நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை "உருக்கும்" புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

|

இதுவரையிலாக கதைகளில் மட்டுமே நாம் கேட்டு வந்த.. ஓவியங்களில் மட்டுமே நாம் பார்த்து வந்த - நரகம், நிஜத்தில் எப்படி இருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா?

அப்படி யோசிக்கும் போது, உங்களின் மனக்கண்ணிற்குள் தீப்பிடித்து எரியும் ஒரு உருண்டையான உலகம் (Fiery Planet) தெரிந்தது என்றால்.. கிட்டத்தட்ட நீங்கள் அதை கணித்து விட்டீர்கள் என்றே கூறலாம்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கிரகமானது, கிட்டத்தட்ட ஒரு நரகத்தை போலவே தான் இருக்கிறது!

நாம் கற்பனை செய்வது போல அது தீப்பிடித்து எரியவில்லை, ஆனால் அதைவிட மோசமாக உள்ளது!

அதென்ன கிரகம்? அதை நரகம் என்று சொல்லும் அளவிற்கு அங்கே அப்படி என்ன நடக்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!

"இங்கே" நாம் மட்டும் தான் இருக்கிறோமா?

பிரபஞ்சம் - அழகானது, அளக்க முடியாதது மற்றும் ஆபத்தானது! இருந்தாலும் கூட இது, கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் கற்பனையை ஈர்க்கிறது; ஆர்வத்தை தூண்டுகிறது!

குறிப்பாக, இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் நாம் மட்டும் தான் வாழ்கிறோமா? அல்லது நம்மை போலவே வேறு சில ஜீவராசிகளும் இங்கே உள்ளனவா? என்கிற யோசனையும், தேடலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது!

அந்த தேடலில் சிக்கிய ஒரு கிரகம்!

அந்த தேடலில் சிக்கிய ஒரு கிரகம்!

நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே ஏதேனும் உயிரினங்கள் வாழ்கிறதா என்கிற தேடல் தொடங்கப்பட்டு முழுமையாக ஒரு நூற்றாண்டை கூட நாம் கடக்கவில்லை.

ஆனாலும் கூட, இதுவரையிலாக நாம் பல புதிய கிரகங்களை கண்டுபிடித்து உள்ளோம். அந்த வரிசையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு கிரகம் தான் - ஜிஜே 1252 பி (GJ 1252 b)!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

தங்கத்தை உருக்கும் கிரகம்!

தங்கத்தை உருக்கும் கிரகம்!

பார்ப்பதற்கு பூமியை போன்ற ஒரு சாதாரணமான கிரகமாக தெரியும் ஜிஜே 1252 பி ஆனது, உண்மையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளை கொண்ட "ஒரு நரகம்" ஆகும்!

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஜிஜே 1252 பி கிரகத்தின் மேற்பரப்பானது மிகவும் வெப்பமாக இருக்கிறது. எந்த அளவிலான வெப்பம் என்றால் - அது தங்கத்தை உருக்கும் அளவிலான வெப்பநிலையை கொண்டுள்ளது!

எவ்வளவு டிகிரி செல்சியஸ் என்று கூறினால் நம்புவீர்களா?

எவ்வளவு டிகிரி செல்சியஸ் என்று கூறினால் நம்புவீர்களா?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றுப்படி, GJ 1252 b கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை ஆனது 1,228 டிகிரி செல்சியஸ் வரை செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை தங்கத்தை மட்டுமல்ல, வெள்ளி மற்றும் செம்பு ஆகியவைகளையும் உருக்குவதற்கு போதுமான ஒரு வெப்பநிலை ஆகும்.

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

இன்னொரு மோசமான விஷயம்.. இதன் பகல் பக்கம்!

இன்னொரு மோசமான விஷயம்.. இதன் பகல் பக்கம்!

பூமிக்கு எப்படி ஒரு சூரியன் இருக்கிறதோ, அதே போல GJ 1252 b கிரகத்திற்கும் சுட்டெரிக்கும் ஒரு நட்சத்திரம் உள்ளது. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் இந்த கிரகம் அந்த நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் உள்ளது.

ஆகையால் GJ 1252 b கிரகத்தின் ஒரு பக்கம் எப்போதுமே வெளிச்சமாக / வெப்பமாக இருக்கும்; ஆகையால் அது "பகல் பக்கம்" (Day Side) என்று அழைக்கப்படுகிறது.

உயிர்கள் வாழ சத்தியம் உள்ளதா?

உயிர்கள் வாழ சத்தியம் உள்ளதா?

ஜிஜே 1252 பி கிரகத்தின் பகல் பக்கமானது அதன் நட்சத்திரத்தை நிரந்தரமாக எதிர்கொள்வதே, அதன் கடினமான வெப்பநிலைக்கு முக்கிய காரணமாகும்!

மேலும் இந்த பாறைக் கிரகமானது (Rock Planet) மிகவும் சூடாக இருப்பதால், அங்கே வளிமண்டலம் இல்லாமல் இருக்கலாம் என்றும் வானியலாளர்கள் கருதுகின்றன. அதாவது அங்கே உயிர்கள் வாழ சத்தியமே இல்லை என்று அர்த்தம்!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

இது பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

இது பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

GJ 1252 b கிரகமானது கடந்த 2020 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட - பாறைகள் மிகுந்த, நிலப்பரப்பை கொண்ட - ஒரு எக்ஸோபிளான்ட் (Rocky, terrestrial exoplanet) ஆகும்.

இது பூமியை விட சற்றே பெரியது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நமது கிரகத்தை விட 1.18 மடங்கு பெரிய ஆரத்தை (Radius) கொண்டது.

இது பூமியிலிருந்து 65 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அறியாதோர்களுக்கு 1 ஒளியாண்டு என்றால் 9 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் (trillion km) ஆகும்!

Best Mobiles in India

English summary
New earth-like planet was discovered by scientists but it is very hot that can melt even gold

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X