Home
Scitech

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இருமடங்கு பெரிய "சூப்பர் எர்த்" கோள் கண்டுபிடிப்பு.!

பூமியைத் தாண்டி மக்கள் வாழ்வதற்கு ஏற்றக் கோளை ஆராய்ச்சியாளர்கள் பல காலமாகத் தேடி வருவது நாம் அறிந்த ஒன்று தான்.

பூமியைத் தாண்டி மக்கள் வாழ்வதற்கு ஏற்றக் கோளை ஆராய்ச்சியாளர்கள் பல காலமாகத் தேடி வருவது நாம் அறிந்த ஒன்று தான். செவ்வாயிலும் நிலவிலும் மனிதர்கள் வாழ்வதற்கான ஆராய்ச்சி மற்றும் ஏற்பாடு முயற்சிகளில் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நாசாவின் கெப்ளர் டெலஸ்கோப்பை வைத்து எடுத்த தகவல்களை கொண்டு கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுந்த புதிய வெளிக்கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

வுல்ப் 503பி

வுல்ப் 503பி

இந்த புதிய கோளிற்கு "வுல்ப் 503பி(wolf 503b)" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெளிக்கோள் கன்னி நட்சத்திர கூட்டத்திற்கு இடையில், பூமியில் இருந்து 145 ஒளிஆண்டுகள் தொலைவில் மற்ற வெளிக்கோள்களை விடப் பூமிக்கு அருகில் இருப்பதாக புதியதொரு தகவல் தெரியவந்துள்ளது.

"சூப்பர் எர்த்"

இந்த வெளிக்கோள் பூமியை விட இரு மடங்கு பெரியது என்பதால் இதை "சூப்பர் எர்த்" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம் கிரகத்திற்கும் அதன் முதன்மை நட்சத்திரமான சூரியனுக்கும் இருக்கும் தூரத்தை விட, மிக அருகில் வுல்ப் 503பி உள்ளது. முக்கியமாக இந்தக் கிரகம் சூரியனை விடத் தனது முதன்மை நட்சத்திரத்திற்கு 10 மடங்கு அருகில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியாளர் பிஜோர்ன் பென்னேக்

ஆராய்ச்சியாளர் பிஜோர்ன் பென்னேக்

அதன் முதன்மை நடச்சத்திரம் ஒரு ஆரஞ்சு ட்வார்ப் என்பதால் சூரியனை விட அதன் ஒளிர்வுத்தன்மை சிறிது குறைவு. இந்த வெளிக்கோள் அதன் முதன்மை நட்சரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அதில் விழும் வெளிச்சத்தைக் கொண்டு அந்தக் கோளை பற்றித் தெளிவாக ஆராய முடியும் என்று மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிஜோர்ன் பென்னேக் கூறியுள்ளார்.

முதன்மை நட்சத்திரத்திரம்

முதன்மை நட்சத்திரத்திரம்

நாசா அகச்சிவப்பு தொலைநோக்கியைக் கொண்டு சூப்பர் எர்த் இன் முதன்மை நட்சத்திரத்தைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்து விட்டனர். வுல்ப் 503பி பற்றி ஆராய்ந்து படிப்பதன் மூலம் அதற்கு அருகாமையில் உள்ள நமது மண்டலத்தைச் சேர்ந்த மற்ற வெளிக்கோள்களை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும் என்று பென்னேக்கின் மாணவன் மெரின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
New Exoplanet Twice The Size Of Earth Found : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X