பூமியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 151 பூச்சி இனம்! இதில் 5 பூச்சியின் பெயரே வித்யாசம்!

|

இந்த ஆண்டு பூமியில் நடந்த பல விசித்திரமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று, ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (CSIRO) என்ற அமைப்பு பூமியில் வாழும் 165 புதிய உயிரினங்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தகுந்த பிரிவுகளுடன் பிரிவுபடுத்தி பெயரிட்டுள்ளது. இதில் 5 புதிய பூச்சிகளின் பெயரை முற்றிலும் வினோதமான முறையில் பிரபல கதாபாத்திரத்தின் பெயர்கள் பெயரிட்டுள்ளது.

புதிய அறிவியலில் விஷயங்களைப் பெயரிடும் செயல்முறை

புதிய அறிவியலில் விஷயங்களைப் பெயரிடும் செயல்முறை

பூமியில் நமக்குத் தெரியாமல் இன்னும் பல மர்மங்கள் ஒளித்திருக்கத் தான் செய்கிறது. அவற்றை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் முடிந்த வரை கண்டுபிடித்து, அவற்றின் தகவல்களை வெளி உலகிற்குப் பகிர்ந்து வருகின்றனர். அப்படி கண்டுபிடிக்கப்படும் புதிய அறிவியலில் விஷயங்களைப் பெயரிடும் செயல்முறை என்பது எப்பொழுதும் ஒரு வேடிக்கையான நிகழ்வாகவே இருக்கிறது. தாவர மற்றும் விலங்கினங்களின் உலகில் பல பாப் கலாச்சார குறிப்புகளுக்குப் பஞ்சமில்லை என்று தான் நாம் கூறவேண்டும்.

165 புதிய உயிர்கள் அடையாளம்

165 புதிய உயிர்கள் அடையாளம்

பிரபல பாப் பாடகி லேடி காகவின் பெயரில் ஒரு தாவரம் பெயரிடப்பட்டுள்ளது போல, தற்பொழுது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 151 பூச்சிகளில் 5 பூச்சிகளின் பெயர் மார்வெல் கதாபாத்திரங்களை ஒற்றதாக அமைத்துள்ளது. அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு 165 புதிய உயிர்களை அடையாளம் கண்டுள்ளனர். இதில் இரண்டு மீன் வகைகள், மூன்று கிளையின பறவைகள் மற்றும் பல்லியில் உயிர் வாழும் ஒரு புதிய வகை ஒட்டுண்ணி ஆகியவற்றை CSIRO கண்டுபிடித்துள்ளது.

10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சஸ மாமூத்தின் எலும்புகள் கண்டுபிடிப்பு! இதில் டிவிஸ்ட் இருக்கு!

பூச்சியியல் வல்லுநர் டாக்டர் பிரையன் லெசார்ட்

பூச்சியியல் வல்லுநர் டாக்டர் பிரையன் லெசார்ட்

ஒரு இனத்திற்குப் பெயரிடுவது அந்த இனத்தைப் புரிந்து கொள்வதற்கான முதல் படியாகும், என்று சி.எஸ்.ஐ.ஆர்.ஓ பூச்சியியல் வல்லுநர் டாக்டர் பிரையன் லெசார்ட் கூறியுள்ளார். சரியான ஒரு விஞ்ஞான பெயர் இல்லாமல், இந்த இனங்கள் அறிவியல் உலகின் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும், இதனால் இவற்றின் தோற்றம் மற்றும் அடையாளங்களை வைத்து இவற்றிற்கு பெயரிட்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

டெட்பூல்ஸ் ஃபிளை (Deadpool's fly)

தி ஸ்டான்லீஸ் ஃபிளை (The Stan Lee's fly) என்று பூச்சிக்குப் பெயரிடப்பட்டதற்குக் காரணம் இது பார்ப்பதற்கு ஸ்டான்லியின் தோற்றத்தில் சன்கிளாஸ்கள் போன்ற கண்களுடன், வெள்ளை மீசையுடன் இருக்கிறது. இதேபோல் டெட்பூல்ஸ் ஃபிளை (Deadpool's fly) அதன் பின்புறத்தில் டெட்பூல் மாஸ்க் போன்ற அடையாளங்களைக் கொண்டுள்ளது, இது டெட்பூல் கதாபாத்திரத்தின் சிவப்பு மற்றும் கருப்பு முகமூடியை ஒத்திருக்கிறது என்று சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?

ஹுமோரோலெதலிஸ் செர்ஜியஸ்

ஹுமோரோலெதலிஸ் செர்ஜியஸ்

இதற்கு அறிவியல் பெயராக நாங்கள் 'ஹுமோரோலெதலிஸ் செர்ஜியஸ்(Humorolethalis sergius)' என்ற பெயரிட்டுள்ளோம், லத்தீன் மொழியில் Humoro என்பது ஆபத்தான நகைச்சுவை என்று பொருள் மற்றும் lethalis என்பது ஈரமான பொருளைக் கொண்ட மரணத்தைக் குறிக்கிறது என்று இதற்குப் பெயரிட்ட CSIRO ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

லோகி, தோர் மற்றும் ப்ளாக் விடோ பூச்சிகள்

லோகி, தோர் மற்றும் ப்ளாக் விடோ பூச்சிகள்

இதனைத் தொடர்ந்து மற்ற மூன்று பூச்சிகளுக்கு லோகி, தோர் மற்றும் ப்ளாக் விடோ கதாபாத்திரத்தின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்.ஓ படி, ஐந்து உயிரினங்களும் கொள்ளை பூச்சிகள், அவை பூச்சி உலகின் அசாசின்ஸ்(assassins) என்று அழைக்கப்படும் கொலைகாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாளம் காண பிரபல கதாபாத்திரத்தின் பெயர்கள்

அடையாளம் காண பிரபல கதாபாத்திரத்தின் பெயர்கள்

இவற்றைப் பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகள் மனித உயிர்களையும், உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு உதவும் என்றும், இவற்றை அடையாளம் காண மிகவும் முக்கியமானது இவற்றின் பெயர்கள் தான் என்று சி.எஸ்.ஐ.ஆர்.ஓ தேனீ மற்றும் குளவி நிபுணர் டாக்டர் ஜுவானிதா ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Fly Species Named After Deadpool For Uncanny Resemblance with Marvel Superhero's Mask : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X