (ஐ.இ.சி.சி.ஐ.எஸ்), ஹைதராபாத் மற்றும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் (ஐஎம்டி) ஆகியோருடன் இணைந்து செயல்படுமென தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் பிராந்திய மொழியில்..

மீனவர்களின் பிராந்திய மொழியில்..

கடல் சார்ந்த வானிலை முன்னறிவிப்பு பற்றிய தகவலை ஐஎன்சிஓஐஎஸ் (INCOIS) வழங்கும். இந்த தகவல் மீனவர்களின் பிராந்திய மொழியில் இஸ்ரோவின் நேவிக் மூலம் விநியோகிக்கப்படும். இந்த நோக்கத்திற்காக ஒரு புதிய மொபைல் பயன்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது.

சாத்தியமான அபாயத்தை பற்றிய எச்சரிக்கை..

சாத்தியமான அபாயத்தை பற்றிய எச்சரிக்கை..

ஒரு மீனவர் செய்ய வேண்டிய அனைத்தும், அவரின் படகீழ் இந்த சாதனத்தை நிறுவ வேண்டும். அதன்பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட குறிப்பிட்ட மொபைல் பயன்பாட்டை திறக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு சாதனமாநாடு நேவிக்'கிற்கு சேகரித்த தரவை அனுப்பும் மற்றும் மொபைல் ஆப் மூலம் சாத்தியமான அபாயத்தை பற்றிய எச்சரிக்கையை மீனவர்களுக்கு அனுப்பும்.

சுமார் 500 கண்காணிப்பு சாதனங்கள்..

சுமார் 500 கண்காணிப்பு சாதனங்கள்..

கேரள மீன்வளத் துறையுடன், இந்த திட்டம் சார்ந்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், சுமார் 500 கண்காணிப்பு சாதனங்கள் இஸ்ரோவின் மூலம் தயாரிக்கப்பட்டு ஸ்பான்சர் செய்யப்படும் என்றும் பாலகிருஷ்ணன் நாயர் (தலைவர், சயின்ஸ் அறிவியல் மற்றும் தகவல் சேவைகள்) தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் கேட்டறியப்படும்..

கருத்துக்கள் கேட்டறியப்படும்..

இந்த கண்காணிப்பு சாதனத்தின் பெரிய அளவிலான உற்பத்தி தொடங்கும் முன்னர், மீனவர்களுக்கு இந்த சாதனம் வழங்கப்பட்டு அவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New ISRO communication gadget to ensure safety of fishermen 1,500 kms into sea. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X